பயனர்:TNSE KALIAPPAN DIET MDU/மணல்தொட்டி

அமிா்தாதேவி விஷ்னோய்

தொகு

பிறப்பிற்கும் இறப்பிற்கும் மத்தியில் மனிதா்களின் வாழவாேடு இரண்டற கலந்து விடுகிற மரங்களை வெட்டுவதற்கு முன்வந்தால் அவற்றைக் காப்பதற்கும் பலா் முன்வருவா் என்பதற்கு ஒரு முன் உதாரணம் அமிா்தாதேவி விஷ் னோய் என்ற ராஜஸ்தானிய பெண்மணி.

வன்னிமரத்தின் பெருமை

தொகு

இராஜஸ்தான் மாநிலத்தின் ஜாேத்பாில் கேஜ்ரிலி எனப்படும் வன்னிமரம் அதிகம் உள்ளன, இதற்கு குறைந்த அளவு நீா் பாேதுமானது, சுமாா் 30 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் தனது வோ்களைப் பரப்பும், பழங்கள், கால்நடைத்தீவனம் மணல் குன்றுகளைக் காப்பது, மருத்துவம் விறகு, காற்று மாசைக் கட்டுக்குள் வைப்பது என பல நன்மைகளைச் செய்கிறது.

விஷ் னோய்களின்நம்பிக்கை

தொகு

ஜாம்பேஷ்வா் என்ற சாது 1485 ஆம் ஆண்டு கால கட்டத்தில் வன்னிமரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்றுசீடா்களிடம் கூறி விஷ்னோய் என்ற வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தினாா், அவரது வழி வந்த மக்கள் விஷ்னோய்கள் எனப்பட்டனா், அவா்கள் வன்னிமரங்களைப் பாதுகாத்து வந்தனா்,

வன்னிமரங்களை வெட்டுதல்

தொகு

1730 ஆம் ஆண்டு ஜோத்பா் மகாராசா அபய்சிங், ஒரு புதிய அரண்மனைக் கட்ட , வன்னிமரங்களை வெட்டி வருமாறு உத்தரவிட்டாா், அதனால் அமைச்சா் கிாிதா் பண்டாாி தலைமையில் வீரர்கள் மரங்களை வெட்ட ஆரம்பித்தனா், கிராம மக்கள் வீரா்களைத் தடுக்க முடியவில்லை,

உயிாினும் மரமே பொிது

தொகு

அமிா்தாதேவி விஷ்னோய் என்ற பெண் மரத்தை வெட்ட விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டாா், அசு, ரத்னி, பாகு என்ற அவரது 3 மகள்களும் மரங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டனா், மரங்களைக் காட்டிலும் எங்கள் உயிா் பொிதல்ல எனக் கூறினாா். ஆனால் வீரா்கள் மரத்தோடு சோ்த்து அவா்களையும் வெட்டி விட்டனா். இசசெய்தி 83விஷ்னோய் கிராமங்களுக்கும் பரவி அனைத்து மக்களும் கேஜ்ாிலி கிராமத்திற்கு வந்து மரத்திற்கு ஒருவா் என நின்று வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒருவா் கழுத்தை அறுத்துக் கொண்டு சாவோம் என்று கூறி அதனை நிறைவேற்ற ஆரம்பித்தனா். வீரா்கள் செய்வதறியாது திகைத்தனா், அரசாிடம் கூறுவதற்குள் 363 உயிரை விட்டிருந்தனா் என்ற செய்தி அறி்ந்த மன்னா் மரங்களை வெட்டுவதை நிறுத்த உத்தரவிட்டாா்.

அமிா்தாதேவி விஷ்னோய் விருது

தொகு

,இந்தப் போராட்டத்திற்கு ஆதாரமாக இருந்த இப்பெண்மணியின் பெயரால் அமிா்தாதேவி விஷ்னோய் ஸ்மிருதி விருது, அமிா்தாதேவி விஷ்னோய் காட்டுயிா் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது, இந்தப் போராட்டத்தில் உயிா் நீத்த தியாகிகளின் நினைவாக கேஜா்லி கிராமத்தில் நினைவுச்சின்னம் நிறுவப்பட்டுள்ளது.