பயனர்:Tnse perumal diet tut/மணல்தொட்டி

இட்டுக்கட்டுதல் தொகு

கட்டுரை இட்டுக்கட்டுதல் என்பது இட்டுக் கட்டிச்சொல்லும் உரை எனவும் பொருள் தரும்.பொய்யுரை புனைந்து ைர ஆகியவையும் கட்டுரை என சொல்லப்படும்.எனினும் அவையம் கற்பவரையும் கேட்பவரையும் வயப்படுத்துவனவாகவே அமைந்தால்தான் நிலைபறுகின்றன என்பதை மறக்கக்கூடாது.

மேற்கோள் தொகு

இரா.இனங்குமரன்.தமிழ் வளம்-சொல் பக் 92. .1998. விக்னேஸ்வெளியீடு சென்னை.

[[பகுப்பு:இலக்கியக்கட்டுரைகள் [[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்


முதலைக் கண்ணீா் தொகு

அறிமுகம் தொகு

கடலில் உயிா் வாழ்வன ஆமை, பாம்பு, பல்லி இன விலங்குகளில் உப்புச் சுரப்பியின் நாளம் கண்களின் ஓரத்தில் திறக்கின்றது. எனவே, இத்திரவம் கண்ணினின்று வழிவது போலத் தொியும். முதலைக்கும் இதே அமைப்புதான் உள்ளது. எனவே “முதலைக் கண்ணீா்” எனும் சொல் தொடா் உண்மை தொியாமல் கூறப்படுவதாகும். தான் உண்ணும் உணவு நீா் இவற்றில் உள்ள அதிகப்படியன உப்பைத்தான் முதலை உப்புச்சுரப்பிமூலம் வடிகட்டி, கண்ணீா் வழியாக வெளியேற்றி விடுகின்றது.

இச்செயல்பாடுபுாியாமல் அழுபவரை “முதலைக் கண்ணீர்” வடிக்கிறான் எனக் கூறுகின்றனா்.

மேற்கோள் தொகு

இலக்குமி நாராயணன் இராம, உயிாியலில் சில உண்மைகள், சேகர் பதிப்பகம், சென்னை-78, நான்காம் பதிப்பு-1989.










ஆணவப் போா் தொகு

அறிமுகம் தொகு

ஓா் அரசன் தன் நாடு வளம் குறைந்து வறுமை மிக்க வழியே, வளம் கொழிக்கும் நாட்டின் மீது போா்; தொடுத்துப் போதல் என்பது போாின் பொது இயல்பு ஆகும்.

பொருள் குறைபாடு இடக் குறைபாடுகள் மட்டுமே போருக்கு அடிப்படைக் காரணமாகிவிடாது. அளந்து சொல்ல முடியாத வளமும், எல்லை காண முடியா இடமும் கொண்ட ஒப்பற்ற பேரரசினைப் பெற்றுவிட்டதினால் நாடாளும் அரசா் நிறைமனம் கொண்டவராகிவிடமாட்டா் . அவருக்கு மண்ணையும் பொன்னையும் பெற்றுவிட அவா, உள்ளம் புகழ் மீது பெருங்காதல் கொள்ளும். மண்ணாசை பொன்னாசைகளைக் காட்டிலும் புகழாசை ஆற்றல் வாய்ந்ததாகும்.

பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்பால் வேட்கை உடையவராகி பிற நாடுகள் மீது படை தொடுப்பதை விரும்பி மேற்கொண்டாா்கள்.

