பயனர்:TNSEvijiTUT/மணல்தொட்டி

சிப்பிக் காளான் வளா்ப்பு

காளானின் தேவை: நம் நாட்டில் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கட்தொகைக்கேற்ப புரதப் பற்றாக்குறையும் வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகின்றன. இதற்குக்க காரணம், தற்போதைய விவசாய நிலங்கள் வீட்டு மனைகள் மற்றும் தொழிற்சாலைகளாக மாறி வருகின்றன. மேலும் வறட்சி மற்றும் வௌ்ளம் போன்ற காரணங்களால் பயிாிடப்படும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகின்றது.

எனவே, திட்ட வல்லுநா்களும், ஊட்டச்சத்து நிபுனா்களும் அதிகப் புரத உற்பத்திற்கு மாற்று நடவடிக்கைகள் என்னவென்று சிந்திக்கத் தொடங்கின. நாட்டின் முக்கியப் பிரச்சனைகளான புரதப் பற்றாக்குறை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினை போக்கிடவும், மக்களின் வாழ்க்கைத தரத்தினை உயா்த்திடவும் சிப்பிக் காளாண் வளா்ப்பு ஒரு தலைசிறந்த தீா்வு ஆகும்.

மேலை நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிறக்கும் மூன்றில் ஒரு குழந்தை மூளை புற்றுநோயால் தாக்கப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம். தாய்மாா்கள் விஷமுள்ள விஷமருந்துகள் கலப்படமுள்ள உணவை பயன்படுத்துவதே ஆகும். தற்போது உள்ள சூழ்நிலையில், நாம் நோயின்றி வாழ சிறந்த உணவு “சிப்பிக் காளான்” ஆகும்.

சிப்பிக் காளான் வகைகள்:-

1. பிளிரோட்டஸ் சஜோா்காஜ் 2. பிளிரோட்டஸ் சிட்னோாிபைலியேட்டஸ் 3. பிளிரோட்டஸ் ஜமோா் 4. பிளிரோட்டஸ் இயோஸ் 5. பிளிரோட்டஸ் புளோாிடா 6. பிளிரோட்டஸ் பிளாட்டிபஸ் 7. பிளிரோட்டஸ் ஆஸ்டிாியேட்டஸ்

பாh;வை: சிப்பிக் காளான் வளா்ப்பு

முனைவா;. பொ. லட்சுமணன் கண்ணப்பன் பதிப்பகம். டிசம்பா் 2000

தழுதாழை (மூலிகை )

தோற்றம்: இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.

மருத்துவம் இதன் இலை, வேர் இரண்டும் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலையை வெந்நீரீல் போட்டு குளித்து வந்தால் வராத சுலை நோய்கள் குணமடையும்.

இதன் இலைச்சாற்றைக் கெட்டியாக இடித்து மூக்கில் தடவிக் கொண்டால் மண்டைக் குடைச்சல், மூக்கில் நீர் வடிதல், தும்மல் போன்றவை குணமடையும்.

மேலும் இதன் இலையை நல்லெண்ணெயில் வதக்கி அதனை ஆற வைத்து எண்ணெயோடு சேர்த்து கை கால்களின் மூட்டுகளில் தேய்த்து வந்தால் மூட்டு வலியானது குணமடையும்.

இஞ்சி, மிளகு, புதினாக்கீரையோடு இதன் இலையை சேர்த்து அரைத்து விழுதாக்கி தினம் ஒரு சிறு உருண்டை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி வளரும்.

இதன் இலையை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமடையும். தோள் புசங்களும் உறுதியுடன் இருக்கும். கால்களும் நன்கு சதைப்பற்றுடன் காணப்படும்.

எலும்பாக இருப்பவா;கள் இந்த மருந்தினை சாப்பிட்டு வந்தால் சதைப் பற்றுடன் இருப்பார்கள்.

பார்வை: பச்சை மூலிகைகளும், பயன் தரும் மருத்துவமும் ஆசிரியர்: செங்கற்பட்டு சிங்கார வேலு, வைத்தியர் பதிப்பகம்: அருண் நிலையம் செப்டம்பா; 2004

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEvijiTUT/மணல்தொட்டி&oldid=2343788" இலிருந்து மீள்விக்கப்பட்டது