பயனர்:Tnse.jothi.tvm/மணல்தொட்டி

இராமலிங்க அடிகள்
வள்ளலார்

வள்ளலார்
வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்க அடிகள்.
பிறப்பு : 05:10:1823
மறைவு : 30.01.1874

இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் இராமையாபிள்ளை - சின்னம்மையார். இவர் ஓர் ஆன்மீகவாதி, சமய போதகர், சமூக சீர்திருத்தவாதி, சித்த மருத்துவர், தமிழ் எழுத்தாளர். திருவருட்பா, மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவரது நூல்களாகும். இவரது திருவருட்பா ஆறு பகுதிகளாக பிரித்து ஆறு திருமுறைகளாக வெளியிடப்பட்டுள்ளது.
இவர் சமரச சுத்த சன்மார்க்க நெறியை உலகிற்கு எடுத்துரைத்தார். அனைத்து மத நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தருமச்சாலையையும் நிறுவினார். மேலும் அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவினார். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய கருணை மனம் கொண்டவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse.jothi.tvm/மணல்தொட்டி&oldid=2313421" இலிருந்து மீள்விக்கப்பட்டது