பயனர்:Tnse punniyamurthy tvr/மணல்தொட்டி

திருவாரூர் - தியாகராஜர்

முசுகுந்த சக்கரவர்த்தியால் தேவேந்திரனிடமிருந்து பெற்று வரப்பட்ட ஏழு லிங்கத் தலங்களுள் ( சப்தவிடங்கத் தலங்கள் ) வீதி விடங்கள் எனும் மரகதலிங்கம் உள்ள தலம். திருக்கோயிலின் தீர்த்தமான கமலாலயம் சுமார் 19 ஏக்கர் பரப்பளவும் பல்வேறு ஸ்நானக் கட்டங்கள் கொண்டும் விளங்குகிறது. குளத்தின் நடுவே நாகநாதர் ஆலயம் உள்ளது. இத்தல ஈசன் சோமாஸ்கந்த வடிவில் தியாகராஜனாக அருள்கிறார். தியாகராஜப் பெருமானின் உற்சவ மூர்த்தத்தின் முகத்தை மட்டுமே பக்தர்கள் தினமும் தரிசனம் செய்யமுடியும். மார்கழி மாதம் திருவாதிரை அன்று அவரின் இடதுபாத தரிசனமும், பங்குனி உத்திரத்தன்று அவரின் வலதுபாத தரிசனமும் கிடைக்கும்.

பங்குனி உத்திரத்தன்று இத்தல ஈசன் பக்தர்களுக்காக ஆடும் நடனம், பக்தர் காட்சி என அழைக்கப்படுகிறது. பூஜையின்போது தியாகராஜர் சன்னதியில் பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்படுகிறது. அசைந்தாடிய பெருமாள், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், இருந்தாட்ழ்கர் திருவந்திக்காப்பழ்கர் என பல பெயர்களில் தியாகராஜர் வணங்கப்படுகிறார். ஆண்டில் எட்டு நாட்கள் மட்டுமே இவருக்கு அபிஷேகம்.