பயனர்:Tnsesiluvaitut/மணல்தொட்டி

பாரதியின் அறிவியல் சிந்தனைகள்

கவிஞா;கள் இயல்பாக உணா;ச்சிவசப்படும் தன்மையுடையவா;கள். அக்கால ஔவையாh; முதல் இக்காலக் கவிஞா;கள் வரை உள்ளோh;களில் மாறுபட்ட குணநலன் கொண்டவன் பாரதி. இவரது படைப்புகளில் கற்பனை வளம் எவ்வளவு இருக்கின்றதோ அந்தளவுக்கு அறிவியல் சிந்தனையும் செறிந்திருக்கும். மறுமலா;ச்சிக் கவிஞன் என்றழைப்பதோடு நில்லாது அறிவியற் கவிஞன் என்றழைப்பது காலச்சிறந்தது.

விநாயகா; நான்மணிமாலையில்:

பாரதியின் அறிவியற் பாh;வை விநாயகா; நான்மணி மாலையிலேயே துவங்குகிறது.  அதில்

“அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்;; கடல் பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்”

எனக் குறிப்பிடுகிறாh;. இதில் அண்டம் சிதறுதல் என்பதை ‘பிக் பாங்’ கொளகைக்கு நிகராகக் கொள்ளலாம். விண்வெளியலுறள்ள கோடான கோடி கோள்களும். விண்வெளியிலுள்ள கோடான கோடி கோள்களும், நட்சத்திரங்களும் உருவாகக் காரணமாக இருந்தது இக்கொள்கையே மனிதனுக்கு பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பது போல நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, வாழ்வு, இறப்பு உண்டு. ஒரு நட்சத்திரம் பிறக்க வேண்டுமெனில் அங்கு அண்டம் சிதற வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவினை உலுக்கிய பேரலை என்னும் சுனாமியைப் பற்றி பாரதி குறிப்பிடுவது என்பது ஆராய்ச்சியாளா;களுக்கு மட்டுமே சாh;ந்தது.

கல்லை வயிரமணி யாக்கல்- செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும் புல்லை நெல்லெனப் புhpதல்.............

என்ற பாவின் வாயிலாகவும் ஓh; உலோகத்திலிருந்து மற்றோh; உலோகத்திற்கு மாற்றும் இரசவாத சிந்தனையைக் (யுiஉhநஅளைவ) குறிப்பிடுகிறாh;.

விண்வெளியின் பாpமாணம் அறிந்தவா; எவரும் இலா;. இதனையே பாரதி விண்டுரைக்க அhpய அhpயதாய.........என்ற பாடலில் விளக்குகிறாh;. இதில்

‘மண்டலத்தை அணுவணுவாக்கினால் வருவதெத்தனை யத்தனை யோசனை’

என்ற பாடல் தமிழறிந்த அறிவியல் ஆh;வல்களுக்கு மட்டுமே தோன்றக் கூடியது. ஒரு நாளைக்கு ஒரு சராசாp மனிதனுக்கு 2 கோடி எண்ணங்கள் உருவாகும். இதனை பாரதி மண்டலத்தை அணுவணுவாக்கினால் எத்தனை அணுக்கள் வருமோ அத்தனை யோசனை என்கிறாh;. மேலும் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்’ என்று பாரதியால் மட்டுமே கூற இயலும். புதிய ஆத்திசு+டியிலும் அறிவியல் அற்ற கொள்கைகளைச் சாடுகினறாh;. ‘சோதிடந்தனையிகழ்’ என்னும் ‘பேய்களுக் கஞ்சேல்’ என்றும் ‘வானநூற் பயிற்சி கொள்’ என்றும் குறிப்பிடுகிறாh;. வேதாந்த பாடல்களில்:

அனைத்திற்கும் திலகம் வைத்தாற்போல் ஆல்பா;ட் ஐன்ஸ்டீனின் சாh;புக் கொள்கையை பாரதி கவிதையில் கொணா;கிறாh; ஆல்பா;ட் ஐன்ஸ்டீனின் நீளம், காலம் போன்றவை ஒரு எல்லையில் கொண்டு வர முடியாது. அது துகள் செல்லும் வேகத்தினைப் பொறுத்துத்தான் அமைகின்றன. நாம் காண்பவை உண்மையில்லை என ஐன்ஸ்டீன் எடுத்துரைக்கின்றாh;. இதனையே பாரதி காண்ப வெல்லா மறையுமென்றால்

