பயனர்:TNSEsumathiNKL/மணல்தொட்டி
பராகுவே
தொகுதென் அமெரிக்காக் கண்டத்திலுள்ள ஒரு சுதந்தர நாடு பராகுவே. இதன் பரப்பு 4,10,000 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை சுமார் 31 லட்சம். அர்ஜென்டீனா, பிரேசில், பொலிவியா இவை மூன்றும் இதைச் சுற்றியுள்ள நாடுகள்.பராகுவே இந்நாட்டை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்நாட்டில் வேளாண்மைக்கு ஏற்ற நிலம் மிகுதியாக இருப்பினும் வேளாண்மை மிகக் குறைவு. கால்நடைகள் இங்குப் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளரும் மரங்களுள் கியூராக்கோ என்பது முக்கியமானது. கசக்கும் ஒருவகை ஆரஞ்சுச் செடியின் இலைலிருந்து வாசனைத் தைலம் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். எர்பா மாட்டே என்னும் ஒருவிதச் செடி, தேநீர் போன்ற பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. காடுகளில் புலி,மான், எறும்புத்தின்னி முதலியன வாழ்கின்றன. குவாராணி என்னும் அமெரிக்க இந்தியர்களே இந்நாட்டின் பழங்குடிகள். பின்னர் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஸ்பானியர்கள் இங்கு வந்துள்ளனர். கத்தோலிக்கக் கிறிஸ்தவமே இந்நாட்டின் முக்கியமதம். தலைநகர் ஆசூன்சியான் . இது பராகுவே ஆற்றின் கரையில் உள்ளது.[1]