பயனர்:Tkgs1611/மணல்தொட்டி
அதிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், தண்ணீர் விநியோகம், மற்றும் தூய்மை தொடர்பாக சிங்கப்பூர் பல விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து வரும் தண்ணீரை சார்ந்து இருப்பதை குறைப்பதற்காக கடல் நீர் உப்பு. நீக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்கப்பூரின் அணுகுமுறை உள் கட்டமைப்பை மற்றும் நம்புவதில்லை, முறையான சட்டம் மற்றும் அமலாக்கம், நீர் விலை மதிப்பீடு, பொதுக்கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.
அதிக மக்கள்தொகை கொண்ட நிலமான சிங்கைக்கு நீர் மிக முக்கியமானது. சிங்கப்பூருக்கு சராசரியாக ஒரு வருடத்திற்கு 2400 மில்லியன் மழைநீர் கிடைக்கிறது. அது உலக மழைநீர் அளவான 1050 மில்லியனை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் நிலப்பற்றாக்குறை உள்ள நாடான சிங்கையில் மழைநீரைப் பிடித்து வைத்து கொள்ள முடியாதததும் இயற்கையான நீர் தேக்கங்களும் ஆறுகளும் இல்லாதத நிலைமையும் முக்கிய பிரச்சனைகள் ஆகும்.
அதனால் சிங்கப்பூர் தண்ணீருக்கு நான்கு நீர் வளங்களான ‘நீர் குழாய்கள்’ என்பவற்றை நம்பி இருக்கிறது. முதல் நீர் வளம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீராகும். செயற்கை நீர்த்தேக்கங்களில் சேகரிக்கப்படும் மழைநீராக வருவது தான் இத்தண்ணீர். இரண்டாவது நீர் வளம் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தண்ணீர் ஆகும். மலேசியா சிங்கப்பூருக்கு ஒவ்வொரு நாளும் 250 காலன்கள் நீர் கொடுக்கிறது.
மூன்றாவது நீர் வளம் நீயுவாட்டர் எனும் மீட்டெடுக்கப்பட்ட தண்ணீராகும். இத்தண்ணீர் பழைய தண்ணீரை சுத்திகரித்து, புதுப்பித்து தயாரிக்கப்படும் தண்ணீராகும். இது நமக்கு 115 மில்லியன் காலன்களை தருகிறது. அது சிங்கப்பூரின் தண்ணீர் தேவைகளுக்கு முப்பது விழுக்காடுதான் பங்களிக்கிறது. கடைசியாக உப்பு நீக்கத்திலிருந்து வரும் தண்ணீராகும். கடல்நீரை சேகரித்து அதில் உள்ள உப்பை நீக்குவதே இந்த முறை. இது சிங்கப்பூரின் தேவைகளில் பத்து விழுக்காடு தான் பங்களிக்கிறது. இவ்வாறே நமக்கு சிங்கப்பூரில் தண்ணீர் கிடைக்கிறது.