பயனர்:TNSE THEEKUTCHI PDK/மணல்தொட்டி
ஜோயிதா மண்டல்என்பவர் இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தைச் சார்ந்த திருநங்கை ஆவார். இவர் இந்திய நாட்டிலேயே முதல் திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]
பெயர் | ஜோயிதா மண்டல் |
பிறப்பிடம் | கொல்கத்தா |
பாலினம் | திருநங்கை |
பதவி | நீதிபதி லோத் அதாலத், இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஜோயிதா மண்டல் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரில் பிறந்தவர்.பின்னர் இஸ்லாம்பூரில் வாழ்ந்து வந்தார். அங்கு திருநங்கைகளை ஒன்று திரட்டி சங்கம் ஒன்றை உருவாக்கினார்.
தினாஜ்பூர் புதிய விளக்கு
தொகுஇவர் ஒன்று திரட்டிய சங்கத்திற்கு தினாஜ்பூர் புதிய விளக்கு என பெயரிட்டார். சங்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளைச் செய்தார். பலரிடம் உதவி பெற்று திருநங்கைகளுக்கு பல்வேறு வித உதவிகளைச் செய்து வந்தார்.
நீதிபதி
தொகுபல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டமைக்காகவும், திருநங்கைகளுக்கு உதவி செய்தமைக்காகவும் இவருக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.இவர் இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.[2] திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ timesofindia.indiatimes.com/india/joyitas-journey-from-begging-to-national-lok-adalat-bench/articleshow/59519954.cms
- ↑ http://www.newindianexpress.com/nation/2017/jul/22/indias-first-transgender-judge-joyita-mondal-wants-jobs-for-her-community-1632169.html