பயனர்:TNSE LATHA DIETCHN/மணல்தொட்டி

பதிப்புரை கி.மு. 700களில் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டியின் நோக்கம் உன்னதமானது. ஆம் போருக்கு எதிராக தொடங்கப்பட்டது தான் இந்த ஒலிம்பிக் திருவிழா. புராதன ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில் நடத்தப்பட்டன என்று தெரிகிறது. துவக்கத்தில் கிரேக்கர்கள் மட்டும் பங்கெடுத்தனர். ஓட்டப்பந்தயத்தில் தொடங்கி படிப்படியாக பல விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. விளையாட்டு பயிற்சிகள் உடல்நலம் மற்றும் மனநலத்தை வளர்க்கும் என கருதப்பட்டது. பெண்கள் ஒரு கட்டத்தில் தான் அனுமதிக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்க்கு தங்கத்திற்கு பதில் ஆலிவ் இலை கிரீடம் வழங்கப்பட்டது. அவருக்கு சிலையும் அமைக்கப்பட்டது. போட்டிகள் நடக்கும் போது யுத்தம் எதுவும் நடக்காது.

புராதன ஒலிம்பிக் போட்டிகள் கி.மு. 776இல் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடைபெற்றது. கல்வெட்டுகளை ஆராய்ந்ததில் கி.மு. 776இல் முதல் போட்டி நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவீன ஒலிம்பிக் போட்டிகளை துவங்கி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கவ்பெர்ட்டின் என்பார் தொடர்ந்து தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றார். முதல் போட்டி 1896இல் ஏதென்ஸில் நடைபெற்றது என்றும் அதில் 13 நாடுகளைச் சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்றனர் என்று நுல் தெரிவிக்கிறது. இதில் தான் தங்கப்பதக்கம் முதன்முதலாக வழங்கப்பட்டதாம்.

1900 முதல் 1912 வரை மீண்டும் 1920 முதல் 2016 வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய விவரங்கள்,

  • நடந்த ஊர்,
  • கலந்து கொண்ட நாடுகள்,
  • இடம்பெற்ற விளையாட்டுகள்
  • கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கை

இக்கட்டுரையில் அளிக்கப்பட்டுள்ளன. முதலாவது மற்றும் இரண்டாவது உலக யுத்தங்களின் போது போட்டிகள் நடத்த முடியாது போனது இயல்பே.

வரலாறு படைக்கும் விளையாட்டு ஒரு விளையாட்டு வீரருக்கு தன் வாழ்நாள் லட்சியமாக இருப்பது நிச்சயமாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதாகத்தான் இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் வியக்க வைப்பவை. ஆம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம். அதுவும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான அனுமதி பெற வேண்டும்.போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்ட நாடு எட்டு ஆண்டுகள் அதற்கான வேலைகளில் ஈடுபடும். உலக நாடுகளிடையே சமாதானமும், நட்புறவும் வலுப்பெற இந்த போட்டிகள் உதவியாக இருக்கின்றன. இத்தகைய உயரிய லட்சியத்துடன் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றை மேலும் அறிந்து கொள்ள இக்கட்டுரை உதவியாக இருக்கும்.

புராதன ஒலிம்பிக்ஸ்

மத்திய தரைக்கடலில் பால்கின் நாடுகளுக்கு கீழே அமைந்திருக்கிறது கிரீஸ் தீவு. ஒரு காலத்தில் கிரேக்கம் என்று அழைக்கப்பட்ட இந்த தீவு உலகின் மிகப்பெரிய பேரரசாக திகழ்ந்தது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என பல்வேறு பகுதிகளிலும் இந்த பேரரசின் எல்லை பரவிக்கிடந்தது. கிரீஸ் தீவின் தன்மைக்கு மாறாக ஒலிம்பிஸ் என்ற மலைக்குன்று பசுமை நிறைந்ததாக இருந்தது. அந்த மலையில் இருந்து தான் கிரேக்க கடவுள்கள் உலகை ஆட்சி செய்வதாக கிரேக்கர்கள் நம்பினர். எனவே அந்த மலையின் அடிவாரத்தில் ஒலிம்பியா என்ற கிராமத்தை அமைத்தனர்.ஒலிம்பியா கிராமம் மரங்களும், பசுமையான சமவெளிகளும் நிறைந்து செழிப்பான பிரதேசமாக இருந்தது. 1896ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவீன ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஏதென்ஸில் பனாதெனாய்க் ஸ்டேடியத்தில் நடைபெற்றன. இதில்ல 13 நாடுகளை சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்றனர்.

