டாக்ட்ர். ஆர். எம். அழகப்பா செட்டியார்
தம்முடைய விடாமுயற்சியின் மூலம் தோல்விகளையெல்லாம் வெற்றிகளாய் மாற்றியவர் அழகப்பர்
பிறப்பு:-
வள்ளல் அழகப்பர் காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில்1909- ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் நாள் பிறந்தார். தந்தை இராமநாதன் செட்டியார் தாய் உமையாள் ஆச்சி ஆவர்.
இளமைக்காலம்:-
தமது தொடக்கக்கல்வியை கோட்டையூரிலேயே கற்ற அழகப்பர் காரைக்குடியிலுள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி) தொடர்ந்து கற்றார். அப்போது குடும்பத்துக்கு மலேயாவில்வியாபாரம். தந்தையார் அவரை வியாபாரத்தில் ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் அழகப்பருக்கோ மேற்படிப்பு படிக்க விருப்பம். தந்தையும் அவரை சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். அவர் பி. ஏ. படித்துக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து தந்தையின் மறைவும், தாயின் மறைவும் நிகழ்ந்தன. ==
கல்வியில் ஆர்வம்:-
அழகப்பர் நிலையில் வேறு யார் இருந்தாலும் துயரச் சுமை தாங்காமல் மனமுடைந்து போயிருப்பார்கள். தந்தை நடத்திய தொழிலைக் கவனிக்கும்படி உறவினர்கள் வற்ப்புறுத்தியபோதும் அவர் மேலும் படிப்பதற்காய் இங்கிலர்ந்து சென்றார். சட்டம் பயின்று பாரிஸ்டரானார். அங்கே படிக்கிற காலத்தில் கல்விச் செலவுக்கு அவர் வீட்டுப் பணத்தைப் பயன்படுத்தவில்லை. வங்கியில் பகுதிநேர வேலை பார்த்தார்.
திருமணம்:-
நாடு திரும்பியதும் திருச்ச்சூருக்கருகில் அழகப்பா நூற்பாலை என்ற பெயரில் ஓர் ஆலையை நிறுவினார். அந்தக்கால கட்டத்தில் அவருக்குத் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு உமையாள் என்று பெயரிட்டு வளர்த்தனர். சில நாளில் மனைவி காலமானார்.
இறப்பு:-
1957-ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் காலமானார். அவர் உருவாக்கிய கல்லூரி இன்று பல்க்கலைக்கழகமாய்விரிவு பெற்றது.