பயனர்:TNSE neham KRR/மணல்தொட்டி

நொய்யல் செல்லாண்டியம்மன்

தொகு

கரூர் மாவட்டம் ,மண்மங்கலம் வட்டம்,வேட்டமங்கலம் கிராமம்,நொய்யலில் செல்லாண்டிம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 18பட்டி ஊர்மக்கள் வழிபடும் சக்தி வாய்ந்த அம்மன் ஆகும்.நொய்யல்ஆறு காவிரி ஆற்றுடன் இணையும் இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.கரூரில் இருந்து சுமார் 30கிமீ தொலைவிலும் கொடுமுடியிலிருந்து சுமார்5கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் முன் பின்னாக வரக்கூடிய வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் தேர்த்திருவிழா நடைபெறும்.

              வியாழன் அன்று  தேரில் அம்மனை வைத்து இரவு 1மணிக்கு  ஊரை வலம் வருவர்.தேர் கோயிலை அடைந்தவுடன் அதிகாலையில் எருமைக்கிடா வெட்டப்படும்.
         பின் வெள்ளிக்கிழமை  கிராமமக்கள் கிடாவெட்டுவதும்.கோழியும் பலிகெடா கொடுப்பார்கள்.அருகில்  உள்ளவேலாமரத்தான் சாமிக்கு இந்த பலிகெடா நடைபெறும்.இரவு  நிகழ்ச்சி யில்  கோயில்  பூசாரி பதம் கொண்ட அரிவாளில் அம்மன்  அருளால் ஏறுவார்.இந்நிகழ்ச்சி மிகவும் புகழ்ப்பெற்ற ஒன்றாகும்.இந்நிகழ்வைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள்  கோயிலில் கூடுவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_neham_KRR/மணல்தொட்டி&oldid=2312882" இலிருந்து மீள்விக்கப்பட்டது