பயனர்:TNSE SSVELAN DIET MDU/மணல்தொட்டி
'டுங்குஸ்கா வெடிப்பு
ஹிரோஷிமா அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு ஆற்றலை வெளிப்படுத்திய டுங்குஸ்கா வெடிப்பு
எரிகற்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக கடைப்பிடிக்கப்படும் சர்வதேச எரிகற்கள் தினம் இன்று [ஜூன் 30] கடைப்பிடிக்கப்படுகிறது. == டுங்குஸ்கா வெடிப்பு == 1908 ஆம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி காலை 7 மணி அளவில் சோவியத் ரஷ்யாவின் கிராமம் ஒன்றில் பெரும் சப்தத்துடன் வானிலிருந்து ஒரு பொருள் வெடித்து சிதறியது.அது என்ன பொருள் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அது எரிகல் என்பது தெரிய வந்தது.எரிகல் பூமியில் நுழையும்போது வளிமண்டலத்தில் உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறிவிடும்.ஆனால் டுங்குஸ்கா பகுதியில் நடந்தது அரிதிலும் அரிதான சம்பவம். வளிமண்டல உராய்வினால் தீப்பிழம்பாக மாறிய எரிகல் பயங்கர சத்தத்துடன் டுங்குஸ்கா நதிக்கரை ஓரத்தில் விழுந்தது.இதனால் அந்தப் பகுதியில் இருந்த மான்கள் உள்ளிட்ட விலங்குகள் கொல்லப்பட்டதுடன் மரங்கள் அனைத்தும் தீயில் கருகின.எரிகல் விழுந்த இடத்திலிருந்து சுமார் 2150கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகள் அதன் பாதிப்பை உணர்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.