பயனர்:TNSE marshal SLM/மணல்தொட்டி
கடற்படைக்கு அறிவிப்பு
தொகுகடற்படைக்கு அறிவிப்பு என்பது ஊடுருவல் தடுப்பு பாதுகாப்பு, நீர்ப்பரப்பிற்குரிய தகவல்கள், நீரோட்டங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் மற்றும் ஊடுருவல் தடுப்பு கருவிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். 60 க்கும் மேற்பட்ட நாடுகள் கடற்படை அறிவிப்புக்கான கடல் வரைபடங்களை உருவாக்கியுள்ளன. இவ்வரைபடங்கள் மூன்று பகுதியாக அதாவது வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் இருமுறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை என பதிவுகள் மேம்படுத்தப்படுகிறது. உதாரணமாக பிரிட்டன் (United Kingdom) கடற்படையில் வாரம் ஒருமுறை வரைபடங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க கடற்படை
தொகுஅமெரிக்க ஐக்கிய நாடுகளில் கடற்படைக்குத் தேவையான கடல் வரைபடங்களை National Geospatial-Intelligence Agency (NGA) என்ற அமைப்பு வாரம் ஒருமுறை பதிவேற்றம் செய்து மேம்படுத்தி வழங்கி வருகிறது. National Ocean Service (NOS) என்ற அமைப்பும் U.S. Coast Guard அமைப்பும் NGA உடன் இணைந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வழிகாட்டுகிறது. வரைபடங்களை சீர்திருத்துவது, எளிமைப்படுத்துவது, கலங்கரை விளக்கங்களை முறைப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கண்ட NGA, NOS மற்றும் U.S. Coast Guard ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன.
கனடா
தொகுகனடாவில் அந்நாட்டு கடற்படைக்குத் தேவையான கடல் வரைபடங்களை The Canadian Coast Guard (CCG) என்ற அமைப்பு வழங்கி வருகிறது. இவ்வமைப்பு தேவையான தகவல்கள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கங்களை மின்னணு பதிவுகளாக Notices to Mariners (NOTMAR) என்னும் இணையதளம் வாயிலாக மாதம் ஒருமுறை வழங்கி வருகிறது. கனடா கடற்படைக்குத் தேவையான தகவல்களை இவ்விணையதளம் வாயிலாக பதவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்கின்றனர். NOTMAR.gc.ca என்ற இவ்விணையதளம் 24x7 இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தகவல்களை வழங்கி வருகிறது. மேலும் பதிவு செய்து கொண்டுள்ள பயனாளிகளுக்கு (Registered Users) அறிவிப்புகளை மின்னஞ்சல்களாக வார இறுதிகளிலும், மாத இறுதிகளிலும் அனுப்பி வருகிறது. மேலும் NOTMAR.gc.ca பதிவு செய்து கொண்டுள்ள பயனாளிகளுக்கு (Registered Users) எளிமைப்படுத்தப்பட்ட கடல் வரைபடங்களை பதிவேற்றம் (Canada Shipping Act க்கு உட்பட்டு) செய்து கொள்ளவும் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இவ்விணையதளத்தில் வரலாற்றுக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட கடல் வரைபடங்களையும், வரலாற்றுக் கால மாலுமிகள் கண்டுபிடித்த கடல் வழி பாதைகளும் மின்னணு (Digital) வடிவத்தில் பதிவேற்றம் செய்து பார்வையிடும் வகையில் வழங்கியுள்ளது.
மேலும் பார்வைக்கு
தொகு· Notice to Airmen — aeronautical equivalent · American Practical Navigator · Buoy · Coast Pilots · Light List · List of Lights · Local Notice to Mariners · Sailing Directions
மேற்கோள்கள்
தொகு1. Web site uses abbreviation NTM The text of this article originated from sections 418 and 419 of The American Practical Navigator, a document produced by the government of the United States of America