பயனர்:TNSE MERCY SVG/மணல்தொட்டி

நொங்கு:

வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வாரி வழங்குகிறது நொங்கு.

நொங்கு எனப்படும் பனங்காயில் வைட்டமின் B, C, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நொங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் நொங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

நொங்கு நீர் வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நொங்கு மருந்தாக இருப்பது அதிசயம் நொங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நொங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.

ரத்தசோகை உள்ளவர்கள் நொங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நொங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

மேற்கோள்: www.valaitamil.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MERCY_SVG/மணல்தொட்டி&oldid=2281391" இலிருந்து மீள்விக்கப்பட்டது