பயனர்:TNSE KNRKAVINPAZHANI KRR/மணல்தொட்டி உருவாக்கம் 4

மருத்துவப் பழமாெழிகள்

  1. அளவுக்கு மி்ஞ்சினால் அமுதமும் நஞ்சு
  2. அரசமரத்தைச் சுற்றி அடி வயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்
  3. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக
  4. அஞ்சிபுலன் அடக்கினால் அகிலமும் அடங்கும்
  5. ஆவாரை பூத்தால் சாவாரைக் கண்டதுண்டா.
  6. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
  7. ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
  8. உடம்பை முறித்துக் கடம்பில் போடு.
  9. ஓாிதழ்தாமரை உண்ணப் பலனுண்டாம்.
  10. காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய்.
  11. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்பிரமணியரக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை.
  12. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
  13. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
  14. பொன்னாங்கண்ணி மேனியைப் பொன்னாக்கும்.
  15. மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  16. மாதா ஊட்டாததை மா ஊட்டிவிடும்.
  17. மருந்து கால் மதி முக்கால்
  18. மருத்துவன் மருந்து கொடுக்கிறான் குணமாக்குபவன் இறைவனே.
  19. முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்.
  20. முருங்கைக் காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்.
  21. மூலிகை அரைத்தால் மூன்று உலகையும் ஆளலாம்.
  22. வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்.
  23. வாழை வாழ வைக்கும்.
  24. வெங்காயம் உண்பார்க்குத் தன்காயம் பழுதில்லை.
  25. ஆடுதாெடா இலைக்கும் ஐந்து மிளகிற்கும் பாடாத நாவும் பாடும்.

'சான்றுகள்

  1. மு.பசுமலையரசு, புலவர் "செந்தமிழும் சித்த மருத்துவமும்" சீதை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 2006.
  2. பிருத்விராஜ் வர்மா ப. " தமிழ் நாட்டு மூலிகை மருத்துவம்" சுராபுக்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை - 2004
  3. ஆய்வு மாலை, ஓளவைத் தமிழ் ஆய்வு மாநாடு, திருவையாறு.