பயனர்:Vadhan Subramani/மணல்தொட்டி
பூனம் யாதவ்
பூனம் யாதவ் (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1991) இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். ஏப்ரல் 2013ல் வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 சர்வதேச (WT20I) கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.
பூனம் யாதவ் நவம்பர் 16, 2014 அன்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் அறிமுகமானார். ஏப்ரல் 12, 2013 அன்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். [1]
2013-14 சீசனில் இந்தியா சார்பாக அறிமுகமானாலும், விக்கெட்டுகளை வீழ்த்துபவராகவே பூனம் கருதப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் பிறந்த அவர், நிறைய உள்நாட்டு கிரிக்கெட் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி உள்ளார். 2019ல், இந்தியக் குடியரசுத் தலைவர் இவருக்கு அர்ஜுனா விருதை வழங்கி சிறப்பித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி
பூனம் யாதவ் 1991 ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ரகுவீர் சிங் யாதவ் என்ற ராணுவ அதிகாரி மற்றும் முன்னா தேவி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். பூனமின் குடும்பம் சொந்த கிராமத்திலிருந்து ஆக்ரா நகரத்திற்கு குடிபெயர்ந்தபோது கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரது இளம் வயதில் வளரத் தொடங்கியது.
நான்கு அடியும் 11 அங்குலம் உயரமும் உடைய யாதவ், ஆக்ராவின் ஏக்லவ்யா ஸ்டேடியத்தில் ஒற்றைப் பெண்ணாகப் பயிற்சி பெற்று வந்தார். ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும், அவர் களத்தில் ஒரு அரிய கால் சுழற்பந்து வீசும் வீராங்கனையாகவே விளங்கி வந்தார். [3]
பூனம் தனது குறுகிய உயரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டார். பேட்ஸ்வுமனுக்கு மிக நெருக்கமாகப் பந்து வீசி, விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் அவர் கிரிக்கெட்டில் சேர்வதை விரும்பவில்லை. ஆனால் அவரது உறுதியும் கடின உழைப்பும் பலனளித்தன. விரைவில் அவர் தனது மாநில அணிக்காக விளையாடத் தொடங்கினார்.
தொழில்முறை சாதனைகள்
2013 ஏப்ரல் 05ஆம் தேதி அன்று வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியின்போதே அவர் அறிமுகமானார். ஒருநாள் போட்டிகளில் 2013 ஏப்ரல் 12ல், அவர் அறிமுகமாகும் போதும் அவர் வங்கதேச அணியைதான் எதிர்த்து விளையாட வேண்டியிருந்தது.
நவம்பர் 2014ல், தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார். [4]
பூனம் 2017 உலகக் கோப்பையில் தனது ‘கூக்லி’ உடன் அதிசயங்களைச் செய்தார். அது அவரது டிரேட்மார்க் பாணியாக மாறியது.
2018 ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான விக்கெட் வீழ்த்துபவர்களில் முன்னணியில் இருந்த ஒருவராக இருந்தார். செப்டம்பர் 2018ல், அவர் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக உயர்ந்ததுடன், மூத்த அணி வீரர் ஜூலன் கோஸ்வாமியை விஞ்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் [1].
பிசிசிஐ 2018-19 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் விருதையும் பூனத்திற்கு வழங்கியது.
2019 ஆம் ஆண்டில், கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக இந்திய ஜனாதிபதி அர்ஜுனா விருதை அவருக்கு வழங்கினார். [3]
2020 ஆம் ஆண்டில், டி 20 உலகக் கோப்பையில் பூனமின் செயல்திறன் இந்தியாவை தனது முதல் மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கியமாகக் கருதப்பட்டது. இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், மகளிர் டி 20 உலகக் கோப்பை அணியை அறிவித்தபோது, அதில் இடம்பெற்ற ஒரே இந்தியர் பூனம் யாதவ். (5).
18 போட்டிகளில் 28 விக்கெட்டுகளுடன், பூனம் யாதவ் டி 20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். ஒரு ஓவருக்கு 5.6 ரன்கள் என்ற சிக்கன வீதத்தையும் அவர் பெற்றிருக்கிறார். இது பெண்கள் டி 20 உலகக் கோப்பையில் விக்கெட் எடுப்பவர்களின் ஐ.சி.சி தரவரிசையில் முதல் 10 பந்து வீச்சாளர்களில் 7 ஆவது இடத்தை பூனத்துக்கு பெற்றுத் தந்தது. (6)
மேற்சான்றுகள்
Poonam_Yadav-Wikipedia profile[1]
Poonam Yadav-Profile[2]
टी-20 वर्ल्ड कप: फ़ाइनल में क्या कमाल करेंगी भारत की ये लड़कियां[3]
The inspiring cricket journey of Poonam Yadav[4]
https://www.indiatoday.in/sports/cricket/story/icc-womens-t20-world-cup-team-of-the-tournament-poonam-yadav-shafali-verma-1653925-2020-03-09 (5)
https://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=136;type=trophy (6)
பெட்டி விவரங்கள்
தனிப்பட்ட தகவல்:
பிறந்த தேதி: 24 ஆகஸ்ட் 1991
பிறந்த இடம்: ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
பேட்டிங்: வலது கை
பந்துவீச்சு: வலது கை