பயனர்:TNSE RAMANII DIET DGL/மணல்தொட்டி

சங்ககால நகரங்களில் மதுரையின் பெருமை = தொகு

மதுரை : தொகு

இந்தியாவின் தமிழ்நாட்டில் மிகப்பெரிய நகரங்களில் மிக முக்கியமான நகரம் மதுரை ஆகும் .தமிழர்க்கு உரிமை படைத்த நகரம் என்று மதுரை அழைக்கப்படுகிறது .

மதுரை நகரின் பெயர்க்காரணம் தொகு

மதுரை என்பதற்கு "கூடல்" என்று சங்க இலக்கியங்களில் பெயர் வழங்கப்பட்டுள்ளது .தமிழ் சங்கம் குறித்து மன்னரும் ,புலவரும், மக்களும் கூடும் இடம் ஆகயால் "கூடல்" என்றும் வழங்கப்பட்டுள்ளது .மருத மரம் மிகுந்த ஊர் என்பதால் "மருதை "என்றாகி மதுரையாகிற்று .

மதுரைக்குப் பெருமை வைகை : தொகு

முதற் சங்கம் மதுரை குமாரி நகரிக்கத்தால் வளர்ந்தது போலக் கடை சங்கம் ஆற்றங்கரை நா கரிக்கத்தால் வளர்ந்தது . "வைகை தன் நீர் முற்றி மதில் பெரரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்றொன்றதியராற் புரிசை " என கலித்தொகை (67) ல் சொல்லப்பட்டுள்ளது .

.குதிரைமுகம், யானை முகம், சிங்கமுகம் ,உடைய ஓடங்கள் வைகையில் கரைக்கடக்கப் பயன்ப்பட்டனவாம். 

மதுரை நகரமைப்பு; தொகு

வடபுறம் வைகை பாதுகாப்பு நல்க, பிற புறங்களில் அகழி சூழ்ந்திருக்க ,கோட்டை நடுவில் தாமரைப் பூப்போன்ற வடிவத்தில் மதுரை நகரம் அம்மைந்த சிறப்புமிக்கதாம்.இன்று இந்நகரம் "தூங்கா நகரம்" என்று அழைக்கப்படுகிறது .

மதுரையும் தமிழும் : தொகு

குமரிவரை (மலை) யில் பிறந்த தமிழ் இமயம் வரையில் புகழ் பரப்ப மதுரைத் தமிழ்ச் சங்கமே முன்னிலைவகித்தது .

மதுரையைப் பற்றி அறிந்து கொள்ளும் நூல்கள் : தொகு

↣ மதுரைக்காஞ்சி ↣ பரிபாடல் ↣ நெடுநல்வாடை ↣ சிலப்பதிகாரம் ↣திருவிளையாடற் புராணம் ↣ ஆலாசிய மான்மியமும் உணர்த்துகிறது .

[1].

  1. மேற்கோள் நூல்கள் : "தமிழ்நாட்டு வரலாறு" , ஆசிரியர் .பா .இறையரசன் 118,119,120