பயனர்:Vinayak Murthi Ovia/மணல்தொட்டி

யூனிட்டி உயர்நிலைப்பள்ளி (Unity Secondary School)

வரலாறு

2000 - 2005

     யூனிட்டி உயர்நிலைப்பள்ளி 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திரு என்.சத்தியநாதன் அவர்கள் (Mr N Satianathan) இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். 17 ஆசிரியர்களையும் 364 மாணவர்களையும் கொண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி யூனிட்டி உயர்நிலைப்பள்ளி அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான அமைச்சரும் ஹோங்கா குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு இயோ சியோ தோங் இப்பள்ளியைத் திறந்து வைத்தார்.

மரியாதை (Respect), அர்ப்பணிப்பு (Commitment), நேர்மை (Integrity), இரக்கம் (Compassion), விடாமுயற்சி (Perseverance) போன்ற ஐந்து பண்புகள் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரிடமும் வளர வேண்டும். இவையே யூனிட்டி உயர்நிலைப்பள்ளியின் விழுமியங்களாகும்.

யூனிட்டி உயர்நிலைப்பள்ளியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவை 2004ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதனையொட்டி ஓர் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளி மாணவர்களும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுத் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.

2005 - 2009

2005-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி செல்வி டான் சியூ பியாங் அவர்கள் (Miss Tan Siew Piang) பள்ளியின் இரண்டாவது தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். ‘‘பள்ளி மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுடன் ஒத்துழைத்து கற்க வேண்டும்; ஆற்றொழுக்காகச் செல்ல வேண்டும்; சேவை செய்வதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்’’ இதுவே, யூனிட்டி உயர்நிலைப் பள்ளியின் பார்வை (School Vision) ஆகும். ஆசிரியர்களும் மாணவர்களும் இப்பார்வையில் தெளிவாக இருக்க வேண்டும்: செல்வி டான் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர வேண்டும் என்ற நோக்கில் பள்ளி நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளார்.

யூனிட்டி உயர்நிலைப்பள்ளியின் பத்தாவது ஆண்டு நிறைவு 2009ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. மாணவர்கள் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வதற்கும் ஏற்பபாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு விற்றபோது கிடைத்த பணம், பொருளாதார வசதியின்றி இருக்கும் மாணவர்களுடைய கல்வித் தேவைக்காகச் செலவழிக்கப்பட்டது.

2009 - 2015

2009-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி யூனிட்டி உயர்நிலைப்பள்ளியின் மூன்றாவது தலைமையாசிரியராகத் திரு சான் யிங் யின் (Mr Chan Ying Yin) பொறுப்பேற்றார். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியானது கல்வி, குடியுரிமைக் கல்வி, பண்பு போன்றவற்றின் அடிப்படையில் உள்ளது. யூனிட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ‘‘சுயமாக முன்னேறுதல் (Leading Self), மற்றவருக்கு உதவுதல் (Serving Others), சுயமாகச் செயல்படுதல் (Actualising Self), மற்றவர்களை எழுச்சியூட்டுதல் (Inspiring Others)’’ போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பள்ளி கவனத்திற்கொண்டு செயல்படுகிறது.

     2010-ஆம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு மாணவர்கள் தீப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு ஓடினர். பள்ளியின் பண்பாடு, விளையாட்டுகளின் மூலம் கிடைத்த வெற்றிகள், மாணவர்களின் வலிமை போன்றவை இதன்மூலம் வலுப்படுத்தப்பட்டன.

     யூனிட்டி உயர்நிலைப்பள்ளியின் 15-ஆம் ஆண்டு நிறைவு விழா 2014-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதனையொட்டி ‘‘ஒரே நேரத்தில் அதிகமானோர் விளையாடும் கூடைப்பந்தாட்டம்’’ என்ற நிகழ்ச்சியும் ‘‘மிகப்பெரிய உருவச் சிலை அச்சு’’ என்ற நிகழ்ச்சியும் சிங்கப்பூர்க் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுமாறு நடைபெற்றன. ‘‘யூனிட்டி ஓவியக் கண்காட்சி’’, ரேப்சோடி இசை நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருமதி ஐனி மாரூஃப் யூனிட்டி உயர்நிலைப்பள்ளியின் நான்காவது தலைமையாசிரியராக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 15- ஆம் தேதி பொறுப்பேற்றார். ‘‘மாணவர்கள், திறனை முழுமையாக மேம்படுத்தித் தங்களை உருவாக்கி, சமூகத்திற்குத் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும்’’ எனது பள்ளியின் குறிக்கோளாகத் தொடர்ந்து இருந்துகொண்டு வருகின்றது.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றோர்களின் உதவியால் யூனிட்டி உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து பல துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டு திறன்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களை தன்னம்பிக்கையுள்ள மனிதர்களாகவும் (Confident Person) சுயமாகக் கற்றல் உடையவர்களாகவும் (Self-Directed Learners) அக்கறையுள்ள குடிமக்களாகவும் (Concerned Citizens) துடிப்புமிக்க பங்களிப்பாளர்களாகவும் (Active Contributors) உருவாக்குவதே இப்பள்ளியின் முக்கிய நோக்கமாக உள்ளது. கற்றவற்றை நடைமுறையில் பயன்படுத்தும் திட்டத்தின்மூலம் (Applied Learning Progrmme-ALP) மாணவர்கள், வேளாண்-உயிரியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டு பயனடைகிறார்கள். மேலும், ஸ்டெம்(STEM-Science, Technology, Engineering and Mathematics) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது கற்றுக்கொடுக்கப்படுகிறது. பள்ளியில் மட்டுமல்லாது வெளிப்புற நடவடிக்கையின்மூலம் (Learning for life Programme-LLP) மாணவர்கள் வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

வினாயக் மூர்த்தி ஓவியா (1E1)

யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

Vinayak Murthi Ovia (1E1)

Unity Secondary School

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vinayak_Murthi_Ovia/மணல்தொட்டி&oldid=2251139" இலிருந்து மீள்விக்கப்பட்டது