பயனர்:Vxshnx/மணல்தொட்டி

வார்ப்புரு:Draft topics வார்ப்புரு:AfC topic


சாலை செல்வம்
பிறப்புசூன் 3, 1968 (1968-06-03) (அகவை 55)
விழுப்புரம், இந்தியா
தொழில்கல்வி ஆய்வாளர்
மொழிதமிழ்
தேசியம்இந்தியர்
கல்விசமூக மேம்பாட்டில் டிப்ளமோ · பி.ஏ வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் · மக்கள் தொடர்பாடலில் எம்.ஏ
கல்வி நிலையம்ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி · உஸ்மானியா பல்கலைக்கழகம் · மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
வகைபுனைகதை, கவிதை, சுயசரிதை, சிறுகதை
குடும்பத்தினர்மெய்வழி குணசேகர அனந்தகி - மெய்வழி தவக்குடி அனந்தர் (Parஎன்ட்ச்க்க்)

எழுத்துலக தொடக்கம் தொகு

சுட்டும் விழிச்சுடர் என்னும் பெண்கள் பத்திரிக்கையில் தன் எழுத்தையும் பெண்ணிய செயல்பாடுகளையும் துவங்குகினார்[1]. 1990ல் எழுதத்துவங்கியபொழுது கவிதை, சிறுகதை, பாடல்கள் என எழுதத் துவங்கியவர் பின்னாளில் அதைத் தொடரவில்லை. ப்ரீத்தி, செல்லா போன்ற பெயர்களில் எழுதியவர் தற்பொழுது சாலை செல்வம் என்கிற தன் பெயரிலேயே எழுதி வருகிறார்.


தொழில் தொகு

தற்போது, ​​புதுச்சேரியில் உள்ள அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையில் கல்வி ஆய்வாளர் மற்றும் களப் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார்[2]. (2023) தமிழ்நாடு பாடநூல் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையின் துணைக்குழு உறுப்பினர் - உயர்நிலைக் குழு • செயலாளர் மற்றும் இயக்குனர் கூழாங்கல் கல்வி ஆராய்ச்சி சங்கம், தமிழ்நாடு, மதுரையில் உள்ளது. இந்த அமைப்பு குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது[3]. கூடு மகளிர் வாசகர் மன்றத்தின் நிறுவனர் உறுப்பினர், மதுரை. கருத்தரங்கு, சிறு புத்தகம், திரைப்பட விழா, புகைப்படக் கண்காட்சி, பட்டறைகள் மற்றும் போட்டிகள் மூலம் பெண்ணியப் பார்வை பற்றிய விவாதத்தை கூடு எளிதாக்குகிறது. தமிழ்நாடு குழந்தைகள் இலக்கியம் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர். தமிழ்நாடு மாற்றுக் கல்வி மன்றத்தின் நிறுவனர் உறுப்பினர், முழுமையான கல்வி பற்றிய உரையாடல். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இளந்தளிர் இலக்கியத் திட்டம் என்ற பெயரில் 100 குழந்தைகள் படிக்கும் புத்தகத்தை உருவாக்கும் குழு உறுப்பினர்[4]. புத்தக பூங்கொத்து என பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் 140 வாசிப்பு புத்தகங்களை உருவாக்க சர்வ சிக்ஷா அபியான் ஆதரவளித்தது. தமிழ்நாடு மகளிர் ஒருங்கிணைப்பு அமைப்பின் நிறுவனர் உறுப்பினராக உள்ளார்.


படைப்புகள் தொகு

புனைவு அல்லாத புத்தகங்கள் தொகு

வாழ்வியலாகும் கல்வி: தமிழகத்தில் கல்வியில் கற்றல் கற்பித்தலில் புதுமைகளை மேற்கொள்வதோடு குழந்தைகள் மீது அக்கரையும் சமூக மாற்றத்தையும் மனதில் கொண்டு செயல்படும் மாற்றுப்பள்ளிகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்த புத்தகம்.[5]

