பயனர்:TNSE MURUGAJOTHI VNR/மணல்தொட்டி
எதிர்க்கோட்டை விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி வட்டத்தில் வெம்பக்கோட்டைக்கு அருகில் உள்ளது.இவ்வூர் கல்வெட்டுகளில் வெண்பைக்குடி நாட்டுக் கூத்தன் குடியாகக் குறிக்கப்பட்டுள்ளது.இவ்வூரில் உள்ள குன்றில் காணப்படும் கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர் கால சிவாலயத்திறைவன் வெண்பைக்குடி நாட்டுக் கூத்தன் குடிப்பாற் சுனைக்குடிப் படாரர் என்று குறிக்கப்பட்டுள்ளது. கூத்தன்குடியாகிய எதிர்க்கோட்டையின் ஒரு பகுதியாக சுனைக்குடி என்ற உள்கிராமம் இருந்ததை உணர முடிகிறது.இச்சிவாலயம் அமைந்துள்ள குன்றில் காணப்படும் இயற்கையாக உருவாகி வரும் சுனையின் காரணமாகவே சுனைக்குடி என்ற பெயர் இக்கோயில் அமைந்துள்ள பகுதிக்கு ஏற்பட்டுள்ளதாகக் கருதலாம். சுனைக்குடி என்ற பெயர் இப்பகுதிக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக வழந்கி வருவதையும் கல்வெட்டு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வூர் இப்பகுதியில் மிகச் சிறந்த வணிக மையமாகத் திகழ்ந்துள்ளதை கல்வெட்டு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வணிக நகரத்தார் இவ்வூர் பெருமாள் கோயிலுக்கு இறையிலியாக நிலம் வழங்கிய செய்தியும் கல்வெட்டில் காணப்படுகிறது.இங்கு முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சைவ,வைணவ ஆலயங்கள் உள்ளன்.மிகுதியாக பருத்தி விளையக்கூடிய இப்பகுதியில் பத்தாம் நூற்றாண்டிலேயே துணி வணிகர்கள் இருந்துள்ளன்ர். [1] [2]