இலங்கை யாழ்ப்பாணத்து கரவெட்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்டவர். சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள், பாகீரதி அம்மாளின் மூத்த புத்திரனாக இவர் 1972.01.24 ஆம் திகதியன்று பிறந்தவர்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டியிலுள்ள யா/. திரு இருதயக்கல்லூரி, யா/ மாணிக்கவாசகர் வித்யாலயத்திலும் அதன்பின் யா/ ஹாட்லி கல்லூரியிலும் கல்வி கற்றவர்.

இளைஞரான இவர் புத்தாக்க முயற்சியில் ஈடுபாடுடையவர். இவர் தற்போது கொழும்பில் சுயாதீன கணனி தொழிநுட்பவியலாளராகவும், புத்தக வடிவமைப்பாளராகவும் இயங்குகிறார். அத்துடன் முதன்முதலில் இலங்கையில் சமஸ்கிருத கிரந்த எழுத்துருக்களை உருவாக்கத்தில் காலஞ்சென்ற திரு ஹரிஹரசர்மா, திரு ஸ்கந்ததாஸ சர்மா இருவருடனும் பங்குபற்றியுள்ளார். அத்துடன் அநேக கிரந்த லிபி நூல்களை அச்சிடுவதிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.

இவரைப்பற்றி மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா பின்வருமாறு கூறுகிறார்


மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்கள்

தொகு

- டொமினிக் ஜீவா

திரு. எஸ். திவாகரன்

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அச்செழுத்தைக் கொண்டே மல்லிகையை அச்சுக் கோர்த்து மாதா மாதம் வெளியிட்டு வந்தேன். பின்னர் நிலம் பெயர்ந்து, கொழும்பிலேயே வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

அச்சுக் கலை அபார வளர்ச்சி கண்டுள்ள சூழ்நிலையில் மல்லிகையையும் கணினி மயப்படுத்தி வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்ட காலத்திலேயே நண்பர் எஸ்.திவாகரன் எனக்கு அறிமுகமானார்.

அபாரமான திறமைசாலி. நவீன அச்சகச் சாதனங்களை மல்லிகை பாவிக்க வேண்டும் என ஆரம்பகாலத்திலேயே எனக்கு அறிவுறுத்தியதுடன் அதைச் செயற்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிப்பவர் இவர்.

இலக்கிய ஆர்வமும் கலைப் பிரக்ஞையும் கைவரப் பெற்ற இவரது ஆளுமையின் வெளிப்பாடகவே மலர்ந்தவைதான், பல மல்லிகை மலர்கள். பல மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்.

கலை இலக்கியப் பாரம்பரியம் கொண்ட இவர், தொழிலாக இல்லாமல், கலைத்துவ உணர்ச்சிக்குட்பட்டே மல்லிகையின் வளர்ச்சிக்குப் பல்வகைகளிலும் உதவி செய்து வந்துள்ளார்.

கணினி தொழில் நுட்பத் துறையில் கொழும்பில் இயங்கி வரும் நிபுணத்துவம் மிக்கவர்களில் இவர் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.

மிக மிக அடக்கமாக வாழும் இவரிடம் அபார திறமைகள் அடங்கிப் போயுள்ளதை இவருடன் நெருங்கிப் பழகியவர்களே சட்டெனப் புரிந்துகொள்வார்கள்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thivagaren/Intro&oldid=3146386" இலிருந்து மீள்விக்கப்பட்டது