பயனர்:Wikiboopathy/மணல்தொட்டி
கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள்
உயிரினங்கள் பல வகைப்படும். அவற்றுள் ஒரு குறிப்பிட்ட அளவிலான சிற்றினங்கள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. இவற்றை காட்டு நுண்ணோக்கியின் உதவியினால் மட்டுமே காண முடியும். இது போன்ற உயிரினங்களை நுண்ணுயிரிகள் என்கிறோம். இவ்வுயிரிகளை மைக்ரோன், மில்லிமைக்ரான் ஆகிய அலகுகளால் அளக்கலாம்.
நுண்ணுயிரிகளின் வகைகள்
தொகுநுண்ணுயிரிகளைப் பொதுவாக பல வகைகளில் பிரிக்கலாம். அவை வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள், பாசிகள், புரோட்டோசோவா.
வைரஸ்
தொகுவைரஸ் என்ற வார்த்தை இலத்தீன் மொழிச் சொல்லாகும். இதன் பொருள் நஞ்சு என்பதாகும். வைரஸ்கள் குறித்து படிப்பதனை வைராலஜி என்று கூறுகிறோம். இவை உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளை உடையது. வைரஸ்கள் எந்த உயிரியைத் தாக்கி அதனுள் தன்னைப் பெருக்கிக் கொள்கிறதோ அது விருந்தோம்பி செல் என்றழைக்கப்படுகிறது. விருந்தோம்பிச் செல்லிற்கு வெளியே அவை உயிருள்ள பண்புகளை வெளிப்படுத்துவதில்லை.
பாக்டீரியா
தொகுபாக்டீரியா ஒரு செல்லால் ஆன ஒரு நுண்ணுயிரி ஆகும். பாக்டீரியா குறித்த அறிவியல் பாக்டீரியாலஜி என்றழைக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை மைக்ரான் என்ற அலகால் அளக்கலாம். பாக்டீரியாவின் வடிவத்தை வைத்து நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. காக்கஸ்
2. பேசில்லஸ்
3. ஸ்பைரில்லம்
4. விப்ரியா (கால் புள்ளி வடிவம்) இதே போன்று பாக்டீரியாக்களின் இசையிழைகளைக் கொண்டும் வகைப்படுத்த முடியும்.
பூஞ்சை
தொகுபூஞ்சைகளில் பச்சையம் காணப்படுவதில்லை. ஆகவே இவைகள் தாமாக உணவைத் தயாரிக்க இயலாது. பூஞ்சைகள் குறித்த அறிவியல் மைக்காலஜி எனப்படும். ஏனவே இவை சாறுண்ணிகளாகவோ, ஒட்டுண்ணிகளாகவோ தங்களது வாழ்க்கையை நடத்துக்கின்றன. ரொட்டிகளின் மேல் கறுப்பாக நூலிழை போன்ற ஒரு படலம் காணப்படும் அல்லவா இது பூஞ்சைகக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
ஆல்காக்கள் அல்லது பாசிகள்
தொகு1. பாசிகள் பச்சயமுள்ள கீழினத்தாவரம் பச்சையமுள்ளதால் ஒளிச்சேர்க்கை செய்து தாமாகவே உணவு தயாரித்துக் கொள்ளும் ஒற்றை உயிரணுவாலானது. இவ்வணுவே கழிவகற்றல், இனப்பெருக்கம், மூச்சுவிடுதல் முதலிய அனைத்து வேலைகளையும் செய்யும்.
2. பாசிகளை அவற்றில் காணப்படும் வண்ண நிறமிகளின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கலம்.
3. கிளாமிடோமோனாஸ் என்பன எளிய ஒரு செல்லால் ஆன பச்சை நிறப் பாசிகள் ஆகும். இவை உருளை வடிவிலோ, முட்டை வடிவிலோ காணப்படும்.
4. அறிவியல் பைக்காலஜி என்று அழைக்கப்படுகிறது.
புரோட்டோசோவா
தொகுஇது ஒரு செல் உயிரியாகும். உயிரி செயல்கள் அனைத்தையும் செல்லின் உள்ளுறுப்புகள் செய்கின்றன. இவை 2 வகையான வாழ்க்கை முறையைப் பெற்றுள்ளன. அவை தனித்து வாழும் உயிரினங்கள் நன்னீர் மற்றும் உப்பு நீரில் வாழ்கின்றன.
ஒட்டுண்ணியாக வாழ்பவை அக ஒட்டுண்ணியாகவோ, புற ஒட்டுண்ணியாகவோ வாழ்கின்றன. ஆவை நோய்களை கொடுக்கின்றன.
இதுபோன்று உயிரினங்களில் பல உயிரினங்கள் நம் கண்ணுக்குத் தெரியாதவைகள். கண்களுக்கு தெரியாதவைகளாக இருந்தாலும் இது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் பல விதங்களில் நன்மைகளையும், தீமைகளையும் செய்து வருகின்றன. வைரஸ்கள் பெரும்பாலும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அதிக அளவில் தீமைகளே ஏற்படுகின்றன. எனவே மாணவர்களுக்கு அன்றாட வாழ்வில் நுண்ணுயிர்களால் ஏற்படும் பல்வகை நன்மை, தீமைகளை பற்றிய அறிவியல் கருத்துக்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினை வளர்த்திட வேண்டும்.
மேற்காேள்:
- அறிவளிக்கும் அறிவியல் கருத்துக்கள் - பழனிச்சாமி
2. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - எட்டாம் வகுப்பு