பயனர்:Tashim210911/மணல்தொட்டி
ஆசிய அருங்காட்சியகம் (Asian Civilisation Museum) நஃபிஸாஹ் தஸ்னிம்- உயர்நிலை 2 கிரசண்ட் பெண்கள் பள்ளி “எவன் ஒருவனுக்குத் தன் கடந்த காலம், தோற்றம் கலாச்சாரம் மரபு பற்றிய எவ்வித அறிவும் இல்லையோ அவன் வேர்கள் இல்லாத மரம் போலாவான்.” என்ற பொன்மொழி உண்மைதான். ஒருவரின் கலாச்சாரம், வரலாறு, மரபு அவரது தனித்துவ அடையாளமாகும். இவ்வடையாளத்தைக் கட்டிக்காப்பது ஒவ்வொருரின் கடமையாகும். ஒரு சின்னஞ்சிறு சிவப்புப் புள்ளியான நமது சிங்ககாரச் சிங்கப்பூருக்கு ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட வரலாறும் மரபும் உள்ளன. நாம் இதைப் பொன்னான நான்கு அருங்காட்சியகங்களில் கட்டிக் காத்து வருகிறோம். அந்நான்கு அருங்காட்சியங்கள் பெரனாக்கான் அருங்காட்சியகம், சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம், சிங்கப்பூர் ஆசிய அருங்காட்சியகம், சிங்கப்பூர் கலை அருங்காட்சியகம் ஆகியவையாகும். இதில் ஆசிய அருங்காட்சியகத்தைப் பற்றியே இக்கட்டுரை விளக்குகிறது. ஆசிய அருங்காட்சியகம் 1993-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது முன்னாள் துணை பிரதமராக இருந்த திரு லீ சீயன் லூங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இக்காட்சியகம் முதலில் தொடங்கியபோது பத்து காட்சிக் கூடங்களே இருந்தன. அருங்காட்சியகத்தினுடைய வரலாற்றுக் காலணித்துவ ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அருகாட்சியகத்திலிருந்து வந்த பொருள்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இத்தொகுப்பில் பெரும்பாலான பகுதி தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த பொருள்களாகும். தென்கிழக்காசியாவின் பழங்குடியினர் பயன்படுத்திய கைவினைக் கருவிகள் ஆயுதங்கள், பயன்படுத்திய பாத்திரங்கள், உடை போன்றவைக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இன்று, அருங்காட்சியகம் தன் வரலாற்றுத் தொகுப்புகளை முழுமையாக ஆசியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க தன்னை அர்ப்பணித்துள்ளது. தற்போது சீனா, தென்கிழக்காசிய நாடுகள், இந்தியா இஸலாமிய உலகம் ஆகிய நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆசிய அருங்காட்சியகம் இந்நான்கு கலாச்சாரங்களில் உள்ள இணைப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், சிங்கையின் ஒரு அருங்காட்சியகம் என்ற அடிப்படையில் சிங்கப்பூரின் வளமான வரலாற்றால் உருவாக்கப்பட்டு பல்லின சமூகத்தின் சிறப்பை ஊக்குவிக்க முற்படுகிறது. நம் அருங்காட்சியகம் பயணாளர் தேர்வு விருதில் சிறந்த அருங்காட்சியகத்தின் பிரிவில் 2014-15 ஆம் ஆண்டின் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்து காட்சிக் கூடங்களுடன் தொடங்கப்பட்ட இவ்வருங்காட்சியகம் இன்று உலகின் மிகவும் விரிவான தொகுப்பைக் கொண்டுள்ள அருங்காட்சியகங்களுள் ஒன்று. ‘சிறு துளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப சிறிய அளவில் தொடங்கப்பட்ட இக்காட்சியகம் இன்று பலநாட்டுக் கலாசாரத்தை அறிந்துகொள்ளும் இடமாக மிளிர்கிறது.
(முற்றும்)