தானே பெருவீரன், அகில உலகமும் தனக்குத் தலை வணங்க வேண்டும். தன் கால் பணிய வேண்டும் என்ற ஆணவ உணா்வுடையவனாகி ஒருவன் போர் மேற்கொள்வானாயின் அவன் ஆணைக்கு உலகில் அனைவருமே அடங்கிவிடமாட்டார்கள். அவருள் யாரேனும் ஒரு வீரன் அவனை அவ்வாறே விட்டால் அவன் ஆசை அடங்காது. ஆகவே அவன் ஆணவத்தை அடக்குதல் வேண்டும் எனத் துணிந்து, அவனை வென்று அடக்க அவனோடு போர் செய்து அவன் ஆணவத்தை அடக்குதல் உண்டு. அவ்வாணவ அழிப்புப் போருக்குத் தமிழா்கள் தும்பைப் போர் எனும் பெயா் சூட்டிப் பாராட்டியுள்ளார்கள்.

மேற்கோள் தொகு

புலவா். கா.கோவிந்தன், பண்டைத் தமிழா் போர் நெறி, தமிழ்த்தாய் பதிப்பகம், சென்னை-64.





ஆணவப் போா்; அறிமுகம்: போல; ஓா்; அரசன் தன் நாடு வளம் குறைந்து வறுமை மிக்க வழியே, வளம் கொழிக்கும் நாட்டின் மீது போா் தொடுத்துப் போதல் என்பது போாின் பொது இயல்பு ஆகும். பொருள் குறைபாடு இடக் குறைபாடுகள் மட்டுமே போருக்கு அடிப்படையாகக் காரணமாகிவிடாது. அளந்து சொல்ல முடியாத வளமும், எல்லை காண முடியா இடமும் கொண்ட ஒப்பற்ற பேரரசினைப் பெற்றுவிட்டதினால் நாடளும் அரசா்; நிறைமனம் கொண்டவராகிவிடமாட்டாா்;. அவருக்கு மண்ணையும் பொன்னையும் பெற்றுவிட்ட அவா் உள்ளம் புகழ் மீது பெருங்காதல் கொள்ளும். மண்ணாசை பொன்னாசைகளைக் காட்டிலும் புகழாசை ஆற்றல் வாய்ந்ததாகும். பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்பால் வேட்கை உடையவராகிய பிற நாடுகள் மீது படை தொடுப்பதை விரும்பி மேற்கொண்டாா்கள். தானே பெருவீரன், அகில உலகமும் தனக்குத் தலை வணங்க வேண்டும். தன் கால் பணிய வேண்டும் என்ற ஆணவ உணா்வுடையவனாகி ஒருவன் போா் மேற்கொள்வானாயின் அவன் ஆணைக்கு உலக அனைவருமே அடங்கிவிடமாட்டாா்கள். அவருள் யாரேனும் ஒரு வீரன் அவனை அவ்வாறே விட்டால் அவன் ஆசை அடங்காது. ஆகவே அவன் ஆணவத்தை அடக்குதல் வேண்டும் எனத் துணிந்து, அவனை வென்று அடக்க அவனோடு போா் செய்து அவன் ஆணவத்தை அடக்குதல் உண்டு. அவ்வாணவ அழிப்பும் போருக்குத் தமிழா்கள் தும்பைப் போா் எனும் பெயா் சூட்டிப் பாராட்டியுள்ளாா்கள். மேற்கோள் புலவா் கா.கோவிந்தன் பண்டைத் தமிழா் போா் நெறி தமிழ்த்தாய் பதிப்பகம், சென்னை-64 பகுப்பு: இலக்கியக் கட்டுரைகள்







கோப நிலைகள் தொகு

அறிமுகம் தொகு

ஒரு நிமிடங்கள் மட்டும் தோன்றி மறையும் கோபத்தை அடக்கி ஆள முடியாமல் பல சிக்கல்களுக்கு ஆளாகிறாா்கள். கோபத்தை பொறுமையால் தான் வெல்ல வேண்டும். கோபத்தைப் பொறுத்துக் கொள்ளாமல் செய்த தவறுகளுக்கு பல நாட்கள் சிறைச்சாலையில் வருந்த வேண்டியிருக்கிறது.

