பயனர்:TNSErubyveluchamyTNV/மணல்தொட்டி
'''பெஞ்சமின் சாமுவேல் புளும்''' பெனிசில்வேனியாவிலுள்ள, லேன்ஸ்போர்டு என்னுமிடத்தில் 12 பிப்ரவரி 1913-ல் பிறந்தார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் 1942 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று அங்கேயே கல்வித்துறையில் பயிற்றுவிப்பாளராகவும் தேர்வுத்துறை உறுப்பினராகவும் பணிபுரிந்தார். இவர் 1957-ல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு மதிப்பீடு சார்ந்த பணிமனைகள் நடத்தினார். இது இந்திய கல்வி முறையில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இவரது கல்விக்கான பங்களிப்பாக கற்றலின் வகைப்பாடு கருதப்படுகிறது.
கற்றலின் வகைப்பாடு
தொகு- அறிவு சார்ந்த வகை
- உணர்வு சார்ந்த வகை
- உடல் உள இயக்கம் சார்ந்த வகை. இந்ந வகைப்பாடுகள் குறித்து அவரது நுாலில் குறிப்பிட்டுள்ளார்
மேற்கோள்
தொகுhttps://www.boundless.com/users/233409/textbooks/introduction-to-emerging-perspectives-on-learning-teaching-and-technology/learning-and-cognitive-theories-shorts-1/bloom-s-taxonomy-11/bloom-biography-66-14461/ பார்த்த நாள் 05.07.2017
கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், வளநுால், இரண்டாம் ஆண்டு, ஆசிரியர் கல்விப் பட்டயப்பயிற்சி(2013), பக்கம் 64
அரிதாகி வரும் தாவர இனங்கள் அழிந்து விடக் கூடிய நிலையில் உள்ள தாவர இனம் அரிதாகி வரும் தாவர இனமாகக் கருதப்படுகிறது.
தாவரங்கள் அரிதாகி வருவதற்கான காரணிகள்
தொகுமனித தேவைகளான விவசாயத்திற்காக, நகர்புற மேம்பாட்டிற்காக தாவரங்களின வாழிடங்களை மாற்றி அமைத்தல், அழித்தல் போன்ற காரணங்களினாலும், காடுகளை அழிப்பதாலும், மாசுபடுத்துவதாலும் சில தாவரங்கள் மிகவும் அரிதாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் சில அரிதாகி வரும் தாவர இனங்கள்
தொகு1. குளோரோபைட்டம் டியுபரோஸம் (தண்ணீர்விட்டான் கிழங்கு) 2. அகேசியா பிளானிபிரான்ஸ் (குடை வேல்) 3. அபுட்டிலான் இன்டிகம் (துத்தி)
மேற்கோள்கள்
தொகுhttps://www.thoughtco.com/definition-and-factors-of-an-endangered-species-1181929 பார்த்த நாள்:06.07.2017 https://owlcation.com/stem/Rare-and-Endangered-plants-of-Indiaபார்த்த நாள்:06.07.2017 http://pharmaveda.com/kb/Safed%20Musali.htmlபார்த்த நாள்:06.07.2017
மேற்கோள்கள்
தொகுhttp://lifeofplant.blogspot.in/2011/03/paleobotany.html பார்த்த நாள்:14.07.2017
இந்தியாவிலுள்ள சில தாவரவியல் புங்காக்கள்
இந்தியாவிலுள்ள தாவரவியல் பூங்காக்கள் தாவர வகைகளைப் பாதுகாப்பதிலும் புதிய கலப்பின வகைகளைத் தோற்றுவிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. மக்கள் இயற்கையை நேசிக்கவும்,அதன் முக்கியத்துவத்தை உணரவும் விழிப்புணர்வை ஏற்படுததுகின்றன. 1. இந்திய தாவரவியல் பூங்கா, கல்கத்தா 2. லால் பாக், பெங்களுர் 3. அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி 4. பின்ஜோர் தோட்டம், சண்டிகார் 5. நிஷாட் பாக், ஸ்ரீநகர் 6. சரிதா உதயன், காந்திநகர் 7. லோடி தோட்டம், டில்லி 8. தொங்கு தோட்டம், மும்பை 9. சஹாரன்பூர் தாவரவியல் பூங்கா, உத்திரபிரதேசம் 10. மலப்புழா பூங்கா, கேரளா 11. எம்பிரஸ் பூங்கா, புனே
