பயனர்:TNSE Savithri krr/மணல்தொட்டி

சங்க கால நாணயங்கள் மற்றும் அளவைகள்

சங்க காலத்தில் பயன்படுத்திய காசுகள் நமக்கு மிகுதியும் கிடைக்காமையால் , அவற்றின் உருவம், அளவு, எடை, உலோகம், என்பனவற்றை பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. ஆயினும்,அகஸ்டஸ் மற்றும் அவரை அடுத்த பேரரசர்கள் காலத்து ரோமானிய நாணயங்களை தமிழர் அறிந்தும் பயன்படுத்தியும் வந்தனர்.”வெளி நாட்டு வாணிபத்திற்கு உலோக காசுகள் பயன்பட்டன.”1

மிகச் சிறிய உருவில் காணம் என்பது ஒரு பொற்காசு “தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அரிசிற் கிழாருக்கு நூறாயிரம் பொற்காசுகளும் சேர நாட்டு அரசுரிமையும் அளித்தார்.2.

காசு என்று ஒரு நாணயம் இருந்தது. இது வேப்பம் பழத்தின் அளவிலும், தாமரை மொட்டின் உருவிலும் ,அமைந்தது. இக்கட்டி தங்க மணிகளைக் கோர்த்து மாலையாக மகளிர் கழுத்தில் அணிந்தனர்.3

ஆயிரம், நூறாயிரம் ,பத்து பத்து இலட்சம் கோடி என்றனர் பழந்தமிழர். அடியாருக்கு நல்லார் பல்லம் என்னும் சொல்லை ஆள்கின்றார்.4

சக்க காலத்தில் பின்னங்கள் பற்றி மக்கள் அறிந்திருந்தனர்

முக்கால் : 3/4

அரை  : 1/2

கால் : 1/4

அரைக்கால் : 1/8

வீசம்  : 1/16

காணி : 1/64

முந்திரி : 1/256

காணி மற்றும் முந்திரி ஆகிய இரு பின்னங்களும் நாலடியாரின் காணக்கிடைக்கின்றது. 5 .தமிழர் பூஜ்ஜியத்தை “பாழ்”என்றனர்.மா, வேலி என்பவை பண்டைத் தமிழர் அரிந்த நில அளவைகள்.

100 குழி : 1மா

20 மா  : 1 வேலி

1 குழி : 10 சதுர அடி

நிலத்தில் இருந்து வந்த தானியத்தை அம்பணத்தால் அளந்தனர்.6 பதிற்று பத்து உரைக்காரர் அம்பணத்தை மரக்கால் என்பார் ( மரக்கால் = நான்கு பட்டணம் படி ). ஒரு உலக்கு அல்லது இரொ ஆழக்கு . ஒரு நாழி என்பது சிறிய அளவை . அதே நேரம் நாழிகை என்பது ஒரு கால அளவு.

தூணி, பதக்கு என்பவை முகத்தல் அளவை. இவைக் கொண்டு தானியங்களை அளந்தனர்.

1 தூணி : 4 மரக்கால்

1 பதக்கு : 2 மரக்கால்

1 மரக்கால் : 1 அம்பணம்

1 மரக்கால் (அ ) அம்பணம் : 32 ஆழாக்கு

சங்க தமிழர் நீட்டல் அளவை முறையும் அறிந்திருந்தனர். அவர்கள் அறிந்த மிகச் சிறு நீட்டல் அளவை ஒரு அணு.அதற்கான வாய்பாடு

8 அணு : 1தேர்த்து

8 தேர்த்து : 1இம்மி

8 இம்மி  : 1 எள்

8 எள்  : 1 நெல்

8 நெல் : ஒரு பெருவிரல் ( சராசரி )

28 பெருவிரல் : ஒரு முழம்

தேர்த்து என்பது ஒரு மயிரிழை. இம்மி ஒரு மிகச் சிறு தானியம் . எள் , நெல் என்பவை தானியங்கள் . முழம் என்பது இரண்டு சாண் : அணு யாவற்றிலும் மிகச் சிறு பொருள். 7

மேற்கோள்கள்

1. பட்டினப் பாலை -29,30

2. அகம் :60

3. புறம்:33

4. சிலப்பதிகாரம் : IX 59 -94 அடியாருக்கு நல்லார் உரை

5. நாலடியார் : 346

6. பதிற்று பத்து : 66

7. சிலப்பதிகாரம் அடியாருக்கு நல்லார் உரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Savithri_krr/மணல்தொட்டி&oldid=2290998" இலிருந்து மீள்விக்கப்பட்டது