பயனர்:TNSE saravanan thn/மணல்தொட்டி

தீர்த்தத்தொட்டி அருள்மிகு விருப்பாட்சி ஆறுமுக நாயினார் திருக்கோவில்

தொகு

மூலவர்  : அருள்மிகு விருப்பாட்சி ஆறுமுக நாயினார் உற்சவர்  : சுப்ரமணியர் தல விருட்சம்  : வில்வம் தீர்த்தம்  : முருக தீர்த்தம்( தீர்த்தத்தொட்டி) ஆகமம்/பூஜை  : சிவாகமம் பழமை  : 500, 1000 வருடங்களுக்கு முன் ஊர்  : கோடாங்கிபட்டி-தீர்த்தத்தொட்டி மாவட்டம்  : தேனி மாநிலம்  : தமிழ்நாடு

திருவிழா

தொகு
 சித்திரைத்திருவிழா,வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம்,திருக்கார்த்திகை,கந்தசஷ்டி

தல சிறப்பு

தொகு
 வயலில் கிடைத்த முருகன், நாக சுப்ரமணியர், நாக கணபதி, ருத்ராட்ச சிவன்

திறக்கும் நேரம்

தொகு
  காலை 6 மணி முத 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மனி வரை திறந்திருக்கும்.

முகவரி

தொகு
  நிர்வாக அதிகாரி,அருள்மிகு விருப்பாட்சி ஆறுமுக நாயினார் திருக்கோவில்,தீர்த்தத்தொட்டி,கோடாங்கிபட்டி-625547,தேனி.

பொது தகவல்

தொகு
  இத்தல விநாயகர் செல்வகணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியில் மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படுகிறது. பிரகாரத்தில் முருகன் சன்னதிக்கு இருபுறமும் இரண்டு வில்வ மரங்கள் உள்ளது. இதுவே இத்தளத்தின் விருட்சமாகும். தீர்த்தத்தொட்டியின் சுவரில் முருகனை வழிபட்ட நிலையில் சப்த கன்னியர்,சிவலிங்கம், விநாயகர்,முருகன் சிற்பங்கள் இருக்கிறது.இக்கோயிலுக்கு மிக அருகில் மனிதர்களின் பாவ புண்ணிய கணக்கெழுதும் சித்திர புத்திர நாயனார் திருக்கோவில் உள்ளது.

பிரார்த்தனை

தொகு
  நாகதோஷம், செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தீர்த்த நீராடி முருகனை வேண்டிக்கொள்கிறார்கள்.கல்வி சிறக்க, தொழில் வளம் பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகவும் இவரை வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்

தொகு
  சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால்,பன்னீர் அபிஷேகம் செய்து வஸ்த்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்

தல பெருமை

தொகு
  வயலில் கிடைத்த முருகன்: இங்கு வசித்த ஒருவரின் கனவில் தோன்றிய முருகன் , ஒரு வயலைச் சுட்டிக்காட்டி தான் அங்கு சிலை வடிவில் இருப்பதாக உணர்த்தினார். விவசாயி, அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் கூறினார். அதன்பின், முருகன் சிலையை எடுத்த அவர்கள் இங்கு பிரதிஷ்டை செய்து சன்னதி எழுப்பினர். விருப்பாட்சி என்ற ஊரில் பக்தருக்கு அருள் புரிந்த முருகன் எழுந்தளிய தலம் என்பதால் "விருப்பாட்சி ஆறுமுக நாயனார் திருக்கோவில்" எனப் பெயர் பெற்றது.
 
  நாக சுப்ரமணியர்: மூலஸ்தானத்தில்,முருகன் ஆறுமுகங்களுடன் திருவாட்சியுடன் சேர்ந்த சிலை அமைப்பில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இல்லை. காலையில் மட்டும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். இவருக்கு அருகில், ஏழுதலை நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் அருகில் மயில் வாகனத்துடன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_saravanan_thn/மணல்தொட்டி&oldid=2328047" இலிருந்து மீள்விக்கப்பட்டது