பயனர்:VASTU ENGINEER/மணல்தொட்டி
அறிவோம் வாஸ்து சாஸ்திரம்...
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் இந்த பத்திரிக்கை வாயிலாக உங்களை எல்லாம் தொடர்பு கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி...
இந்த இயற்கை கொடையான பஞ்சபூதங்கள் அருளால் எல்லோரும் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்...
தாத்தா சொத்து பேரனுக்கு என்று சாஸ்திரம் கூறுகிறது தாத்தாவுடைய மரபு பேரனுக்கு உண்டு என்று அறிவியல் கூறுகிறது... நம்முடைய தாத்தாவோ அல்லது நம்முடைய தந்தையோ அல்லது நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு அடையாளம் அவருடைய கட்டமைப்புதான்...
உதாரணத்திற்கு என்னுடைய தாத்தா அல்லது அப்பா, இந்த மாதிரி ஒரு கோட்டையை அல்லது ஒரு சமஸ்தானத்தை அல்லது ஒரு அழகான குடியிருப்பை கட்டி ராஜா போல வாழ்வாங்கு வாழ்ந்தார் என்று நம்மை சுற்றி பல பேர் நம்மிடம் பேச கேட்டிருப்போம்.....
இங்கு மனிதகுலத்தின் அடையாளமே அவன் எந்த மாதிரியான கட்டமைப்பில் வாழ்ந்தான் என்பதை பொறுத்துதான் இங்கே தீர்மானிக்கப்படுகிறது.....
அதாவது ஒரு நல்ல கட்டமைப்பு தான் அவர்களை மென்மேலும் வளமானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் பிரபலமானவர்களாகவும் வாழையடி வாழையாக வாழ்வதை என்னுடைய அனுபவத்தில் நீண்ட இடங்களில் நான் பார்த்தும், வியந்தும் இருக்கிறேன்.....
வாஸ்து என்றால் என்ன....
இந்த நிலையான பூமி எட்டு திசையில் ஆனது அதாவது நாம் எந்த திசையில் வீடு கட்டுகிறோம் என்பதை துல்லியமாக திசைகாட்டி உதவியுடன் கண்டறிந்து வருடம் முழுவதும் வாழ்நாள் முழுவதும் சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் தங்கு தடையில்லாமல் கிடைக்கும் படியான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுப்பது தான் அடிப்படையில் வாஸ்து....
இந்த கட்டுரை தொடர் முழுவதுமே வாஸ்து சாஸ்திரத்தை ஒரு அறிவியல் ரீதியான கண்ணோட்டத்தில் அதாவது புள்ளிவிவர ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே எழுத உள்ளோம்...
கடந்த சில நூற்றாண்டுகளாகவே வாஸ்து சாஸ்திரம் என்பது ஆயாதி,குழி கணக்கு, மனையடி, மயன் சாஸ்திரம், இப்படி பல வழக்குகளில் இருந்ததை நாம் பார்க்க முடிகிறது.. அதேபோல் இந்த பரந்த எட்டு திசை உள்ள பூமியில் நான்கு திசைக்கு மட்டுமே வாஸ்து பலன் கூறி வந்ததையும், வாஸ்து பகவான் ஒருவர் கண் விழிப்பதும் தாம்பூலம் தரிப்பது தூங்குவதும் என்ற பல மூட நம்பிக்கையான விஷயங்கள் கடந்த சில நூற்றாண்டுகளாகவே நாம் கடைப்பிடித்து வந்துள்ளோம்....
இந்தக் கட்டுரை முழுவதும் இதுபோன்ற மூட நம்பிக்கையான விஷயங்கள் ஒருபோதும் இடம் பெறாது...
மாறாக என்னுடைய கட்டுரைகளை படிக்கும் உங்களுக்கு அடிப்படையான வாஸ்து சாஸ்திரத்தில் கற்றுக் கொள்ளும் படியாக இருக்கும். மற்றும் உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் ஏறக்குறைய பொருந்தும் படியாகவே இருக்கும்.
வாஸ்து அறிவியல் சார்ந்த மூடநம்பிக்கை சார்ந்ததா...
வாஸ்து சாஸ்திரத்தை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாவிட்டாலும் கூட வாஸ்து சாஸ்திரத்தை புள்ளிவிவர ஆய்வு அறிக்கையின்படி வாஸ்து வேலை செய்வதை உறுதி செய்ய முடியும்.
