பயனர்:TNSE Varatharajsellam diet plr/மணல்தொட்டி

<ஹைட்ரஜன் வாயு>

    ஹைட்ரஜன் என்பது ஒரு மாற்று எரிபொருளுக்கான வழியாகும்.  இதனை ஏராளமான அளவிற்குக் கைத்தொழில் நுட்பத்துடன் உருவாக்கலாம்.  இது மனித சமுதாயத்திற்குத் தேவையான அனைத்து ஆற்றல் தேவைகளையும், மின் உற்பத்தி உட்படப் பெட்ரோல் எரிபொருள்களைக் காட்டிலும் பொருளாதார முறையிலும். மாசுபடாத சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும் பயன்படுகிறது.  மேலும் நச்சுத்தன்மையற்ற, கையாளுவதற்கும். வழங்குதற்கும் பாதுகாப்பான ஒரு எரிபொருள் ஹைட்ரஜன்.  மிக அதிக நிறைகொண்ட ஆற்றலைப் பெற்றிருக்கிறது.  ஓரலகு எடை கொண்ட  ஹைட்ரஜன், பெட்ரோலியப் பொருள்களின் எரிதல் வெப்பத்தைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமாகவும், எத்தனாலைவிட 4.5 மடங்கு அதிகமாகவும், மெத்தனாலைவிட 6 மடங்கு அதிகமாகவும் ஆற்றலை அளிக்கிறது.  இதன் வெப்ப இயக்க ஆற்றல் மாற்றும் திறன் (30-35%) பெட்ரோலைவிட (20-25%) அதிகமாக உள்ளது.