பயனர்:TNSE kamaraj SLM/மணல்தொட்டி

தேசிய ஒருமைப்பாடு

இந்தியா பல இனங்களின் அருங்காட்சியகம்:

  ஆரம்ப காலத்தில் ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினர்.அவர்களுக்கு பிறகு பாரசீகர்கள்,கிரேக்கர்கள்,குஷாணர்கள்,ஹூணர்கள்,அரேபியர்கள்,மங்கோலியர்கள், மொகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.இவர்கள் பல புதிய இனங்களை தோற்றுவித்தனர். எனவே இந்தியா “பல இனங்களின் அருங்காட்சியகமாக” விளங்குகிறது.

கலாச்சார ஒற்றுமை:

கலாச்சாரம் என்பது பண்பட்ட சமுதாயத்தின் வெளிப்பாடாகும்.இது மொழி,இனம்,இலக்கியம்,சமயம்,தத்துவம்,பழக்கவழக்கங்கள் போன்றவைகள் மூலமாக வெளிப்படுகிறது.இந்தியா பல கலாச்சாரங்களின் ஒன்றிணைப்பு மூலம் கலாச்சார ஒற்றுமையைப் பெற்றுத் திகழ்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_kamaraj_SLM/மணல்தொட்டி&oldid=2345610" இலிருந்து மீள்விக்கப்பட்டது