பயனர்:YasminNisar/மணல்தொட்டி

                                                     அமுதூட்டும் அங்கம்(மார்பகம்)

பெண்களுக்கேகூட மார்பகம் பற்றிய உண்மையான விவரங்கள் தெரியுமா என்பது தெரியவில்லை. "கற்றது கையளவு" என்பது போல அதுவும் ஒரு உறுப்பு, குழந்தைக்கு பாலுட்டும் உறுப்பு.மேலும் தாய்மையின் அடையாளம் என்றுமட்டும் கருதுகின்றனர். "வீரம் சேர்ப்பது தாயின் முலைபாலட" என்று பாரதியார் பாடியுள்ளார். வீரம் கொடுத்த அந்த உறுப்பை பற்றிய சில உண்மை விவரங்களை இந்த கட்டுரையில் காண்போம்.

இரண்டு மார்பகங்களில் இடது மார்பகம் அளவில் பெரியதாக இருக்கும்.மார்பகம் என்பது, வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரப்பது போலவே மிக நுண்ணிய பகுதிகள் பாலை சுரக்கின்றன. பிறந்த குழைந்தை மார்பில் இருந்து (ஆணோ (ஆ) பெண்ணோ) இரண்டு மூன்று நாட்களுக்கு பால் சுரப்பதை கவனித்திருபோம். அதற்கு காரணம் தாயின் ஹார்மோன்கள் குழந்தையின் உடலில் ஓரிரு நாட்களுக்கு இருப்பதால் பால் சுரப்பை துண்டுகின்றன. பருவமடையும் போது கருப்பைக்குள் ஈஸ்ட்ரோஜன், புரோஸ்ட்ரோஜனை சுரக்க ஆரம்பிக்கின்றன.அவைதாம் மார்பக வளர்ச்சியை தூண்டுகின்றன. மாதவிலக்கு நின்ற பிறகு அவை செயலற்று போகின்றன.

முலை காம்பின் நுனியில் பெரும்பாலும் பதினேழு துளைகள் இருக்கும். இவற்றை நுண்ணோக்கியிலன் மூலம் பார்க்கலாம். மார்பகத்தை கட்டு படுத்துவது ஹார்மோன்கள்.மார்புக்கு திரண்ட வடிவத்தை தருவது கொழுப்பு.மேலும் மார்பு காம்பை சுற்றியுள்ள அடர் நிற பகுதி காம்பில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்க எண்ணெய் பசையை சுரக்கிறது. புரோலாக்டின் பால் ஊரும் தடத்தை துண்டுகிறது.புரோஜெஸ்டிரான் பால் சுரப்பிகளை மேம்படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜன் பாலை சுரக்க்ச்செயகிறது. தாயின் ரெத்தமே பாலாக சுரக்கிறது.ரெத்தலில் உள்ள குளுகோஸ் அமினோஅமிலம்,கொழுப்பு ,என்சைம்கள் எல்லாம் சேர்ந்து பாலாக மாறுகிறது.

கருஉற்றதும் மார்பகம் இருமடங்கு கூடுவதற்கு காரணம் அங்கு ரெத்த ஓட்டம் அதிகமாகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகம் பொலிவை இழந்துவிடாது. மாறாக குழந்தைக்கு பால் கொடுப்பதால் கருப்பையில் ரெத்தநாளம் வெடிப்பதை தடுகிறது. தாயிக்கும் குழந்தைக்கும் பாசபிணைப்பை ஏற்படுத்துகிறது.குழந்தை பிறந்ததும் தினமும் அரை லிட்டர் பால் சுரக்கும். பிறகு ஒண்ணரை லிட்டர் பால் சுரக்குகிறது.

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 10 இலட்சம் பேரில் 20 பேருக்கு மார்பக புற்றுநோய் வருகிறது. மம்மோகிராபி என்பது மார்பகத்திற்கென்றே உள்ள பிரத்யோக எக்ஸ்ரே ஆகும். மார்பு காம்பில் இருந்து திரவம் சுரத்தல், காம்பு முறுக்கி கொள்ளுதல், காம்பு சுருங்குதல் இவை யாவும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.குழந்தைக்கு தாய்ப்பால் உட்டுவோம். தாய் சேய் நலன் காப்போம்.

ஆவணம்: டாக்டர். மு.குமரேசன் அவர்களுடைய "நோய் நாடி நோய்முதல் நாடி" என்ற நுலிலிருந்து தொகுக்க பட்ட கருத்துக்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:YasminNisar/மணல்தொட்டி&oldid=2593956" இலிருந்து மீள்விக்கப்பட்டது