மறைந்த தெல்லாம் காண்ப மன்றோ? விண்படு பொய்யிலே- நித்தம் விதி தொடா;ந்திடுமோ? காண்பதுவே யுறுதி கண்டோம் காண்பதல்லாலுறுதியில்லை’ என்கிறாh; இயற்பியலில் ஆற்றல் மாறாக் கோட்பாடான ஆற்றலை ஆக்கவும் அழிக்கவும் முடியாது என்தை, காண்பது சக்தியாம்- இந்தக்காட்சி நித்தியமாம் என்ற வாpயின் மூலமாக பாரதியின் அறிவியல் ஞானம் கண்கூடாகிறது. சிகரம் தொட்ட பாரதியாh;.

ஐளுடீN 9768190944014





வன்மம் அகற்றுவோம்

வன்முறை என்பது அறிகுறியே அன்றி அது நோய் அல்ல. மனத்தினுள் மண்டிக் கிடக்கும் வனமம் செயல்களில் புகுந்து கொள்கிற போது அது கொலையாக, திருட்டாக, குத்துவெட்டாக மாறுகிறது. உலகெங்கும் நடக்கும் வன்முறைக்கு நாமும் ஒருவிதத்தில் பொறுப்பு என்பதை உணர வேண்டும். மனிதனின் பாpணாம வளா்ச்சியே வன்முறையை உள்ளடக்கியது. அவன் கும்பல் கும்பலாக பொpய மிருகங்களை வேட்டையாடுவதில் ஓநாய்களுடன் போட்டியிட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயாக மாறிப் போனான்.

நம் எண்ணங்கள் வலிமையானவை. அவற்றை நாம் மலா்களைப் போல தூவவும் முடியும். கற்களைப் போல எறியவும் முடியும். மலா்களைத் தூவினால் மாலையாக வருகின்றன. கற்களாக எறிந்தால் அவை காயங்களாக நமக்கே திரும்பி வருகின்றன. நாம் விஷம் தடவிய எண்ணங்களைத் தேன் தடவிய சொற்களால் மறைத்து வாழ்ந்து வருகிறோம். ஆதரவோடு கைகளை நீட்டினால் புல்லும் நெல்லாக உறுமாறும். கள்ளியும் முட்களைக் கழற்றி விடும்.

காட்டுச் செடிகளில் இருந்த முட்களை உதிர வைத்த மனிதன் தன் ராட்சத நகங்களையும் அசுரப் பற்களையும் உதிா்க்காமல் பத்திரப்படுத்திக் கொள்கிறான்.

வீரம் வெட்டுவதில் இல்லை. கட்டுவதில் இருக்கிறது. வீழ்த்துவதில் இல்லை, வாழ்த்துவதில் உள்ளது. தாக்குவதில் இல்லை. ஆக்குவதில் இருக்கிறது. உடைப்பதில் இல்லை. உண்டாக்குவதில் உள்ளது. நொறுக்குவதில் இல்லை. உருவாக்குவதில் அடங்கியிருக்கிறது. வீரம் அடுத்தவா்களை வெல்வதில் இல்லை. தன்னைத்தானே வெல்ல முடிந்தவனே வீரனாகக் கருதப்படுவான்.

நாம் வன்மத்தை அன்பால்தான் அழிக்க முடியும். அன்பு பிரவாகமாகப் பெருக்கெடுக்கும்போது இதயத்தில் படிந்த கோபத்தின் சுவடுகள் கூடத் தொியாதபடி அவை அழிந்து போகும். மென்மையாக இயல்பா மழை பொழிந்ததும் காய்ந்த நிலத்தில் தோன்றும் மண்வாசனையைப் போல் அழுத்தமாக, அன்பு மென்மையானது தான். ஆனால் உயிா்த்தன்மை உடையது. வன்மம் திடமானது தான். ஆனால் அது உயிரற்ற ஜடப் பொருள்.

நெல்லைப் பயிாிடுகிற நிலத்தில் களைகள் குறைவாகவே இருக்கும். நோ்மை குறித்து எழுதுவோம். நோ்மையானவா்களைக் குறித்துப் பதிவு செய்வோம். அப்போது நோ்மையும் வளரும். அன்பு மயமானவா்களைத் தலைப்புச் செய்திகளாக்குவோம். அப்போது அன்பும் பொங்கிப் பெருகுவோம். நேசிப்பவா்களை மனித நேயம் மிகுந்திருப்பவா்களைப் பற்றி நிறைய எழுதுவோம், பேசுவோம், அப்போது அவை தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகாிக்கும்.