கருத்தரிதலின் கட்டமைப்பு: தமிழ் பதிப்பகப் படைப்பு சாமாவால் வெளியிடப்பட்டது

புனைவு புத்தகங்கள் தொகு

மதர் ஸ்டீல்ஸ் பைசைக்கிள் ‍‍‍தாரா பதிப்பகம்

சுயசரிதை புத்தகங்கள் தொகு

புற்றிலிருந்து உயிர்த்தல்: தன் அனுபவம் அல்லது சுய வரலாறு: புற்றிலிருந்து உயிர்த்தல் என்னும் நூல் இவர் எழுதியது. புற்று நோயை நம்பிக்கையுடனும் அறிவியல்பூர்வமாகவும் எதிர்கொண்ட அனுபவத்தை உள்லடக்கியது. மருத்துவர்களுக்கும் பராமறிப்பாளர்களுக்கும் கூட வழிகாட்டுதலாக இருக்கக் கூடியது[6].

குழந்தைகள் புத்தகம் தொகு

அழகான காடு, தோசையம்மா தோசை, அம்மா அப்பா, தலையாட்டிப்பாட்டி ஆகிய நூல்கள் புத்தகப்பூங்கொத்து வரிசையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் வெளியிடப்பட்டு குழந்தைகளின் வாசிப்பிற்காக அரசுப்பள்ளிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. நான் ஒரு ஓவியை, யானையோடு பேசுதல் – ஆகிய மொழிபெயர்ப்பு நூல்கள், Mother steels bicycle, Drawing from the city போன்ற நூல்கள் தாரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன[7]. தோழிகளின் தின்பண்டங்கள் மற்றும் நானும் என் கனவரும் ஆகிய நூல்கள் இயல்வாகை பதிப்பகத்தில் வெளியீடாக வெளிவந்துள்ளது. இரவு, குட்டியானை வீடு திரும்பியது, பறவைகளின் வீடு, யானை ஆகிய சிறார்களுக்கான மொழிபெயர்ப்பு நூல்கள் குட்டி ஆகாயம் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அம்மாவின் சேட்டைகள் இதே பதிப்பகத்தில் வெளிவர உள்ளது. அம்மாவின் சூப், தம்பி தொலைந்து போனான், மனிதன் குரங்கான கதை – ஆகியவை புக் ஃபார் சில்ட்ரன் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டன. சிரட்டை சுப்பம்மா ப்ரதம் பதிப்பகத்தில் வெளிவந்தது. இதே பதிப்பகத்தில் 15க்கு மேற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்லன. மீன் வாங்கலையோ மீன், செங்கல் சூளை, ஆண்கள் பலசாலியா, திருநர், பூப்பூவா பூத்திருக்கு, நான் யார்? ஆகிய நூல்கள் பாட நூல்கழகத்தின் இளந்தளிர் இலக்கியத்திட்டத்தில் வெளியாகியுள்ளன. அப்பாவின் லெட்டர், மணி சுட்ட தோசை… என 40 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்[8].

References தொகு

  1. "சாலை செல்வம் |". Hindu Tamil Thisai.
  2. ""பெண்கள் ஒன்று சேர்ந்தால்" - திருமிகு. சாலை செல்வம் (எழுத்தாளர் / கல்வியாளர்) | Maiam Talks" (in ஆங்கிலம்).
  3. "கல்வி என்றால் என்ன? - கல்வியாளர் சாலை செல்வம் - சுட்டி யானை இதழ் - இணைய நிகழ்வின் ஒளிப்பதிவு" (in ஆங்கிலம்).
  4. "சாலை செல்வம் - குழந்தைகள் செயல்பாட்டாளர் | Salai Selvam | Phoenix Manithargal" (in ஆங்கிலம்).
  5. "வாழ்வியலாகும் கல்வி". www.panuval.com (in ஆங்கிலம்).
  6. "Salai Selvam Books | சாலை செல்வம் நூல்கள்". CommonFolks.
  7. "Books by Saalai selvam". Book Pick.
  8. "சாலை செல்வம் - குழந்தைகள் செயல்பாட்டாளர் | Salai Selvam | Phoenix Manithargal" (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vxshnx/மணல்தொட்டி&oldid=3716136" இலிருந்து மீள்விக்கப்பட்டது