மேற்கோள்கள்
தொகுhttps://www.wiwigo.com/blog/top-11-botanical-gardens-to-visit-in-india/ பார்த்த நாள்:08.07.2017
வைகாட்ஸ்கி
| image = Lev_Vygotsky.jpg | image_size = 190px
லெவ் செம்யோனோவிச் வைகாட்ஸ்கி (1896-1934) ஒரு இரஷிய உளவியலாளர்.கல்வித்துறையில் இவரது சமூக - பண்பாட்டுக் கோட்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வைகாட்ஸ்கியின் கருத்துப்படி குழந்தைகளின் கற்றலானது சமூகத் தொடர்ரபுகளின் மூலமாகவே நிகழ்கிறது எனக்கூறுகிறார். சமூகத் தொடர்பு குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இவரது கருத்து பியாஜேயின் கருத்திற்கு மாறுபட்டு சமூகக் கற்றலே குழந்தையின் வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது எனக் கூறுகிறார்
அதிக அறிவுடைய மற்றோர்(More Knowledgeable Others (MKO))
தொகுMKO என்பது குழந்தையை (கற்போரை)விட அறிவில் சிறந்தோர் (அ) அதிக திறன்களை உடையோர். அவர்கள் பெற்றோராகவோஅல்லது ஆசிரியராகவோ அல்லது வயதில்ம மூத்தோர்களாக சில நேரங்களில் அவர்களின் சம வயதுடையோர்களும் கணினி போன்ற மின் சாதனங்களும் MKO போன்று திகழலாம்.
அடுத்தகட்ட வளர்ச்சிக்கான நிலை (Zone of Proximal Developmet (ZPD))
தொகுZPD என்பது குழந்தைகள் ( கற்போர்/மாணவர்கள்)ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கு தன்னை விட அறிவில்/திறனில் சிறந்தோர் வழிகாட்டுதலின் படி அச்செயலை செய்து முடிக்கும் நிலையாகும். வைகாட்ஸ்கியின் கருத்துப்படி குழந்தைகளின் கற்றலானது இந்நிலையிலேயே தோன்றுகிறது.
மேற்கோள்கள்
தொகுhttps://www.simplypsychology.org/vygotsky.html
தொல் தாவரவியல்
தொல் படிவத் தாவரங்கள்
தொகு1. தாவரங்களின் வரலாறு,அவற்றின் தோற்றம் வளர்ச்சி அவற்றின் அழிவு போன்றவற்றை படிக்கும் அறிவியலே தொல்படிவ தாவரவியல். தொல் தாவரவியல் பாசிகள்,பூஞ்சைகள், பெரணித் தாவரங்கள், விதைத் தாவரங்கள் பற்றி அதிகம் காணலாம்.
2. தாவரங்களின் படிவங்களைக் கொண்டு அவற்றின் புவியியல் வரலாற்றினை பற்றி இதன் மூலம் அறியலாம்.
3. இத்தாவரங்களின் இலைகள் தண்டுகள்,பழங்கள் இவற்றின் ஏதாவதொரு படிவங்களின் மூலம் அத்தாவர இனத்தைப் பற்றிஅறியலாம்.
நோக்கம்
தொகுதொல் படிவத் தாவரங்கள் பற்றி மொத்தத் தொகுப்பை வரையறுக்க.
அத்தாவரங்கள் எந்த வகைப்பாட்டினைச் சேர்ந்தவை என்பதை அறிய
அத்தாவரங்களின் பரிணாம வளர்சிசயினை அறிய
சிறப்பு வகைத் தொல் படிவங்கள்
தொகுடையாடம்ஸ் எனும் பாசிகள் சிலிக்காவினால் ஆன செல்களால் ஆனவை. இவை ஒரு செல்லினால் ஆன பாசிகள். இவற்றின் செல்கள் அழி்ந்து அவை ஒன்றிணைந்து பாறை போன்ற அமைப்பாக மாறுகின்றன. அவை 'டையாடமைட் என அழைக்கப்படுகின்றன.