பயனர்:TNSE RAJAMANICKAM PDK/மணல்தொட்டி
தமிழர்களின் தந்தை
ஈ.வெ.ரா. பெரியார்
தொகுதன் வாழ்நாட்களின் பிற்பகுதியை இந்தி எதிர்ப்பிற்காகக் கழித்தவர். ஆனால் ஒரு முரண் என்னத்தெரியுமா..? அவர் தொடக்கத்தில் தன் சொந்த செலவில் இந்திக்கென்று பள்ளி நடத்தியவர் அவர். 1922 ஆம் ஆண்டு அவரது வீட்டிற்கு டாக்டர் அன்சாரி, விட்டல்பாய் படேல், பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்க்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வந்து சென்றதற்கு ஞாபகார்த்தமாக ஒரு பதிய காரியம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த பெரியார் இந்தியை இன்றுமுதல் சில பிள்ளைகளுக்கு தன் சொந்தச் செலவிலேயே கற்றுக்கொடுக்கலாம் என முடிவு எடுத்தார். அதன்படி முப்பது பேர்கள் கொண்ட பள்ளியைத் தொடங்கி பதினைந்து ஆசிரியர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இரண்டு ஆசிரியர்களை நியமித்தார். பதினைந்து மாணவர்களின் தங்கும் மற்றும் உணவு செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. மற்றக் குழந்தைகளுக்கான செலவு இவருடையது. அவரது தகப்பனார் சமாதிக்கு அருகாமையிலுள்ள கட்டிடமே பள்ளிக்கூடமாகச் செயல்பட்டது. பாடம் ஆறுமாதம் நடத்தப்பட்டிருந்தது. குழந்தைகள் இந்தியின் வழியில் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தொடங்கினார். அவர்கள் இந்தியில் வேதங்களைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்பள்ளியை அத்துடன் நிறுத்தியிருந்தார். ஓரளவு இந்திப்படித்த மாணவர்களைக் கொண்டு இந்தியில் எதிர்ப்பு தெரிவிக்க வைத்தார். ‘ உங்கள் வடநாட்டு இந்தி, எங்கள் திராவிட நாட்டிற்கு தேவை இல்லை’
தமிழ்நாட்டில் எப்பொழுதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் பெரியாரின் பெயர் தவறாமல் அடிபடும். ஒரு முறை பெரியாரிடம் கேட்டார்கள் ‘ நீங்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள். ஆங்கிலத்தை ஈர்க்கிறீர்கள்....’என்று. பெரியார் சொன்னார் ‘ இந்தியில் திதி, திவசம், கன்னியாதானம், கருமாதி, பூசுரர் - வான்சுரர், மோட்சலோகம் - நரகலோகம், பிராமணன் - சூத்திரன், தேவதாசி,..போன்ற சொற்கள் இருக்கின்றன. அதனால் அதை எதிர்க்கிறேன். இத்தகைய சொற்கள் இல்லாத ஆங்கிலத்தை விரும்பி ஈர்க்கிறேன்...’