பயனர்:TNSE THANALAKSHMI-DIET MDU/மணல்தொட்டி

கலைச்சொல் விளக்கம்

புவி

நாம் வாழும் புவி ஒரு சிறிய கோள். சு10ரியனைச் சுற்றி வரும் ஒன்பது கோள்களில் ஒன்று.புவிப்பரப்பில் உள்ள சில அமைப்புகளுக்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அகழி

கண்டங்களைத்தாங்கியுள்ள பாளத்தட்டு.கடலடியில் இன்னொரு பாளத்தட்டுடன் செருகியுள்ள இடம். கடலின் மிக ஆழமான பகுதிகள்

ஆழ்கடல் குன்றுகள்

ஆழ்கடல் சமவெளியில் உருவான குன்றுகள்

ஆழ்தீப்பாறைத்திரள்

நிலத்தடியில் ஊடுருவிச் செல்லும் கற்குழம்பின் பெயர்

ஆழ்கடல் சமவெளி

கடலடி முகடுகளை ஒட்டி அமைந்துள்ள ஆழ்கடல் சமவெளிப்பகுதி.

ஏரி

மிக மெதுவாக இயங்கும் அல்லது அசைவற்று இருக்கும் பெரிய நீர் நிலை.நான்கு புறமும் நிலத்தால் சு10ழப்பட்டிருக்கும்

கடமல்லை

ஆழ்கடல்ääசமவெளியில் ஆங்காங்கு உருவான மலைகள்.இதில் மிக உயரமான மலை மௌனாகியா.

கடலடி முகடு

ககடலடி மத்திய பிளவுப்பெயர்ச்ச pபள்ளத்தாக்குகளிலுள்ள கற்குழம்புகளிலிருந்து புதிய பாறைகள் உருவாகுமிடம். கண்டங்களைத் தாங்கி நிற்கும் மற்ற பாளத்தட்டுகளின் முனைகள் சேருமிடம்.மிகப்பெரிய கடலடி முகடு அட்லாண்டிக் மாகடலில் உள்ளது. 16000 கி.மீ நீளமும் 800 கி.மீ அகலமும் கொண்டது இந்த முகடு.

கண்டச்சரிவு

கண்டத்திட்டுகளின் முனை கடலடியில் செங்குத்தாக இற்ஙகும் பகுதி


கண்டத்திட்டுகள்

கண்டங்களின் விளிம்புப் பகுதிகள் கடலடியில் சரிவாக இறங்கும் பகுதி

கண்டத்தேரி

'கண்டச்சரிவுகள் கடலடியில் கீழிறங்கி மீண்டும் சாய்வாக மேல்நோக்கிச் செல்லும் சரிவேற்றம் அல்லது குன்று


மௌனாகியா கடல் மலைகளில் மிகப்பெரியது. புசிபிக் மாகடலில் உறவாய் தீவிலுள்ள இந்த எரிமலையின் உயரம் அடிவாரத்திலிருந்து 10203 மீட்டர்கள். கடல் மட்டத்திற்க மேல் இதன் உயரம் 4205 மீட்டர்கள். மீதி 5995 மீட்டர்கள் நீருக்கடியில் உள்ளது. இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தைவிட 1355 மீட்டர்கள் அதிக உயரம் உடையது.

மேற்கோள் நூல்
அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்1.புவிääகாற்றுääதண்ணீர்-என் ஸ்ரீநிவாஸன்