அதாவது புள்ளிவிவரம் என்பதும் கூட ஒரு அறிவியல் தான்...
இந்த உலகத்தில் உள்ள அனைத்து கண்டுபிடிப்புகளும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது என்று கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...
இருந்தபோதிலும் நாம் ஒரு முயற்சி செய்தோம் அறிவியலாக நிரூபிப்பதற்கு....
ஒரு 10க்கு 10 அளவுள்ள ஒரு அறையை நீண்டகாலம் பூட்டி வைக்கும் பொழுது அந்த அறையில் என்ன எல்லாம் மாற்றம் நிகழும் சற்று கற்பனை செய்து பாருங்கள்...
தூசி படியும், ஒட்டடை, மற்றும் சிலந்தி பூச்சிகள் வாழும், மற்றும் ஒரு வித பூஞ்சை காளான்கள் வளரும் அந்த அறை முழுவதும் ஒருவிதமான நெடியுடன் காணப்படும்....
நான் கூறுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்...
சரி நண்பர்களே அந்த அறைக்குள் அறிவியல் ரீதியாக என்ன மாற்றம் நிகழும்...
நீண்டகாலம் பூட்டிய அந்த அறையில் கார்பன் மோனாக்சைடு இயற்கையாகவே உற்பத்தியாகி அந்த அறை முழுவதும் நிறைந்திருக்கும்.....
ஒருவேளை நாம் கார்பன் மோனாக்சைடு சுவாசிக்க நேர்ந்தால் நம்முடைய நிலை என்னாகும்...
சற்று யோசித்துப் பாருங்கள்... மூளை வேலை செய்யாமல் பேய் பிடித்தது போல் குழம்பி சிந்திக்க முடியாமல் மூச்சு விட முடியாமல் விவரிக்கவே முடியாத மோசமான நிலையில் நாம் தள்ளப்படுவோம்.....
நண்பர்களே குறித்துக்கொள்ளுங்கள் இதை தான் நான் வாஸ்து என்று கூறுகிறேன்... இதை அறிவியல் என்று கூறாமல் பின்பு வேறு எவ்வாறு கூறுவது....
மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் அறிவியல் சார்ந்ததாக உள்ளது எனவே வாஸ்து என்பது மூடநம்பிக்கை சார்ந்தது அல்ல....
வாஸ்து எதைக் கொடுக்கும்....
சமீபகாலங்களாக சோசியல் மீடியாவில் வாஸ்து சாஸ்திரம் கூறும் கருத்துக்கள்..
வாஸ்து சாஸ்திரப்படி அமைந்த வீட்டில் குடியிருந்தால் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்றோம்...
உழைக்காமல் பணம் வருகின்றோம் செல்வந்தர் ஆகிவிடலாம் என்றோம் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது....
சில பல வீட்டு மனைகளுக்கு கோடீஸ்வர மனை குபேரனை என்றெல்லாம் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.....
உண்மையில் வாஸ்து சாஸ்திரம் எதை கொடுக்கும் என்பதை அறியாத அறிவிலிகள் நான் இன்று போல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்...
ஒரு மிகச்சிறந்த வாஸ்து படியான வீட்டை உருவாக்கி கொண்டு எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு இருந்தாள் பணம் வருமா, நிம்மதி கிடைக்குமா சற்று யோசித்து தான் பாருங்களேன்... யோசிக்க முடியாமல் கருத்துகளை திணிப்பது தான் இன்றைய சோசியல் மீடியா....
சரி நண்பர்களே விஷயத்திற்கு வருவோம்...
முதலில் வாஸ்து படியான வீடு பணத்தை ஒருபொழுதும் கொடுக்காது....
இரண்டாவது ஒரு வாஸ்துபடி வீடு ஊர் தலைவர் நாட்டுத் தலைவர் போன்ற பதவிகளை கொடுக்காது.....
மாறாக எதைத்தான் கொடுக்கும்.....
இதோ உங்களுக்கான பதில்....
குடும்பத்தில் ஒற்றுமை
குடும்பத்தில் ஆரோக்கியம்
உங்கள் குடும்பத்தில் நிம்மதி....
நான் மேற்கூறிய இந்த மூன்றைத் தவிர வாஸ்து ஒரு குடும்பத்திற்கு எதையும் ஒருபோதும் கொடுப்பதும் இல்லை கொடுக்கப் போவதுமில்லை.....