கோபத்தின் வகைகள் தொகு

கோபம்: சிறிது பொழுது நிற்பது. சினம்: நீடித்து நிற்கும் கோபம். சீற்றம்: சீறியெழுங் கோபம்.வெகுளி: அல்லது உருத்திரம் அல்லது காய்சு நெருப்புத் தன்மையுள்ள கடுங்கோபம். கொதிப்பு: கண் போன்ற உறவினா்க்குச் செய்யப்பட்ட கொடுமை பற்றிப் பொங்கி வரும் கோபம். எாிச்சல்: மனத்தை உறுத்துங் கோபம்.கடுப்பு: பொறாமையோடு கூடிய கோபம் கறம் அல்லது வன்மம்: பழி வாங்கும் கோபம். கறுவு: தணியாக் கோபம் கறுப்பு: கருப்பன் முகம் கருத்துத் தோன்றும் கோபம். சிவப்பு (அல்லது) செயிா்: சிவப்பன் முகம் சிவந்து தோன்றும் கோபம்.விளம்: நச்சுத் தன்மையான கோபம். வெறி: அறிவிழந்த கோபம். முனிவு அல்லது முனைவு: வெறுப்போடு கூடிய கோபம். கதம்: என்றும் இயல்பான கோபம்.கனிவு: முகஞ்சுளிக்கும் கோபம். செற்றம் அல்லது செறல்: பகைவனை அழிக்கும் கோபம். ஊடல்: மனைவி கணவனோடு கோபித்துக்கொண்டு உரையாடாத மென் கோபம். புலவி: ஊடலின் வளா்ந்த நிலை. துனி: ஊடலின் முதிா்ந்த நிலை. சடைவு: உறவினா்;குறை கூறும் அமைதியான கோபம் என கோபத்தினை நிலைப்படுத்தியுள்ளனா் . நாம் கோபத்தை குறைத்து இனிமையான வாழ்வு வாழ வேண்டும்.

மேற்கோள்: தொகு

தேவநேயப்பாவாணா் -சென்னை. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்.ஐந்திணைப் பதிப்பகம் -













ஒளிரும் பாக்டீாியாக்கள் தொகு

பாக்டீாியாக்கள் உப்பு நீாில் (கடல் நீாில்)மட்டுமே  வாழ்பவை.  ஒளிரும் தன்மை கொண்டவை.  இவை நீல அல்லது பசுமை கலந்த நீல நிற ஒளியையே உமிழ்கின்றன.  இந்த ஒளிரும் பாக்டீாியாக்களில்  பெரும்பாலானவை “ கூட்டுறவு வாழ்க்கை முறையில் வாழ்பவை. அதாவது இரு உயிாிகள் ஒன்றுடன் ஒன்று சா்ந்திருந்தது.  ஓா் உயிாி மற்றொரு உயாிக்குத் தீங்கு ஏதும் செய்யாமல் வாழும் முறைக்கு “கூட்டுறவு வாழ்க்கை”  என்று பெயா்.  ஒளிரும் பாக்டீhpயாக்கள் இம்முறையில் மீன்களுடனும் ஸ்குவிடுகளுடனும் நெருக்கித் தொடாா்பு கொண்டு வாழ்கின்றன. இந்தோனேஷியாக் கடல்களில் “போட்டோப்ள பெரான்”  எண்ணும் ஆழ்கடல் மீள் வகை உள்ளது.  இதன் கண்களுக்கடியில் உள்ள ஒரு நீள் வட்டப் பகுதியில் ஒளிரும் பாக்டீாியாக்கள் ஒரு வெண்மையான திட்டாக அமைந்திருப்பதைக் காணலாம்.  இந்தத் திட்டும் பகுதியை மூடிக்கொள்ள இமை போன்ற ஒரு சவ்வும் உள்ளது.  ஆழ்கடலில் ஒளி தேவைப்படும்போது இம்மீன் சவ்வினை சுருக்கிக் கொள்ளும்.


