பயனர்:TNSE MUTHUKRISHNAN DIET ERD/மணல்தொட்டி
தேசிய அறிவியல் வாரம் என்பது ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட வாரங்களில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். விஞ்ஞானம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் மக்களை ஈடுபடுத்தி ஊக்குவிப்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வது அறிவியல் வாரங்களின் நோக்கம் ஆகும்.
உலக நாடுகளில் அறிவியல் வாரம்
தொகுஇந்தியா
தொகுஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய அறிவியல் வாரம் கொண்டாடப்படுகிறது. தேசிய அறிவியல் நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் இராமன் விளைவைக் கண்டறிந்ததன் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
ஆஸ்திரேலியா
தொகுஆஸ்திரேலியாவிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய அறிவியல் வாரம் கொண்டாடப்படுகிறது. இது அனைத்து ஆஸ்திரேலிய மக்களும் விஞ்ஞானத்தை வெளிப்படுத்தி, விஞ்ஞானத்தில் தொடர்ச்சியான ஆய்வைக் கருத்தில் கொள்வதற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகளையும் செயல்களையும் பங்கேற்க வாய்ப்பளிக்கும் ஒரு நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.[1]
ஐக்கிய ராஜ்ஜியம்
தொகுதேசிய அறிவியல்வாரம் 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக நடைபெற்றது. தற்போது தேசிய அறிவியல் மற்றும் பொறியியலாளர் வாரம் என அறியப்படுகிறது. இது விஞ்ஞானத்தின் மிகப்பெரிய தேசிய விழாக்களில் ஒன்றாகும். ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தேசிய அறிவியல் வாரம் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தொகுஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரதான முயற்சிகளில் ஒன்று தேசிய அறிவியல் வாரம் ஆகும். இதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
பிற நாடுகள்
தொகுநார்வேயில் தேசிய அறிவியல் வாரம் ஆராய்ச்சி நாட்கள் என்றும் கனடாவில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரம் என்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சங்க அளவிலான அறிவியல் வாரங்கள் என்றும் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Women in STEM Wikibomb". National Science Week (Australia). பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.