பயனர்:TNSE PPS KRR/மணல்தொட்டி

புகழிமலை முருகன் கோவில் தொகு

புகழிமலை முருகன் கோவில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .

வரலாற்று சிறப்பு தொகு

திரு.லூயிஸ் மூர்.ஐ.சி.எஸ். என்ற ஆங்கிலேயர் 1878 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்ட மூலக்குறிப்பில் புகழிமலை (புகழூர்) சிறப்பினை எழுதியுள்ளார் .

தனி சிறப்பு தொகு

கி.பி முதல் நூற்றாண்டையொட்டி கொங்கயாபன் என்ற சமண முனிவர் வாழ்ந்துவந்ததாகவும், இவர் யாறூரைச் சேர்ந்தவர் என்றும், இயற்கையாய் அமைந்த குகையில் தங்கி நோன்பு இருந்தார் என்றும் , இவருக்கு வசதியாக இக்குகை தலத்தில் படுக்கை அமைத்து கொடுத்தான் சேர மன்னன் இளங்கடுங்கோ என்றும் இப்பகுதி சுற்று வட்டார மக்களால் நம்பப்படுகிறது

தலசிறப்பு தொகு

பாலசுப்ரமணிய சுவாமியை கிழக்கு பார்த்து நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒரு கையில் வேலும் மறு கையில் சேவல் கொடியும் நின்ற நிலையுலும் பின்புறம் அவரது மயில் வாகனம் வலப்புறம் தோகை விரித்து இடப்புறம் வழியாக திரும்பி சுவாமியின் முகத்தை தரிசனம் செய்த நிலையில் தோற்றமளிக்கிறது.

இதர சிறப்பு தொகு

புகழூர் அருகில் காவேரி ஆற்றங்கரையின் தென் பகுதியில் உள்ள வேட்டமங்கலம் , புகழியூர் ,தோட்டக்குச்சிறி , கடம்பன்குச்சிறி, வாங்கல் ,நெரூர் ஆகிய ஆறு கிராமங்களுக்கு புகழிமலை முருகன் அருள் புரிந்தைமையால் ஆறு நாட்டார் மலை என்ற சிறப்பினை பெற்றதாக கருதப்படுகிறது.

உற்சவங்கள் தொகு

வைகாசி விசாகம் , ஆனி மூலம் ,திருக் கார்த்திகை தீபத் திருவிழா , கந்த சஷ்டி ,பங்குனி உத்திரம்

நடை திறக்கும் நேரம் தொகு

 காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை 
 மலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை 

பூசை காலங்கள் தொகு

இரண்டு கால பூசைகள் நடைபெற்று வருகிறது.

  1. உச்சி காலம் 12 மணி
  2. சாய ரட்சை 6 மணி

திருவிழா தொகு

தைப்பூச திருத்தேர் திருவிழா நடைபெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PPS_KRR/மணல்தொட்டி&oldid=2313269" இலிருந்து மீள்விக்கப்பட்டது