பயனர்:TNSE palanivelusubbiah Chn/மணல்தொட்டி

சுயமரியாதை தொகு

சுயமரியாதை=சுயம்+மரியாதை. முதலில் மரியாதை என்றால் என்ன எனபதனைக் காண்போம்! மரியாதை என்பது கொடுக்கப்படும் மதிப்பு.உலகில் பிறந்த எந்த உயிரினனமும் பிறரால் மதிக்கப்பட வேண்டுமென்பதற்காக ஒரு தனிப்பட்ட சிறந்த குணாதிசயத்தைக் கொண்டுள்ளன என நான் கருதுகின்றேன்.

உதாரணங்கள் தொகு

எறும்பு=சுறுசுறுப்பு

காகம்=பகிர்ந்து உண்ணுதல்

தேனீ=சிறுசேமிப்பபு நாய் =நன்றிமறவாமை இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்,சரி மனிதகுலத்திற்கு வருவோம் மரியாதை இராமன் என்று சிறுவர் கதையில் ஒரு கதாப்பாத்திரம் படித்து இருப்பீர்கள்.அவனுடைய குணாதிசயம் என்ன உண்மை,நுண்மை(அறிவுடைமை),நேர்மை உள்ளவனாக இருப்பான்,அதனால் அவனை மதித்து ஊர்மக்கள் அனைவரும் விரும்புவார்கள்.

இன்றைய நிலை தொகு

இன்றைய மாணவனைக் கூப்பிட்டு நீ என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டால் தலையினை சொறிந்துகொண்டு நிற்கும் நிலை உள்ளது.இன்னும் கொஞ்சம் அழுத்தி விபரமாக எதிர்காலத்தில் என்ன வேலை செய்யப்போகிறாய் எனக்கேட்டால் அப்போதுதான் சற்று யோசித்து ஒரு ஆட்டோ சொந்தமாக வாங்கி ஒட்டவேண்டும்என்பான் ஒருவன்,அடுத்தவன் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டுவேன் என்பான் மற்றவனோ அரசு அலுவலகத்தில் ஒரு பியூன் வேலை கிடைத்தால் கிடைத்தால் போதும் என்பான். மேலே கூறியவை அனைத்தும் உழைப்பு,உண்மை உள்ள தொழில்கள்தான் ஆனால் சமுதாயத்தில் உரிய மரியாதை இருக்கிறதா?என்று கேட்டால் மேலும் கீழும் பார்க்கக் கூடியநிலைதான் உள்ளது

காரணங்கள் தொகு

இந்நிலைவரக் காரணம் யார்? நாமும்,நாம் சார்துள்ள சமூகமுமே! மாணவர்களேடு கலந்து ,மனம்விட்டு பேசுகின்ற நிலைமாறி மதிப்பெண்அதிகமாக எடுக்க வைப்பது எப்படி என்ற நோக்கம் வந்தபின்னால் மரியாதையாவது மண்ணாங்கட்டியாவது என்ற நிலை வந்து விட்டது.மரியாதை வேண்டுமெனில் முதலில் மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.மரியாதை கொடுக்கத்தொடங்கினாலே சுயமரியாதையென்னும் கௌரவமும்,மதிப்பும் பெருகுவது நிச்சயம்!