பயனர்:TNSE kiruthiha thn/மணல்தொட்டி

கம்பம் நந்தகோபாலன் கோவில்

தொகு
 * தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள நந்தகோபாலன் கோவிலானது மிகவும் சிறப்பு வாய்ந்த பழமையான கோவிலாகும். இந்த கோவிலின் சிறப்பே இங்கு மூலவருக்கு என்று தனி சிலை கிடையாது. இங்கு மாட்டுத்தொழுவமே கடவுளாக வணங்கப்படுகிறது. கொடி மரத்துக்கே அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.
 * இந்த கோவில் ஏராளமான மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் கோவிலுக்குச் சொந்தமானவையாகும். இவற்றிலிருந்து பட்டத்துக் காளை தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இந்த கோவில் தொடர்பான அனைத்து முக்கிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களிலும் இந்த பட்டத்துக் காளைக்கே முதல் மரியாதை வழங்கப்படும்.
 * இந்த பட்டத்துக் காளை இறந்துவிடின் வேறொரு கன்று பட்டத்துக் காளையாகத் தேர்ந்தெடுக்கப்படும். இறந்த காளை சகல மரியாதைகளுடனும் அடக்கம் செய்யப்படும். பரிபூரண அலங்காரங்களுடன் ஊர் முழுவதும் சுற்றி எடுத்து வரப்படும். 
 * தேர்ந்தெடுக்கும் முறை:
 * கோவிலுக்கு சொந்தமான திடலில் ஒரு கரும்பு கட்டு வைக்கப்படும். கோவிலில் வளரும் அனைத்துக் கன்று குட்டிகளும் அங்கே அழைத்துவரப்பட்டு கட்டவிழ்த்துவிடப்படும். எந்த கன்று முதலில் அந்த கரும்பில் வாய் வைக்கின்றதோ அதுவே அடுத்த பட்டத்துக் காளையாக முடி சூட்டப்படும். இது அப்பகுதி மக்களால் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
* மேற்கண்ட இரு நிகழ்வுகளிலும் அனைத்து சமய மக்களும் எவ்வித வேறுபாடுமின்றி கலந்து கொள்வது மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும்.
* மண் மாறாத இது போன்ற நிகழ்வுகளே நம் பாரம்பரியத்தை போற்றி காக்கின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_kiruthiha_thn/மணல்தொட்டி&oldid=2324448" இலிருந்து மீள்விக்கப்பட்டது