1900- பாரீஸ் ஒலிம்பிக்ஸ் (பிரான்ஸ்)

  • இரண்டாவது ஒலிம்பிக்ஸில் கூடுதலான தடகள வீரர்கள் கலந்து கொண்டனர்.
  • இரண்டாவது நவீன ஒலிம்பிக்ஸில் தான் பெண்கள் முதன் முதலில் விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
  • 19 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 1066 விளையாட்டு வீரர்கள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றனர்.

1904- செயின்ட் லுயிஸ் (அமெரிக்கா)

  • மூன்றாவது ஒலிம்பிக் கோட்டியில் 12 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
  • இந்த ஒலிம்பிக்ஸில்தான் குத்துச் சண்டை விளையாட்டு முதன் முதலாக சேர்க்கப்பட்டது.

1906- ஏதென்ஸ் (கிரீஸ்)

  • இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதன்முதலாக அமெரிக்கா தனது அரசு சார்பில்ல விளையாட்டு வீரர்களை பங்கேற்க அனுமதி அளித்தது.
  • அரசு முறை சீருடை அணிந்த வீரர்கள் முதன்முதலாக இந்த ஒலிம்பிக்கில் தான் பங்கேற்றனர்.
  • இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 887 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர்.

1908- லண்டன் (இங்கிலாந்து)

  • இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் மராத்தான் போட்டியின் மிகச் சரியான துரம் 26மைல் மற்றும் 385கெஜம் என்று முடிவெடுக்கப்பட்டது.
  • டைவிங் போட்டி முதன் முறையாக இந்த ஒலிம்பிக்கில் தான் சேர்க்கப்பட்டது.
  • 22 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரம் வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

1912- ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்)

  • ஸ்வீடிஸ் மாஸ்டர்பீஸ் என்று இந்த ஒலிம்பிக்ஸை அழைக்கின்றார்கள்.அந்த அளவுக்கு சிறப்பான முறையில் இந்த ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது.
  • முதன்முறையாக எலெக்ட்ரிக் டைமிங் முறை உபயோகத்தில் வந்தது.
  • முதன்முறையாக பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 28 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்து ஐநுறு போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

1916- போட்டிகள் நடத்தப்படவில்லை

1920- ஆண்ட்லெர்ப் (பெல்ஜியம்)

  • போர்கள் நிறுத்தப்பட்டு உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் ஒலிம்பிக் போட்டிகள்.
  • இந்த ஒலிம்பிக்ஸில் தான் முதன்முதலாக ஒலிம்பிக்ஸிற்கான அதிகாரப்பூர்வ கொடி பறக்கவிடப்பட்டது.
  • இப்போட்டியில் 29 நாடுகளைச் சார்ந்த 2500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

1924- பாரீஸ் (பிரான்ஸ்)

  • மொத்தம் 44 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரம் போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

1928- ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து)

  • இந்த ஒலிம்பிக்ஸில் தான் முதன்முதலாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
  • பெண்களுக்கான டிராக் மற்றும் கள விளையாட்டுகளும், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளும் இதில் தான் இடம்பெற்றன.
  • 46 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரம் தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

1932- லாஸ்ஏஞ்சலிஸ் (அமெரிக்கா)

  • இந்த ஒலிம்பிக்ஸில் தான் முதன்முறையாக போட்டோஃபுனிஷ் கேமராக்களும், வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிமேடையும் இடம்பெற்றன.
  • 37 நாடுகள் இதில் பங்கேற்றன மற்றும் 1300 தடகள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

1936- பெர்லின் (ஜெர்மனி)

  • 49 நாடுகள் சார்பில் நான்காயிரம் தடகளவீரர்கள் கலந்து கொண்டனர்.

1940- போட்டிகள் நடைபெறவில்லை 1940ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் ஜப்பான் ஆசியாவின் பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது.இந்நிலையில் டோக்கியோவில் நடத்த திட்டமிட்டிருந்த ஒலிம்பிக்ஸை பின்லாந்து தலைநகரில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டன. ஆனால் 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் மூண்டுவிட்டது. எனவே இந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

1944-போட்டிகள் நடைபெறவில்லை இரண்டாம் உலகயுத்தம் ஐரோப்பாவில் மட்டுமின்றி ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் யுத்த வெறி உலகின் பெரும் பகுதியை ரத்தசகதியாக மாற்றி இருந்தது. இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_LATHA_DIETCHN/மணல்தொட்டி&oldid=2380827" இலிருந்து மீள்விக்கப்பட்டது