பயனர்:Tharun Ram K/மணல்தொட்டி


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு:

“வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு தமிழுக்கு புகழை சேர்த்த இவரது மிகச்சிறந்த படைப்பு இந்த திருக்குறள் எனும் நூல். உலக மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கை முறையில் சரியான வழியில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று தனது 133 அதிகாரங்கள் மூலம் பல வருடங்களுக்கு முன்பே தெளிவாக எடுத்துரைத்தவர் திருவள்ளுவர்.

பெருவாயின் முள்ளியார்:

முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி என்ற (எயில் - மதில்; மூன்று மதில்களை அழித்தவன் சிவபெருமான்) சிறப்புப் பாயிர அடிகளால் இவர் சைவ சமயத்தவர் எனலாம். ஆசிரியருடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பர். இந்நூல் பாயிரம் நீங்கலாக நூறு வெண்பாக்களைக் கொண்டது.


ஒற்றுமை:

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம். அது வீடுபேறு அடைய உதவும் என்பதால், உயிரைவிட மேலானதாகப் போற்ற வேண்டும். ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லொழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும், உலகத்துடன் ஒத்திசையும்படி நடப்பவரே கற்றறிந்தவர் என திருவள்ளுவர் ஒழுக்கம் அதிகாரத்தில் கூறுகிறார்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்"


ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.


"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலர் தார்"


உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களை கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.


ஆசாரக் கோவை:

"நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,

இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,

ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,

நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்

சொல்லிய ஆசார வித்து. . . . ."

நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டும் நல்லொழுக்கங்கட்குக் காரணம் என ஆசராக் கோவை கூறுகிறது. ஒருவர் ஒழுக்கம் தவறாமல் இருப்பதால் செல்வம், அழகு, கல்வி, நோயின்மை போன்ற செல்வங்களை பெறுவர்.


"வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்

நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே

முந்தையோர் கண்ட முறை"

மேற்கண்ட பாடல் எந்த செயலைச் செய்தாலும் பெற்றோரை வணங்கித் தொடங்க வேண்டும் எனக் கூறுகிறது.


மேர்கண்ட கருத்துக்களைப் போன்று இவ்விரு நூல்களிலும் ஒழுக்கமும் அதன் முக்கியத்துவமும், நம் அன்றாட வாழ்வில் அதைப் பயன்படுதுவதால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கமாகவும், எளிதாய் புரிந்து கொள்ளும் வகையிலும் கூறப் பட்டுள்ளது. மனித வாழ்வில் இன்றியமையாத பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது ஒழுக்கம் என்பதை இவ்விரண்டு நூல்களும் உரைக்கின்றன.


வேற்றுமை:

"உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,

தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்

பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,

உண்க, உகாஅமை நன்கு! 20"


                       ஒருவன் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவை கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும். இவ்வாறு அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளவேண்டிய ஒழுக்கங்களை ஆசாரக்கோவை கூறுகிறது.


"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி"


ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

இவ்வாறு, திருக்குறளில் ஒளுக்கதால் நாம் அடையும் பயன்களையும், அதனால் நாம் நம் வாழ்வில் அடையும் மேன்மையையும், ஒலுக்கதால் ஒருவன் கல்வி, செல்வம், அழகு, உடல் நலம், போன்ற அனைத்து செல்வங்களையும் பெற்று உயரலாம் எனக் கூறுகிறது.

                       ஆசாரக்கோவையில் அன்றாட வாழ்வில் நாம் எந்த எந்த செயலைச் செய்வதால் நாம் ஒழுக்கம் உடையவர்களாக போற்ற படுவர் என்பதைப் பற்றிய கருத்துக்களைக் கூறுகிறது.

முடிவுரை:

                       நல்லொழுக்கம் எனப்படுவது மனிதர்களை நல்வழிப்படுத்தும் சிறந்த ஆயுதமாகும். எமது முன்னோர்கள் ஒழுக்கம் தவறினால் தம் குலத்திற்கே இழுக்கு என்று கருதி நல்லொழுக்கத்தை பேணி வாழ்ந்தார்கள். தவறான வழியில் செல்லாமல் நற்பழக்கவழக்கங்களை பின்பற்றுதலே ஒருவரிற்கு மேன்மையான வாழ்வை பெற்றுத் தரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tharun_Ram_K/மணல்தொட்டி&oldid=3699196" இலிருந்து மீள்விக்கப்பட்டது