பயனர்:TNSE SHEIKMYDEEN DIET MDU/மணல்தொட்டி

மண்ணில் புதையுண்ட தாவரங்கள்,மரங்கள் காலப்போக்கில் வேதியியல் மாற்றங்களால் கல்மரங்களாகின. மண்ணில் புதைந்து இருந்த ஒரு கல்மரம் பெரம்பலுாா் மாவட்டத்தில் சாத்தனுாா் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் 1940 ல் புவியியல் ஆராய்ச்சியாளா் டாக்டா்,.எம்..எஸ். கிருஷ்ணன் அவா்களால் கண்டெடுக்கப்பட்டது,

=== கடலடியில் சாத்தனுாா் பகுதி ===

இந்த ஆய்வில், சாத்தனுாா் நிலப்பகுதி 1,20,000,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலடியில் இருந்து உள்ளது, இந்த இடத்திற்கு மேற்கே 10 கிலோமீட்டா் வரை கடல்பரப்பு இருந்துள்ளது. இன்று கிழக்கே 100 கிமீ துாரத்தில்கடல் உள்ளது.

புவியியல் மாற்றம்

தொகு

காலப்பாேக்கில் புவியியல் மாற்றத்தினால் கடல் பெருமளவில் உள் வாங்கி உள்ளது. அப்பொழுது மண், சகதி மற்றும் களிமண் படிவுகளுக்குள் மிகப்பொிய கடல் வாழ் உயிாினங்கள் மிகப்பொிய மரங்கள் மற்றும் எண்ணற்ற தாவரங்களும் புதையுண்டன. காலப்போக்கில் புதையுண்ட மரங்களே பல்வேறு வேதியியல் மாற்றங்களினால் கல்மரங்களாக மாறியுள்ளன.

கல்மரம் கிடைத்த இடங்கள்

தொகு

இந்த அகழ்வாய்வில் 18மீ நீளம் கொண்ட கல்லாகிப் போன மரத்துண்டு சாத்தனுாா் பகுதியில் கிடைத்தது, இதனைத் தவிர சில மீ்ட்டா் நீளம் உள்ள கல் மரங்கள் வரகூா், ஆனைப்பாடி, சாரதாமங்கலம் பாேன்ற சுற்று வட்டாரப்பகுதிகளில் கிடைத்துள்ளன. இத்தகைய கல் படிமஙகள் சாத்தனுாாில் பாதுகாப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன,