பயனர்:Tnse geosen tvr/மணல்தொட்டி

அரித்துவாரமங்கலம் கிராமத்தின் அமைவிடம் மற்றும் வரலாறு தொகு

அரித்துவாரமங்கலம் கிராமமானது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கிராமம் ஆகும். பத்து உள் கிராமங்கள் சோ;ந்து அரித்துவாரமங்கலம் ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இக்கிராமமானது வட்டத் தலைநகரிலிருந்து 16 கி.மீ. தொவைலில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள நகரம் அம்மாப்பேட்டை ஆகும். இக்கிராமமானது 10 டிகிரி.83’ வடக்கு அச்சரேகை மற்றும் 79டிகிரி.35’ கிழக்கு தீர்க்கரேகை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மேலும் இக்கிராமத்தின் புவியியல் பரப்பானது 725.84 ஹெக்டர் ஆகும். இன் வடக்கே கும்பகோணம், தெற்கே நீடாமங்கலம், மேற்கே தஞ்சாவூர், கிழக்கே குடவாசல் ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.

பெயர் காரணம் தொகு

அழகிய பழமையான இவ்வூர் முற்காலத்தில் இரண்டு கிராமங்களாக பிரிந்து இருந்தது. ஒன்று ஹரிதுவாரகபுரம் மற்றொன்று அரதைபெரும்பாழி ஆகும். பிற்காலத்தில் இந்த இரண்டு ஊர்களும் இணைத்து “அரித்துவாரமங்கலம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த கிராமம் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டதால் ‘மங்கலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

வேளாண்மை தொகு

இவ்வூரில் மண்வளமும், நீர்வளமும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு முதன்மைத் தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயத்திற்கு வேண்டிய நீர்பாசன வசதியை அருகில் உள்ள வெண்ணாறு வழங்குகிறது. இங்கு, நெல், பருத்தி, பயறு, உளுந்து ஆகிய தானியங்கள் விளைகின்றன. மேலும், புளியமரம், மாமரம், பனைமரம், வேம்பு, தென்னந்தோப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.

போக்குவரத்து தொகு

திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமானுக்கும், அம்மாபேட்டைக்கும் இடையில் அரித்துவாரமங்கலம் அமைந்துள்ளது. வலங்கைமானிலிருந்து அமராவதி வழியாக 12 கி.மீ. தொலைவிலும், அம்மாப்பேட்டையிலிருந்து வடக்கே அவளிவநல்லூர் வழியாக 11 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு அரசுப்பேருந்து போக்குவரத்து மட்டுமே உள்ளது. மேலும் இங்கு அஞ்சல் அலுவலகம் அரசு மருத்துவமனையும், காவல் நிலையமும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_geosen_tvr/மணல்தொட்டி&oldid=2315696" இலிருந்து மீள்விக்கப்பட்டது