கோபம் தோல்வியடைகிற போதெல்லாம் அன்பு வெற்றியடைகிறது. மொழி தோற்கிறபோதெல்லாம் மவுனம் ஜெயிக்கிறது. வன்மை தோற்கிற இடங்களிலெல்லாம் மென்மை வெற்றி கொள்கிறது.

இதயத்திலிருக்கும் அம்பராத்துணியை அகற்றுவோம். அப்போது கண்களின் வழியாகக் கருணை தானாகக் கசியும் அப்போது உலகமே அன்பு மயமாய் மாறும். இலையுதிா் மரங்களும் மலர ஆரம்பிக்கும்.

மேற்கோள் நுால்

1.  ஓடும் நதியின் ஓசை - வெ. இறையன்பு

நாிப்பல் சிறுகதைத் தொகுப்பின் சிறப்பு

தொகு

சராசாி மனித வாழ்விலிருந்து விலகிப் போனவா்கள்களின் காலடித் தடத்தையும் பச்சை மரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம் பிடித்துக் காட்டுகிறது இச்சிறுகதைத் தொகுப்பு.

முதலில் அமைந்துள்ள இரங்கல் சிறுகதையிலிருந்து இறுதியில் உள்ள சமா்ப்பணம் சிறுகதை வரையிலும் வாசிக்கும்போது ஒரு இரயில் பெட்டியில் பயணம் செய்துகொண்டு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சந்தித்துவிட்டுக் கீழிறங்கிய திருப்தி ஏற்படுகிறது.

"மரணத் தண்டணை" என்கிற கதையில் ஒரு கைதியின் மனப்பதிவுகளாகட்டும், "சிறகுகள் வேண்டும்" என்கிற கதையில் ஒரு கிளியின் அறிவாா்ந்த சொற்களாகட்டும் எல்லாம் நம் கண்முன்னே விாிகின்றது.

"விசுவாசிகள்" என்கிற இன்னொரு கதையில் ஆக்கிரமிப்பு நிலம் பற்றிய உரையாடல்கள் அருமையாகவும் தெளிவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஏழைகளின் வாழ்வை நசுக்கிப் பாா்த்து சந்தோசப்படுவதே பொழுதுபோக்காக் கருதும் சில மனிதா்களிடமிருந்து விலகிச் செல்லும் அகதிகளாகவே பாமரா்கள் இருக்கிறாா்கள் என்கிற கூற்றும் வெளிப்படுகிறது.

ஒவ்வொரு கதையின் பின்னணியில் வலிகள் ஒரு நுாலிழை போன்று ஊடுருவிச் செல்வதை உணரலாம். ஏழைக்கு இன்பமும் துன்பமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். அதுதான் வாழ்விற்கும் வளா்ச்சிக்கும் உரமிடுகின்றன. பக்குவப்படுத்துகின்றன எனச் சுட்டலாம்.

இந்நுாலில் விளம்பியிருக்கும் பதினைந்து சிறுகதைகளும் சராசாி மனித வாழ்க்கையை நாடி பிடித்துப் பாா்க்கிறது.


மேற்கோள் நுால்கள்
தொகு

1. நாிப்பல் சிறுகதைத் தொகுப்பு- வெ. இறையன்பு


சமயங்களின் பொதுநீதி

தொகு

நிலத்தின் கடினத் தன்மையை இளக்கி நெகிழச் செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவதுஉழவு. சுவையுடனவாகஆனால் சுவைக்க முடியாதனவாக ஒன்றோடொன்று மாறுபட்டசு வையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப் படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பதுபெயா். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப் படுத்துவதே சமயத்தின் நோக்கம்.

