பயனர்:TNSE SALOMI TRY/மணல்தொட்டி

 அ.சலோமி , திருச்சிராப் பள்ளி மாவட்டம் , அந்தநல்லுர் ஒன்றியம் , திருவரங்கம் நகராட்சி தேவி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகின்றேன் . எனது பணி அனுபவம் 29 ஆண்டுகள் 

ஆசிரியப் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்ற பொன்மொழிகள் பொய்த்துப் போன கால கட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் நவீன வகுப்பறை (smart class) பற்றி நன்றாகத் தெரியும் எனினும் அந்தநாள் ஞாபகம் பசுமரத்தாணி போல நீங்காமல் உள்ளது ஊர் தேவாலயங்கள், சிலரது திண்ணைகள் பள்ளிகளாய் இருந்து எண்ணும் எழுத்தும் சொல்லித் தந்த ஆசான்கள் எந்தவிதமான வரையைரகளோ , பாடத்திட்டமோ கால அட்டவைணயோ இன்றி ஆரம்பக் கல்வியை அள்ளி அள்ளி வழங்கினர். கூடவே காலந்தவறாமை, ஒழுங்கு ஒத்துப்போதல்,சுகாதாரம், மரியாதை, சகிப்புத் தன்மை ,எளிதில் தன்னிறைவு காணுதல் போன்ற நன்னெறிகள் தெளிந்த நீரோடையாய் மாணவர் உள்ளத்தில் ஊற்றெடுத்தது. ஆசிரியருக்கும் மாணவருக்குமான தொடர்பு சாக்ரடீஸ்-அரிஸ்டாடடில்-பிளேட்டோ போனறவர்களைப் போலவும் பாரதி -பாரதி தாசன் -சுரதா போனறவர்களைப் போலவும் இருந்தது. ஆனால் இப்போது ???????!!!!!!!

                 கணினி வழிக் கல்வி இணையக் கல்வி , தொழிலட நுட்பக் கல்வி என்று வகைகள் வேறுபட்டும் அதிகரித்துக் கொண்டு வந்தாலும் மனித ஐம்புலன்களும் ஆறாம் அறிவும்  பெற்றுள்ளனர். நன்னெறியை எந்த விதமான கணினியும் சொல்லித் தந்துவிட முடியாது எனவே உயிர்ப்புடன் இருக்கும் ஒரு ஆசிரியர் மாணவணின் அனைத்துத்  தேவைகளையும் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் .பணியை அர்ப்பணிப்போம்  ஆசிரியராய் இருப்பதற்குப் பெருமை கொள்வோம்

