பயனர்:Tnse manivannan kar/மணல்தொட்டி 2
லூனி ஆறு
லூனி ஆறு இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலத்தில் பாய்கிறது. இந்த ஆறு அஜ்மீருக்கு அருகிலுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் புஸ்கர் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இந்த நதி தார்பாலைவனத்தின் தென்கிழக்கு பகுதி வழியாக பாய்கிறது. இது குஜராத் மாநிலத்தில் ரான்ஆஃப் கட்ச் சதுப்புநிலப்பகுதியிலன் வழியாக கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 495 கி.மீ. ஆகும். இது முதன் முதலில் சாகர்மதி என்று அழைக்கப்படுகிறது. இந்நதி கோவிந்த்கர் வழியாக சென்று அதன் கிளை நதியான சர்சுதியுடன் கலக்கிறது. இது புஸ்கர் ஏரியிலிருந்து உருவான நதியாகும். அதன் பிறகு இந்நதி லூனி என்று அழைக்கப்படுகிறது.
1892-ல் ஜோத்பூர் பேரரசர் ஜஷ்வந்த் சிங் பிஜியாக் கிராமத்தில் பிலரா மற்றும் பாவி-க்கு இடையில் ஜஷ்வந்த் சாகர் ஏரியைக் கட்டினார்.இது இந்தியாவில் உள்ள பெரிய செயற்கை ஏரிகளுள் ஒன்றாகும்.இவ்வேரியிலிருந்து 12000 ஏக்கர் நிலப்பகுதி நீர்ப்பாசன வசதி பெறுகிறது.
சொல் வரலாறு
தொகுலூனி என்பது லாவனரவி அல்லது லாவனவதி என்றும் அறியப்படுகிறது.இதன் பொருள் சமஸ்கிருதத்தில் உப்பு ஆறு ஆகும். இவ்வாற்று நீர் அதிக உவர்ப்புத் தன்மை கொண்டது.
மேற்பார்வை
தொகுலூனி ஆற்றுப்படுகை 37,363 கி.மீ2 ஆகும். இது இராஜஸ்தானில் உள்ள அஜ்மீர், பார்மர், ஜலோர், ஜோத்பூர், நாகெளர், பாலி மற்றும் சிரோகி, மாவட்டங்களிலும், குஜராத்தில் உள்ள பனாஸ்கன்ந்தா மற்றும் பாட்னா மாவட்டங்களிலும் பாய்கிறது. இவ்வாற்றின் முக்கிய கிளை நதிகள் இடது புறத்தில் இருந்து சுக்ரி, மித்ரி, பன்டி, காாி, ஜாவாய், குகியா மற்றும் சாகி, வலதுபுறத்தில் இருந்து இருந்து ஜோசாாி ஆறு ஆகியன பாய்கின்றன. லூனி ஆறு மேற்கு ஆரவல்லி மலைத் தொடாில் 550 மீ உயரத்தில் இருந்து புஸ்கர் பள்ளத்தாக்கில் அஜ்மீருக்கு அருகில் உருவாகிறது. இந்த இடத்தில் இந்த ஆறு சாகர்மதி என்றழைக்கப்படுகிறது. இந்த ஆறு தென்மேற்குத் திசையில் பாய்ந்து இராஜஸ்தானில் மார்வர் பகுதியில் உள்ள மலைகள், நிலப்பகுதிகள் வழியாகப் பாய்கிறது. இந்த ஆறு ரான் ஆப் கட்ச்க்குள் நுழைவதற்கு முன்பு தார் பாலைவனத்துக்குள் நுழைகிறது. இந்த ஆறு 495 கி.மீ. தூரம் பயணம் செய்து இவ்விடத்தை அடைகிறது. இந்நதி நீர் உப்புத் தன்மை கொண்ட போதிலும், அப்பகுதிக்குப் பாசனத்திற்குப் பயன்படும் முதன்மையான ஆறு இது ஆகும். லூனி ஆறு பலோட்ராவை அடையும் வரை தூய்மையான நீரைக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மண்ணில் இருக்கும் உப்புத் தன்மையினாலேயே இந்த ஆற்று நீர் உவர்ப்புத்தன்மை கொண்டது.
சான்றாதாரம்
தொகுமேற்கோள்கள்
தொகு- Luni Basin (Department of Irrigation, Government of Rajasthan)
- Luni tributaries (Department of Irrigation, Government of Rajasthan)
வார்ப்புரு:Hydrography of Rajasthan வார்ப்புரு:Waters of South Asia