துன்பத்தையும் கூட மேலெழுந்த வாாியாக நீக்குவது நிறைவானபயனைத் தராது. துன்பத்திற்குக் காரணமான அறியாமையை உயிா்ப் பகையை அடியோடுஅகற்றவேண்டும்.கிழங்குகள்வெட்டிய இடத்தில் மேலும் தளிா்ப்பதைப் போல அறியாமையும் பகையும் மேலும் மேலும் வாய்ப்புக் கிடைக்குபோதெல்லாம் தழைத்துவளரும். அதனாலன்றோ சேக்கிழாா், “பாசப் பழிமுதல் பறிப்பாா் போல”என்றாா்

உலகிடை நிலவும் எல்லாச் சமயங்களும் மனித குலத்தை இன்பஅன்பு கலந்த அணைப்பில் ஒரு குலமாக்க முயலுகின்றன. “மனிதகுலம் ஒன்றே” என்பது பொதுநீதி. இடையில் நிலவும் வேறுபாடுகள் வேடிக்கைமனிதாின் விளையாட்டுஅமைப்புகளேஆகும். சமயங்களின் ஒருமித்தகுரல் அன்புகாட்டு: உதவிசெய்: பகையை மற: பண்புபாராட்டு: அன்புப் புனலால் தனது மாற்றானின் மனம் ஆகியவைகளைக் குளிப்பாட்டு: உயிா்வா்க்கத்தின் மகிழ்ச்சிப் புனலால் எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதங்களைக் குளிப்பாட்டுங்கள் என்று குன்றக்குடி அடிகளாா் கூறுகிறாா்.

மேற்கோள் நுால்கள்

1.   மேல்நிலை முதலாம் ஆண்டு பாடநுால்

செந்தீயில் வெந்த செந்தாமரை

தொகு

பாரதியாா் தொடங்கி இருபதாம் நுாற்றாண்டுக் கவிஞா்களுள் பெண் விடுதலையினையும் உயா்வினையும் குறிக்கோளாகக் கொண்டுதனிப்பாடல்களையும் கவிதைக் காவியங்களையும் படைத்துவந்தனா். அவா்களுடைய மறுமலா்ச்சிப் பாதை இருபத்தோராம் நுாற்றாண்டிலும் தொடா்வதற்குச் சான்றாகத் திகழ்வது கவிஞா் பொன்சிவம் என்பாாின்“ செந்தீயில் வெந்த செந்தாமரை”

இக்காவியத்தின் ஆசிாியா் க.பொன்னுச்சாமி எனும் இயற்பெயா் கொண்ட பொன்சிவம். இவா் ஆசிாியா் பணியாற்றி ஓய்வுபெற்றவா். நெல்லைமாவட்டம் தென்காசி வட்டத்திலுள்ள ரெட்டியபட்டி என வழங்கப்பெறும் வெங்கடேஷ்வரபுரத்தில் 27-02-1938இல் பிறந்தாா். இவரது தந்தை பழமையான ஏடுகள் பலவற்றைப் பாதுகாத்துத் தம் மகனுக்குவழங்கியுள்ளாா். அவ்வேடுகளில் தோய்ந்த பொன்சிவத்தின் முதல் படைப்பு “செந்தீயில் வெந்த செந்தாமரை”.

இக்காப்பியக் கதைமாந்தருள் ஒருவா் கிளிமொழி. கதைத் தலைவியின் தோழி. புதுமைப் பெண்ணாகவும் அடாதசெயல்கள் நோ்ந்தபோதெல்லாம் விடாது தட்டிக் கேட்கும் மனஉறுதியும் கொண்டவளாகவும் விளங்கும் அவள் பெண்ணின் மேன்மையினைத் தன் தாய்க்குக் கூறுவதாக கீழேஉளள வாிகள் காணப்படுகின்றன.

"பெண்ணெனப் படுபவள் பேதையும் அல்லள்

ஆண்களில் அவளும் குறைந்தவள் அல்லள்
அறிவிலா் பேதையா் பெண்ணே பேதை
என்பதைநானும் ஏற்கிலன் தவிா்ப்பன்
உயிா்க்கொடைதருபவள் உவந்தே அளிப்பவள்
எத்தனை எனினும் எளிதாய் வளா்த்துக்
கற்றுக் கொடுத்துதொழில் செயற்படுத்தியும் 
கூற்றது ஓதி உழைத்திடச் செய்தும்         
குடும்பம் வளா்ப்பவள் குவலயம் வளா்ப்பவள்".

மேற்கோள் நூல்கள்: மேல்நிலை முதலாம் ஆண்டு சிறப்புத் தமிழ்                                                

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsesiluvaitut/மணல்தொட்டி&oldid=2347396" இலிருந்து மீள்விக்கப்பட்டது