பயனர்:TSESenthil0427/மணல்தொட்டி
அறிவியல் துணுக்குகள் 1, பாலை காய்ச்சும்போது அது ஏன் பொங்கி வருகிறது?
1, பாலை காய்ச்சும்போது அது ஏன் பொங்கி வருகிறது?
2.தண்ணீரைக் காய்ச்சும்போது ஏன் பொங்குவதில்லை?
பதில்-- பால் என்பது தண்ணீர் , புரதம்,மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப்பொருட்கள் அடங்கிய கலவை.
பாலில் உள்ள கொழுப்புப்பின் அடர்த்தி ( Density) தண்ணீரின் அடர்த்தியைலவிட குறைவாக இருப்பதால் பாலின் மேற்பரப்பில் அவை மிதக்கின்றன.
தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 டிகிரி சென்டிகிரேட் . ஆனால் பாலில் உள்ள கொழுப்பு 50 டிகிரி சென்டிகிரேட்ல் உருக ஆரம்பித்து விடும். பாலை காய்ச்சும்போது வெப்பம் 50டிகிரி சென்டிகிரேட் வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது.
எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக்குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும்.
பால் சூடடையும் போதும் காற்றுக்குமிழ்கள் உருவாகி மேலே வரும்.மேற்பரப்பில் கொழுப்புப்படலம் ஏடாகப்படிந்து இந்த குமிழ்கள் வெளியேறுவதைத்தடை செய்வதால் , சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக்குமிழக்ளாக மாறி அந்த ஏட்டுப்படலத்தோடு மெலெழும்பி பொங்கி வழிகிறது.
2, பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து கிண்டிக்கொண்டேயிருந்தால் மேற்பரப்பில் ஏடு படிவது தடுக்கப்படுகிறது.
தோன்றும் காற்றுக்குமிழ்கள் வெளியேறிவிடும் எனவே பால் பொங்கி வழிவது தடுக்கப்படுகிறது.
3, தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, பரதங்களோ இல்லை. எனவே மேற்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை.
காற்றுக்குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம். எனவே நீரைக்கொதிக்க வைக்கும் போது அது பொங்குவதில்லை.
இரா.செந்தில்குமார், நங்கவள்ளி.