பயனர்:TNSE MAGESWARI VPM/மணல்தொட்டி

'''''பாரதப் பண்பாடு'' '

       பாரத நாடு பழம்பெரும்  நாடு-நீரதன்
       புதல்வர்  இந்நினை வகற்றாதீர்'
     என்றார்  பாரதியார். ஆம்  நாம்  பாரதத்தாயின் புதல்வர்கள் என்றெண்ணும்போது நம்மை அறியாமலேயே நமக்கொரு பெருமிதம் தோன்றுகிறது.

அதற்கு காரணம் உலகம் போற்றும் நமது பண்பாடேயாகும்.

பண்பாடும் பழமையும்

இயற்கையோடு ஒன்றி இயைந்து வாழும் மக்களின் வாழ்க்கை முறை என்னும் மரத்தில் பழுக்கும் கனியே பண்பாடு ஆகும். இப்பண்பாடு ஓரிரு தலைமுறைகளில் தோன்றி வருவது அன்று.வழிவழியாக வளர்ந்து வளம் பெருவது ஆகும்.

நாகரிகச் சிறப்பு

பிறநாட்டு மாந்தரெல்லாம் நாகரிகம் இன்னதென அறியாது வாழ்ந்த காலத்தில் பாரதநாடு கலைஞானமும் மெய்ஞ்ஞானமும் பெற்று மிளிர்ந்தது. வட இந்தியாவில் உள்ள மொகஞ்சாதாரோ ஹராப்பா போன்ற இடங்களில் கிடைத்த நாகரிக சான்றுகளும் தென்னகத்து ஆதிச்சநல்லூர் புதைபொருட்களும் நம் பண்பாட்டுக்கு சான்று பகர்வனவாகும்.

முடிவுரை

துணைக்கண்டம் எனப் போற்றப்படும் பாரத மணித்திருநாடு பல்வேறு மொழி இன சமய வேறுபாடுகளுடன் விளங்கினும் அடிப்படை கருத்துக்களைத் துருவி ஆயுங்கால் அனைத்தும் பாரதப் பண்பாடாய் பொலிவதை காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MAGESWARI_VPM/மணல்தொட்டி&oldid=2312847" இலிருந்து மீள்விக்கப்பட்டது