பயனர்:TNSEalgasTUT/மணல்தொட்டி
உயிர்சக்தி பொருள்
உயிர் சக்தி பொருள்கள் பொதுவாக வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. இந்த உயிர் சக்தி பொருட்கள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பகுதிகள், கழிவுகள் மற்றும் சுரப்புகளாகக்கூட இருக்கலாம். உயிர்சக்தி பொருட்கள் பல்வேறு உயிர்மூலக்கூறுகளாக உள்ளது. எடுத்துக்காட்டுகள்:
நிலக்கரி மற்றும் எண்ணெய் ஆகியவை புவியியல் காலக் கணக்கில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் உருவாகியுள்ளது. சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புச் சிப்பிகள் (கடல் சார் விலங்கினங்களின் ஓடுகள் மூலம்) புவியியல் காலக் கணக்கில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் உருவாகியுள்ளது.
புல் வகைகள், மரம், செடி, கொடிகள் இதர தாவர இனங்கள் பூமியில் நன்னீர் தோற்றம் மற்றும் மழையின் மூலமும் பிற்காலத்தில் தோன்றிய உயிர்; சார் கூறுகளாகும்.
முத்து, பட்டு, கோந்து போன்றவை பின்னா; கடல்சார் உயிர் மற்றும் நில வாழ் உயிர் மற்றும் தாவரங்களில் தண்டுப்பகுதியில் பிற்காலத்தில் தோன்றிய முக்கிய சுரப்புகளாகும். இந்த சுரப்புகளும் உயிர் சக்தி பொருளாகவே கருதப்படுகிறது.
உயிர் சக்தி அற்ற பொருட்கள்: இந்த உயிர் சக்தி அற்ற பொருட்கள் தற்போதைய அல்லது கடந்த கால உயிரினங்களின் செயல்பாடுகளால் தோன்றுவதில்லை. மாறாக, பல்வேறு காலக்கட்டங்களில் மண்ணில் பல்வேறு மாற்றங்களுக்கு பின்னா; உருவாகின்றன.
எடுத்துக்காட்டு:
மண்ணில் உள்ள கனிமங்கள், கரிம சேர்மங்கள், நிலக்கரி போன்றவை மண்ணில் இருந்து வெளிவரும் மீத்தேன் போன்ற வாயுக்களும் இதில் அடங்கும்.
மேற்கோள்:
https://en.wikipedia.org/wiki/Biogenic_substance
நல்லுணவே மனித ஆரோக்கியம்
ஆரோக்கியத்தின் ஆதாரம் நல்லுணவே! மனித ஆரோக்கியமே ஆனந்தம்! மனிதன் மனமார்ந்த ஆனந்தத்தை அடைய இயற்கையோடு இசைந்து, இணக்கமாக வாழவேண்டும். முதல்படியாக இயற்கையான நல்லுணவை தேர்ந்தெடுத்து உண்ணக் கற்றுக்கொள்ள வேண்டும். மனிதனின் இயற்கையான நல்லுணவாகிய தேங்காய், கனி வகைளை அப்படியே நாம் சாப்பிடலாம். சமைக்க வேண்டியதில்லை.
மண்ணில் வாழும் மற்ற ஜீவராசிகள் எல்லாம் தங்களின் உணவுகளாகிய தானியங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழவகைகள் யாவற்றையும் அப்படியே சாப்பிடுகின்றன. சமைத்து உண்பதில்லை. மனிதன் மட்டும்தான் மண்ணில் வாழும் உயிர்களில் சமைத்து உண்ணுகிறான். சமையல் என்றால் பக்குவப்படுத்துதல் என்று பொருள். நெருப்பை பயன்படுத்திச் சமைப்பதால் உணவின் சத்துக்கள் கெட்டுப்போகின்றன அல்லது குறைந்து விடுகின்றன. இயற்கையான காய்கறிகளின் சுவை குறைந்து விடுகின்றன. சுவையைக் கூட்டும் பொருட்டு, உப்பு, இனிப்பு, புளிப்பு, காரம் போன்ற சுவைகளைச் சேர்த்து உணவை சமைத்து உண்கிறோம். மேலும், வறுத்தல், பொரித்தல், நீரில் வேகவைத்தல், எண்ணெய்யில் வேக வைத்தல் முதலிய சமையல் முறைகளைக் கையாள்வதால் உணவின் தன்மை முற்றிலும் மாறிவிடுகிறது. சுவையின் மிகுதியால் உணவினை நம் செரிமான அமைப்பிற்கு மேல் உண்ணுகிறோம். உடல் நலம் கெட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். தேங்காய், மற்றும் பழவகைகளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க சிலரால் மட்டுமே முடிகின்றது. பெரும்பாலரால் முடிவதில்லை. பெரும்பாலோர் உண்ணும் தானியங்கள் கீரைகள், காய்கறிகள் நெருப்பை பயன்படுத்தாமல் கூடுமானவரை இரசாயனக் கலப்பு இல்லாமல் உப்பு, நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சம்பழம், மிளகுத்தூள், சீரகத்தூள் போன்ற இயற்கையான சுவையூட்டிகளைச் சேர்த்து, சத்துக்கள் கெடாமல் ருசியான உணவுகளைத் தயாரித்து, உண்ணுவதால் மனிதன் இயற்கையான நல்லுணவை பெறுவதுடன் நல் ஆரோக்கியத்தையும் பெறுவது உறுதி. இயற்கை வாழ்வில் அறிஞர் சிவசைலம் தவத்திரு.மூ.ராமகிருஷ்ணன் அவர்கள் தேங்காய், வாழைப்பழங்களை மட்டும் உணவாகவும் மருந்தாகவும் கொடுத்து புற்றுநொய், தொழுநோய், முதுகுக்கூனல் முதலிய குணப்படுத்த முடியாத பல மனித நோய்களைக் குணப்படுத்தி காட்டியுள்ளார்கள்.
