பயனர்:Tnse vijaya plr/மணல்தொட்டி

கோ. வில்வபதி சேயாறு வட்ட திருவத்திபுரத்தில் கோவிந்தமுதலியார் ,அபரஞ்சிஅம்மாள் இணையருக்கு 12-6-1921 ல் மகனகத் தோன்றியவர் கோ.வில்வபதி ஆவார்.ஐயாறு அரசர் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்று பெங்களூரு தூய அலூசியஸ் உயர்நிலைப்பள்ளியில் 1940 முதல் 1942 வரை தமிழாசிரியராகப் பணியாற்றிப் பிறகு சென்னை இந்து தியலாஜிக்கல் மேனிலைப்பள்ளியில் 1943 முதல் 1978 வரை பணியாற்றியுள்ளார்.1974ல் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

படைப்புகள்

தொகு
  • காவிரி

மறைந்த மாணிக்கங்கள் சங்ககாலத் தமிழர் பண்பாடு

  • இலக்கிய வாழ்வு
  • சிலையாகி நிற்கும் செம்மல்கள்
  • மந்திரக் குளிகை
  • கௌதம புத்தர் நாடகம்

திருவெங்கைக்கோவை

தொகு

சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறனுள் கோவை இலக்கியமும் ஒன்று.மாணிக்க வாசகரின் திருக்கோவையார் இராசாக்கோவை என அழைக்கப்படுவது போன்று மந்திரிக்கோவை என அழைக்கப்படும் பெருமைக்குரியது திருவெங்கைக்கோவையாகும்.இந்நூலை இயற்றியவர் கற்பனைக்களஞ்சியம் எனப் போற்றப்பெரும் துறைமங்கலம் சிவப்பிரகாசர் ஆவார்.

நூலமைப்பு

தொகு
இந்நூல் களவியல்,வரைவியல்,கற்பியல் என மூன்று இயல்களையும் 425 செய்யுள்களையும் கொண்டுள்ளது.களவியல் பதினேழு தலைப்புகளில் 283 பாடல்களையும் வரைவியல் 8 தலைப்புகளில் 185 பாடல்களையும் கற்பியல்7  தலைப்புகளில் 57 பாடல்களையும் பெற்று இலங்குகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_vijaya_plr/மணல்தொட்டி&oldid=2313553" இலிருந்து மீள்விக்கப்பட்டது