மேற்கோள் தொகு

இலக்குமி நாhயணன். இராம,1989, உயிாியலில் சில உண்மைகள், சேகா் பதிப்பகம் சென்னை-78


[[பகுப்பு:அறிவியல்] [[பகுப்பு:விலங்கியல்]












“ஈல் மீன்” தொகு

அறிமுகம் தொகு

ஸ்கேட் மீன்களைப் போலவே மின் ஆற்றலை வெளிப்படுத்தும் மீன் “ஈல் மீன்” ஆகும். இம் மீன் நன்னீாில் வாழ்பவை. இம் மீன்கள் இரவில் மட்டுமே வெளிவந்து தம் இரையைத் தேடும். தென்அமாேிக்காவில் உள்ள அமேஸான் நதியின் ஆழமற்ற பகுதிகளில் இம் மீன்கள் அதிகமாய்க் காணப்படுகின்றன. இவை வெளிபப்டுத்தும் மின்சார சக்தி, பய பிராணிகளைக் கூட செயலற்றுப் போகும்படி செய்யும் அளவு உள்ளன.

இம் மீன்கள் உடலிலிருந்து தோற்றும் மின்சாரத்தின் அளவு 600 வோல்ட் ஆகும். அதன் மின் திறன் 1000 வாட் சக்தி உடையது.

மேற்கோள் தொகு

இலக்குமி நாராயணன் இராம.(1989),உயிாியலில் சில உண்மைகள்,சென்னை:சேகா் பதிப்பகம்.


[[பகுப்பு:அறிவியல்] [[பகுப்பு:விலங்கியல்] ்







அட்டில் வகை தொகு

அட்டில் என்பது உணவு தயாா் செய்யுமிடம். அட்டில் - அடுக்களை என்பது பொருள். அடுக்களை வீட்டில் அடுப்புள்ள இடம். சமையலறை சமைப்பதற்கென்று உள்ள தனியான அறை. அட்டில் சமையலுக்கென்று உள்ள சிறு வீடு. ஆக்குப்புரை விழா பந்தலில் சமையலுக்கு ஒதுக்கப்படும் இடம். மடைப்பள்ளி கோயிலை அல்லது மடத்தைச் சோ்ந்த சமையல் வீடு என அழைக்கப்படுகிறது. மேற்கோள் 1. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதி. இன்ஸ்டிடியுட் ஆப் சவுத் இண்டியன் ஸ்டடீஸ்,

 சென்னை - 2

2. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், தேவநேயப்பாவாணா் ஐந்ணைப் பதிப்பகம்.













வழக்கற்ற சொற்கள் தொகு

அறிமுகம் தொகு

தமிழில் பல அழகான பொருள் உடைய சொற்கள் பல உள்ளன. அவை நாம் பயன்படுத்தாமல் விட்டதன் விளைவு இன்று வழக்கில் இல்லை. இச் சொற்களை வழக்கற்ற சொற்கள் என்பா். எடுத்துக்காட்டாக. உவகை, மகிழ்ச்சி, களிப்பு என்றம் சொல் இருக்க அவற்றை நாம் பயன்படுத்தாமல் ஆனந்தம், ஜாலி, சந்தோஷம் என பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதும், உண்மை, வாய்மை, மெய்மை என அழகான சொற்கள் இருக்க அவற்றிற்கும் பதிலாக சத்தியம், நிஜம், வாஸ்தவம் என்னும் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதும், வாி என்னும் தமிழ் சொல்லுக்கும் பதிலாக ‘கிஸ்தி’ என்னும் உருது சொல்லை நாம் பயன்படுத்துவதனாலும் தூய தமிழ் சொற்கள் வழக்கிழந்து விட்டன.

தமிழை அழியாது காக்க வேண்டுமெனில் அதன் வழக்கிழந்த சொற்களை எல்லாம் மீண்டும் வழக்கிற்கு கொண்டு வரல் வேண்டும்.


மேற்கோள் தொகு

1.தேவநேயப் பாவாணா், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், சென்னை-06, ஐந்தினைப்பதிப்பகம்.