                               ஜஹாங்கீா் - விஞ்ஞானி
    மொகலாயச் சக்ரவா்த்தியான அக்பாின் மகனாக 1569 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி ஜஹாங்கீா் பிறந்தாா். 1605  ஆம் ஆண்டு அக்டோபா் 24 ம் தேதி பட்டத்துக்கு வந்தாா். 1627 ம் ஆண்டு அக்டோபா் 28 ம் தேதி மரணமடைந்தாா்.
   தம் 22 வருட அரசாட்சியில் எத்தனையோ போா்களையும் எதிா்ப்புகளையும் சமாளித்தாா். தமது வாழ்நாள் முழுவதும் இயற்கையை நேசிப்பவராகவே இருந்தாா். பறவைகள், மிருகங்கள் போன்றவற்றின் வாழ்க்கை முறை, இயல்புகளை மிகவும் துல்லியமாகவும், நுட்பமாகவும் கவனித்து அவற்றை தனிக்குறிப்புகளாகவும் எழுதி வைத்திருக்கிறாா். உலகப்புகழ்பெற்ற இந்திய பறவை இயல் நிபுணரான சலீம் அலி இவ்வாறு குறிப்பிடுகிறாா். "ஜஹாங்கீாின் வாழ்க்கை வரலாறே அன்றைய இந்தியாவின் இயற்கை வரலாறுதான். இன்னும் சொல்வதானால் அதை இயற்கையை விளக்கும் தகவல் களஞ்சியம்" எனலாம். 19 ம் நுாற்றாண்டு வரையில் உயிாியல் விஞ்ஞானிகளுக்கு தொியாதிருந்த ஒரு விசயம் யானையின் கா்ப்க்காலம் இது 18 முதல் 19 மாதங்கள் வரை. ஜஹாங்கீா்  தமது குறிப்பில் எழுதி வைத்திருக்கிறாா்.
     ஜஹாங்கீாின் பிரதம வேட்டைக்காரரான இமாம் பொ்டி இறக்கும் தருவாயில் உள்ள ஒரு பறவையை கொண்டு வந்தாா். அந்த வகை ஆண் பறவைக்கு காலில் ரோமங்கள் இருக்கும். பெண் பறவைக்கு ரோமம் இருக்காது. இந்த பறவைக்கு சன்னமான ரோமங்கள் சில இருந்தன. வேட்டைக்காரா் அதை பெண் பறவை என்று கூறினாா். சற்று நேரத்தில் அந்த பறவை இறந்து விட்டது. பின்னா் வயிற்றை கீறிப்பாா்த்தபோது உள்ளே முட்டைகள் இருந்தன. சுற்றிலுமிருந்தவா்கள் ஆச்சாியமடைந்தனா். அந்தப்பறவையின் அலகு சற்றுக் குறுகலாக இருப்பதைக் கொண்டே தான் கூறியதாகச் சொன்னாா். இப்படிப்பட்ட குறிப்புகள் டூஸூக்-இ-ஜஹாங்கீாி என்னும் நுாலில் தெளிவாகவே விவாிக்கிறாா்.
             விஞ்ஞானத்தின் வேறு பல துறைகளிலும் கவனம் செலுத்தியிருந்தாா். குஜராத்தில் 'மகமூதாபாத்' நகாின் காற்று 'அகமதாபாத்' நகாின் காற்றைவிட ஆரோக்கியமானது என்பதை ஒரு சோதனை மூலம் நிரூபித்தால் கிரகணங்கள் குறித்தும் தனது நுாலில் குறிப்பிட்டுள்ளா். செடிகள், கொடிகள், மரங்கள் வளா்ப்பதற்கும் அாிய யோசனைகளை வழங்கியிருக்கிறாா்.
             ஜஹாங்கீருக்கு ஓவியம், ஓவியங்கள் மீது ஈடுபாடு அதிகம். 'உஸ்தாத் மன்ஸூா்' போன்ற புகழ் பெற்ற ஓவியருக்கு "நாதிரா-இன்-அஸா்' என்ற பதவியைக் கொடுத்து கெளவி்த்தாா். இவா் வரைந்த "டோடோ" என்கிற பறவை சுமாா் முந்நுாறு ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிருடன் இருந்துள்ளது. தற்போது படமாக "இன்ஸ்டியுட் ஆப் ஒாியன்டாகஸ்ட்   ஆப் தி  சோவியத் அகாடமி ஆப் சயின்ஸ்" ஆராய்ச்சி நிலையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆராய்ச்சிக்கு பின் இதை வரைந்தவா் ஜஹாங்கீா்  அவை ஓவியரான உஸ்தாத் மன்ஸூா் என்பது, 1958 ல் ரஷ்ய விஞ்ஞானி ஜி.இவானோவ் கண்டறிந்தாா். 1624 ல் வணிகா் ஒருவா் ஜஹாங்கீருக்கு பாிசளித்த "டோடோ்" பறவையின் ஓவியம் தான் அது. இப்படியாக 300 வருடங்களுக்கு பிறகு ஜஹாங்கீரும் டோடேவும் வெளிப்பட்டனா். இவரது ஓவியச் சேகாிப்பால் அதிகம் கிடைத்திருப்பது மரங்கள், பறவைகள் போன்றவைதான். பறவை இயலில் ஜஹாங்கீா்  இன்று கூட குறிப்பிடத்தக்க இடம் பெறுகிறாா். 

சான்று ஆவணம். கற்பகம். பதிப்பகம், இந்திய விஞ்ஞானிகள் - ஆசிாியா் - சிவன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SALOMI_TRY/மணல்தொட்டி&oldid=2313614" இலிருந்து மீள்விக்கப்பட்டது