வேகவைக்காத அல்லது சமைக்காத உணவின் நற்பலன்கள்:
1. உணவுப் பொருளில் உள்ள இயற்கையான சத்துக்கள் அப்படியே மனித உடலில் கூடுகின்றன. சிறிதும் சிதைவடைவதில்லை
2. வேகவைக்காத உணவு தூய்மையானது. உடல் நலத்திற்கு ஏற்றது.
3. வேகவைக்காத உணவுக் கழிவுகள் (பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள்) போன்றவை நல்உரமாக விரைவில் மாறுகிறது. கால் நடைகளுக்கும் பிற உயிர்களுக்கும் உணவாக இக்கழிவுகள் பயன்படுகின்றது
4. வேகவைக்காத உணவால் மனிதனுக்கு இயற்கையான மனத்தூய்மை உண்டாகிறது
5. வேகவைக்காத உணவு, விலை குறைவு, அளவும் சுருக்கம், அதிகம்பாடுபடவேண்டாம், காலம் வீணாகாது, பொருளும் மீதமாகும்.
மனிதனின் வாழக்கைப் பயணம் நெடுந்தூரம் பயணிக்க இயற்கையான நல்லுணவு என்பது மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு அவசியம்
மேற்கோள்: ஆடுதுறை இயற்கை உணவுகள், திரு.இராமலிங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம், 14, அக்ரஹாரம், தியாகராஜபுரம் நரசிங்கன்பேட்டை -609 802
அருகின் மகிமை
அருகம்புல்
ஓர் புல்வகைத் தாவரம். நிலத்தில் படர்ந்து விரிந்து விரைவில் வளரும் தன்மை உடையது. அருகம்புல் அதிக மருத்துவ குணம் உடையது. இதன் தாவரவியற்பெயர் சையனடான் டாக்டிலான் (Cynadon dactylon) என்பதாகும். கிராமினேசி குடும்பத்தைச் சார்ந்தது.
அருகம்புல் பல்வேறு பிராணிகளுக்கு முக்கிய உணவாகும். மாடுகள், ஆடுகள், முயல், மண்புழு மற்றும் இதர பிற பிராணிகளும் அருகம்புல்லை முக்கிய உணவாக உட்கொள்கிறது. அருகம்புல் சாறு மனித இரத்தத்தை சுத்திகரித்து, தூய்மைப்படுத்துகிறது. நல்ல பாம்பினை கடித்துக் குதறும் கீரிப்பிள்ளை நல்ல பாம்பின் விஷம் இறங்க, அருகம்புல் நன்கு வளர்ந்து இருக்கும் இடத்திற்கு கீரிப்பிள்ளை சென்று அருகம்புல்லை நன்கு கடித்து சுவைத்து, துப்பும். பின்னர் அருகம்புல்லில் உருண்டு பிரளும். தன் உடலில் உள்ள நல்ல பாம்பின் விஷம் இரங்குவதற்காக. அருகம்புல் விவசாயப் பயிர்களுக்கு இடையில் வளரும் போது முக்கிய களைச்செடியாகிறது. இந்த அடர்ந்த களையைக் கட்டுப்படுத்த கிளைபோசேட் என்னும் களைக்கொல்லி மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.