பயனர்:Vijayalakshmi123/மணல்தொட்டி
பிட்வைஸ் செயல்முறை
தொகுஎண்முறை கணினி நிரலாக்கத்தில்,பிட்வைஸ் செயல்பாடு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இரும எண்நிலை தன் தனிப்பட்ட துணுக்குகள் நிலையில் இருக்கும் போது செயல்படுகிறது.இது வேகமான பழமையான செயல்முறை.மற்றும் இந்த செயல்முறை செயலியின் துணையை நேரடியாகப் பெறுகிறது.மேலும் இச்செயல்முறை ஒப்பீடுகளுக்கும் கணக்கீடுகளுக்கும் மதிப்புகள் தருவதை கையாளுவதற்க்கு பயன்படுகிறது.
எளிதான குறைந்த செலவு செயலிகளில் பிட்வைஸ் செயல்முறை வகுத்தலைவிட கணிசமான வேகத்துடனும்,பெறுக்கலைவிட பலமுறை வேகத்துடனும்,கூட்டலைவிட குறிப்பிடத்தக்க வேகத்துடனும் செயல்படுகிறது.அதே சமையத்தில் நவீன செயலிகளில் அறிவுறுத்துதல் குழாய் மற்றும் மற்ற கட்டடக்கலை வடிவமைப்புத் தேர்வுகள் காரணமாகவும் கூட்டல் மற்றும் பெருக்கல் பிட்வைஸ் செயல்முறை அளவிற்கு வேகமாக செயல்படுகிறது.ஆனால் பிட்வைஸ் செயல்முறைகள் பொதுவாக குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துகிறது ஏனெனில் அதற்கு குறைந்தபட்ச வளங்களே தேவைப்படும்.
பிட்வைஸ் செயகுறிகள்
தொகுNOT செயல்முறை
தொகுNOT செயல்முறையில் ஒவ்வொரு பிட்டின் மீதும் தறுக்க முறை மறுப்பை செயல்புரியும்.அதாவது எச்செயல்முறை ஒவ்வொரு இரும எண்ணீன் ஒன்றன் நிரப்பை கொடுக்கும்.அதாவது 0 என்ற பிட்கள் 1 ஆகவும் மற்றும் 1 என்ற பிட்கள் 0 ஆகவும் மாற்றத்தை அடைகிறது[1].
NOT 0111 (decimal 7) = 1000 (decimal 8)
AND செயல்முறை
தொகுபிட்வைஸ் AND செயல்முறை தருக்க AND செயல்முறையையே செயல்படுத்துகிறது.அதாவது பிட்வைஸ் AND தனக்கு கொடுத்திருக்கும் இரண்டு பிட்களை பெருக்கினால் கிடைக்கும் விடையை கொடுக்கும்.அதாவது ஒப்பிடும் நிலையில் உள்ள இரண்டு பிட்கள் ஒன்றக இருந்தால் இதன் விளைவாக 1 என விடை கிடைக்கும்,இல்லையெனில் 0 என்ற விடை கிடைக்கும்.
0101 (decimal 5) AND 0011 (decimal 3) = 0001 (decimal 1)
OR செயல்முறை
தொகுபிட்வைஸ் OR என்பது தருக்க அடங்கு OR செயல்முறையையே செயல்படுத்துகிறது.அதாவது முதல் பிட் அல்லது இரண்டாவது பிட் அல்லது இரண்டு பிட்-டுமே 1 ஆக இருந்தால் விடை 1 என கிடைக்கும் இல்லையெனில் விடை 0 என கிடைக்கும்[2]
0010 (decimal 2) OR 1000 (decimal 8) = 1010 (decimal 10)
XOR செயல்முறை
தொகுபிட்வைஸ் XOR என்பது விலக்கிய OR செயல்முரையையே பயன்படுத்துகிறது.அதாவது முதல் பிட் 1 ஆக இருந்தால் அல்லது இரண்டாவது பிட் 1 ஆக இருந்தால் விடை 1 என கிடைக்கும் இல்லையெனில் விடை 0 என கிடைக்கும்.
0101 (decimal 5) XOR 0011 (decimal 3)= 0110 (decimal 6)
கணித சமநிலை
தொகுகருதவும், x > y எதிர்மறை சாராத முழு எண், பிட்வைஸ் ஆபரேட்டர் முலம் பின்வருமாறு எழுதலாம்.
எங்கு b என்பது x இல் பிட்களின் எண்ணிக்கை ஆகும். for all .