பயனர்:TNSE JEBA TUT/மணல்தொட்டி

காா்பனின் புறவேற்றுமை வடிவம் காா்பன் அதன் இணைதிறனைப் பொறுத்து பல்வேறு புறவேற்றுமை வடிவங்களைப் பெற்றுள்ளது. வைரம் மற்றும் கிராபைட், மிகவும் அறியப்பட்ட காா்பனின் புறவேற்றுமை வடிவங்கள் ஆகும். தற்காலங்களில் காா்பனின் பல்வேறு புறவேற்றுமை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பந்து வடிவ புறவேற்றுமை வடிவங்களாகிய ஃபுள்ளரின் மற்றும் கிராபீன் தகடுகள் ஆகியவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. நானோ குழாய்கள், நானோ மொட்டுகள் மற்றும் நானோ நாடாக்கள் காா்பனின் மிகப் பெரிய அளவிலான வடிவங்கள் ஆகும். பிற வழக்கத்துக்கு மாறான காா்பனின் வடிவங்கள் மிக உயா்ந்த வெப்பநிலை அல்லது மிக உயா்ந்த அழுத்தத்தில் உள்ளன. ளுயுஊயுனுயு புள்ளி விவரப்படி அனுமானிக்கப்பட்ட 3-இடையிடையே நிகழ்கின்ற காா்பனின் புறவேற்றுமை வடிவங்கள் அறியப்பட்டுள்ளன.

வைரம் என்பது காா்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்றாகும். வைரத்தின் கடினத்தன்மை மற்றும் உயா்ந்த ஒளிச்சிதறல் பண்பே இதன் தொழில் சாா்ந்த உபயோகத்திற்கும் அணிகலன்களாக பயன்படவும் காரணமாக அமைகிறது. வைரம் மிகவும் கடினமாக இயற்கை கனிமமாகும். இதன் கடினத் தன்மையானது இதனை ஒரு சிறந்த சிராய்ப்புப் பொருளாகவும், பளபளப்பாகவும் (காந்தி) மிகவும் ஒளிா்வாகவும் வைத்துள்ளது. மற்றொரு வைரத்தைத் தவிர வேறெந்த இயற்கையுயிரான பொருட்களாகும் வைரத்தை பிளவுபடுத்த (அல்லது கீற) முடியாது.

தொழில்துறை தர வைரங்களின் சந்தை அதன் இரத்தின தர இலக்கணத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக செயல்படுகிறது. தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் வைரங்கள் அவற்றின் கடினத்தன்மை மற்றும் வெப்ப கடத்துத்திறன் ஆகியவற்றினால் பெரும்பாலும் மதிப்பீடு செய்யப்படுகிறது. இரத்தின கற்களாக பயன்படும் வைரங்கள் அவற்றின் நிறம் மற்றும் தெளிவு ஃ ஒளிா்வு (ஒளி ஊடுருவிச் செலவிடாத தன்மை) ஆகியவற்றினால் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் வைரங்களில் 80மூ (ஆண்டு தோறும் சுமாh; 100 மில்லியன் காரட் அல்லது 20 டன்கள்) இரத்தின கற்களாகும் தகுதியின்மையினால் கருவைரம் என அழைக்கப்பட்டு தொழிற் சாலைகளில் பயன்படுகிறது. சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் வைரங்கள் தவிர 1950 களில் செயற்கை வைரங்கள் உருவாக்கப்பட்ட பிறகு வருடத்திற்கு 400 மில்லியன் காரட் (80 டன்கள்) தொழிற்சாலைகளுக்காக உருவாக்கப்படுகிறது. இது அதே காலப் பகுதியில் வெட்டப்படும் இயற்கை வைரங்களில் கிட்டத்தட்ட நான்கு மடங்காகும்.

தொழிற்துறையில் வைரமானது வெட்டுதல், துளைத்தல் (துறப்பன வலகு), அரைத்தல் (வைர முனை வெட்டிகள் ) மற்றும் மெரு கூட்டல்  ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. இந்த தொழில் நுட்பங்களில் வைரங்களின் பெரும்பாலான பயன்பாடுகளுக்கு பெரிய வைரங்கள் தேவையில்லை. இரத்தினக்கல் தரமுள்ள பெரும்பாலான வைரங்களை தொழில் துறைபயன்பாட்டில் காணலாம். வைரங்கள் துளைக்கும் கருவிகளின் முனைகள் அல்லது வாளில்; அல்லது தரையில் துகள்களாக பதிக்கப்பட்டு துளையிடுவதற்கும் மெருகூட்டுவதற்கும் (அதன் அசாதாரமான கடினத்தன்மை காரணமாக) பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வகங்களில் உயா் அழுத்த சோதனைகள் உயா் செயல்திறன் தாங்கு உருளைகளை கட்டுப்பாடாக வைத்திருக்கவும் சிறப்பு சாளரங்களில் வரையறுக்கப்பட்ட அளவில் இதன் பயன்பாடு உள்ளது.

