பயனர்:Vbmbala/மணல்தொட்டி

கருப்பு ஆற்றல் (Dark energy) என்பது இன்றளவும் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் ஒருவித ஆற்றல். இதைப்பற்றி இன்றும் பல ஆய்வுகள் உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதைப்பற்றி முழுவதும் அறிய முடியாவிடினும் கூட ஓரளவு இதைப்பற்றி தெரிந்து கொண்டார்கள். இதை " இல்லாத சக்தி " ( Nothing Energy ) என்றும் அழைக்கிறார்கள். இதுதான் இந்த அண்டம் முழுவதும் நிறைந்துள்ளது, மேலும் அண்டம் விரிவடைய முக்கிய பங்காற்றுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இது அண்டம் உருவாகக் காரணமான பெருவெடிப்பு ( Big Bang ) நிகழ்வின் போது தோன்றியிருக்கலாம் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்து. இவை அனைத்தையும் திருமூலர் தனது பாடல் வரிகளின் மூலம் நமக்கு விளக்குகிறார்.

பாடல்:

"இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்

கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்

வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்

சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே"

- திருமந்திரம் ( 383)

இல்லது சக்தி - இல்லாத சக்தி ( Nothing Energy )

இடந்தனில் - பெருவெடிப்பு நிகழ்ந்த இடம்தனில்

கல்லொளி - இருட்டை அடக்கி திடமான

வல்லது - பெரியதாக ( அண்டம் பெரியதாக )

வழிசெய்த - காரணமான

சொல்லது சொல்லிடில் - வார்த்தைப் படுத்துவது

தூரதி தூரமே - நிறைய ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vbmbala/மணல்தொட்டி&oldid=2484451" இலிருந்து மீள்விக்கப்பட்டது