பயனர்:TNSE thiruthaj KRR/மணல்தொட்டி 05
அரிக்கேன் விளக்கு எல்லோராலும் லாந்தர் விளக்கு என்று அழைக்கப்படுவது அரிக்கேன் விளக்காகும். சிம்னிவிளக்கின் வெளிச்சக்குறைவைப் போக்குவதற்காக இவ்விளக்கானது உருவாக்கப்பட்டது.
மேம்பட்ட பாதுகாப்பு
தொகுதீப்பந்தம் போல் காற்றில் அனணந்து விடாமலும், சிம்னி விளக்கினைப் போல் வெளிச்சம் குறைவாக இல்லாமலும் மேம்பட்ட வடிவமைப்பின் மூலம் காற்றில் அணைந்துவிடாமல், மிகுதியான வெளிச்சத்தைத் தருவது அரிக்கேன் விளக்காகும்.
சொல் விளக்கம்
தொகுஅரிக்கேன் விளக்கு
ஆங்கிலப்பெயர் | தமிழ்ப்பெயர் | பெயர் விளக்கம் |
---|---|---|
HURRICANE | அரிக்கேன் | புயல் |
புயல் காற்றிலும் அணையாத விளக்கு என்பது பெயர்விளக்ககம்.
வடிவச் சிறப்பு
தொகுசிம்னிவிளக்கில் குறைந்த அளவு மண்ணெண்ணையே நிரப்பமுடியும். நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்த முடியாது. ஆனால் அரிக்கேன் விளக்கானது நீண்ட நேரம் வெளிச்சத்தைத் தரும்வகையில் பெரிய அளவிலான எண்ணெய் சேமிப்புக்கலனைக் கொண்டுள்ளது.
அமைப்பு நுட்பம்
தொகுஎங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் கைப்பிடி வளையத்தோடு இந்த விளக்குக் காணப்படும். இரவுப் பயணங்களில் இவ்விளக்கின் பயன்பாடு அக்காலத்தில் பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
அரிக்கேன் விளக்கின் பகுதிகள்
தொகு- மண்ணெண்ணை சேமித்து வைக்கும் கலன்
- திரி ஏற்றும் பகுதி
- கண்ணாடிக் குடுவைப் பகுதி
- புகைபோக்கிப் பகுதி
- விளக்கின் கைவளையப் பகுதி.