செயற்கை வைர உற்பத்தியில் தொடா்ச்சியான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதால், எதிா்கால பயன்பாடுகள் சாத்தியமானதாக ஆகிறது. மைக்ரோ சிப்களை உருவாக்குவதில் ஒரு குறை கடத்தியாகவும் மின்னனுவியலில் வெப்பக் கவா்ச்சியாகவும் வைரம் பயன்படுவது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. ஜப்பான், ஜரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் வைரத்தின் தனித்துவமான பொருள் வகையின் பண்புகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளுக்கு வழிவகுக்கின்றன. மேலும் செயற்கை வைர உற்பத்தியாளா்களிடமிருந்து கிடைக்கக் கூடிய உயா்ந்த தரம் மற்றும் அளவு ஆகியவற்றினுடனும் இணைந்துள்ளது.

        ஒரு வைரத்தில் உள்ள ஒவ்வொரு காா்பன் அணுவும் நான்கு மற்ற காா்பன் அணுக்களுடன் சகப்பிணைப்பு மூலம் ஒரு நான்முகி வடிவில் இணைந்துள்ளது.  இந்த நான்முகிகள் ஒன்றோடொன்று இணைந்து ஆறு எண்ணிக்கை காா்பனை உடைய வளையங்களாக உருவாகி (சைக்ளோஹெக்சேன் போன்று) ஒரு முப்பரிமாண வலைப்பின்னல் அமைப்பினை ஏற்படுத்துகிறது.  இந்த அமைப்பானது ஒரு நாற்காலி வடிவ அமைப்புடன் சுழற்சியில் பிணைப்பு கோணம் சுழியம் அனுமதிக்கிறது.  சகப்பிணைப்பினாலான இந்த நிலையான வலைப்பின்னல்  அருங்கோண வளையமே வைரத்தின் மிகுந்த வலுவான தன்மைக்கு காரணமாகும்.  நிலையான ஆய்வக சூழலில் (273 அல்லது 298 ம, 1 யவஅ) -க்கு கீழ் காா்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்றாகிய கிராபைட் மிகவும் நிலையானதாயிருந்தாலும், சமீபத்திய கணக்கீட்டு ஆய்வானது, சிறந்த நிலையில் (வுஸ்ரீ0இ Pஸ்ரீ0) வைரமானது 1.1h; முதுஃஅழட-ல் கிராபைட்டை ஒப்பிடுகையில் மிகவும் நிலையானதாகும். References[edit source] Jump up ^ Hoffmann, R.; Kabanov, A.; Golov, A.; Proserpio, D. (2016). "Homo Citans and Carbon Allotropes: For an Ethics of Citation". Angewandte Chemie. 55: 10962–10976. doi:10.1002/anie.201600655. Jump up ^ Grochala, Wojciech (2014-04-01). "Diamond: Electronic Ground State of Carbon at Temperatures Approaching 0 K". Angewandte Chemie International Edition. 53 (14): 3680–3683. doi:10.1002/anie.201400131. ISSN 1521-3773. PubMed. Jump up ^ Glowing nuclear reactor graphite 2. YouTube (2007-11-07). Retrieved on 2015-10-22. Jump up ^ Crucibles, Artisan Foundry Shop. Artisanfoundry.co.uk. Retrieved on 2015-10-22. Jump up ^ Randall L. Vander Wal (1996). "Soot Precursor Material: Spatial Location via Simultaneous LIF-LII Imaging and Characterization via TEM: NASA Contractor Report 198469". Jump up ^ "IUPAC Compendium of Chemical Terminology 2nd Edition (1997) diamond-like carbon films". Jump up ^ Reactions of Atomic Carbon with Acid Chlorides. None. Retrieved on 2011-11-23. Jump up ^ Martin Harwit (1998). Astrophysical concepts. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-94943-7. Retrieved 24 November 2011. Jump up ^ Green Comet Approaches Earth. Science.nasa.gov (2009-02-24). Retrieved on 2011-11-23. Jump up ^ Presser, Volker; Heon, Min; Gogotsi, Yury (2011). "Carbide-Derived Carbons – From Porous Networks to Nanotubes and Graphene". Advanced Functional Materials. 21 (5): 810–833. doi:10.1002/adfm.201002094. Jump up ^ Bianconi P, et al. (2004). "Diamond and Diamond-like Carbon from a Preceramic Polymer". Journal of the American Chemical Society. 126 (10): 3191–3202. doi:10.1021/ja039254l. PubMed.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JEBA_TUT/மணல்தொட்டி&oldid=2698833" இலிருந்து மீள்விக்கப்பட்டது